திருப்புகழ் 315 கறை இலங்கும்  (காஞ்சீபுரம்)
Thiruppugazh 315 kaRaiilangkum  (kAnjeepuram)
Thiruppugazh - 315 kaRaiilangkum - kAnjeepuramSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனதனந் தத்தத் தத்தன தத்தம்
     தனதனந் தத்தத் தத்தன தத்தம்
          தனதனந் தத்தத் தத்தன தத்தம் ...... தனதான

......... பாடல் .........

கறையிலங் குக்ரச் சத்தித ரிக்குஞ்
     சரவணன் சித்தத் துக்குளொ ளிக்குங்
          கரவடன் கொற்றக் குக்குட வத்தன் ...... தனிவீரக்

கழலிடும் பத்மக் கட்செவி வெற்பன்
     பழநிமன் கச்சிக் கொற்றவன் மற்றுங்
          கடகவஞ் சிக்குக் கர்த்தனெ னச்செந் ...... தமிழ்பாடிக்

குறையிலன் புற்றுக் குற்றம றுக்கும்
     பொறைகள்நந் தற்பப் புத்தியை விட்டென்
          குணமடங் கக்கெட் டுக்குண மற்றொன் ...... றிலதான

குணமடைந் தெப்பற் றுக்களு மற்றுங்
     குறியொடுஞ் சுத்தப் பத்தரி ருக்குங்
          குருபதஞ் சித்திக் கைக்கருள் சற்றுங் ...... கிடையாதோ

பிறைகரந் தைக்கொத் துப்பணி மத்தந்
     தலையெலும் பப்புக் கொக்கிற கக்கம்
          பிரமனன் றெட்டற் கற்றதி ருக்கொன் ...... றையும்வேணிப்

பிறவுநின் றொக்கத் தொக்கும ணக்குஞ்
     சரணியம் பத்மக் கைக்கொடி முக்கண்
          பெறுகரும் பத்தக் கத்தருள் நற்பங் ...... கயவாவி

திறைகொளுஞ் சித்ரக் குத்துமு லைக்கொம்
     பறியுமந் தத்தைக் கைக்கக மொய்க்குந்
          த்ரிபுரைசெம் பட்டுக் கட்டுநு சுப்பின் ...... திருவான

தெரிவையந் துர்க்கிச் சத்தியெ வர்க்குந்
     தெரிவருஞ் சுத்தப் பச்சைநி றப்பெண்
          சிறுவதொண் டர்க்குச் சித்திய ளிக்கும் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

கறை இலங்கும் உக்ரச் சத்தி தரிக்கும் சரவணன் ... (இரத்தக்)
கறை விளங்கும் உக்கிரம் பொருந்திய வேற்படையை ஏந்தும் சரவண
மூர்த்தி,

சித்தத்துக்குள் ஒளிக்கும் கரவடன் ... மனத்தில் ஒளிந்து
கொண்டிருக்கும் திருடன்,

கொற்றக் குக்குடவத்தன் ... வீரம் வாய்ந்த கோழிக் கொடியை
ஏந்திய கையன்,

தனி வீரக் கழல் இடும் பத்ம ... ஒப்பற்ற வீரக்கழலை அணிந்துள்ள
தாமரை போன்ற திருவடியை உடையவன்,

கண் செவி வெற்பன் ... பாம்பு மலையான் (திருச்செங்கோட்டு
மலையான்),

பழநி மன் கச்சி கொற்றவன் ... பழனி மலையான், காஞ்சீபுரத்து
வீரன்,

மற்றும் கடக வஞ்சிக்கு கர்த்தன் எனச்செம் தமிழ் பாடி ...
பின்னும் கைவளை அணிந்த வள்ளிக் கொடி போன்ற வள்ளிக்குத்
தலைவன் என்று செந்தமிழ்ப் பாக்களைப் பாடி,

குறை இல் அன்புற்று குற்றம் அறுக்கும் ... குறைவு படாத அன்பு
பூண்டு, குற்றங்களை விலக்க வல்ல

பொறைகள் நந்த அற்பப் புத்தியை விட்டு என் ... பொறுமைக்
குணம் சிறந்து மேம்பட, அற்பமான புத்தியை ஒழித்து, என்னுடைய

குணம் அடங்கக் கெட்டு குணம் மற்று ஒன்று இலதான ... தீய
குணங்கள் எல்லாம் கெட்டு, குணம் வேறு ஒன்று இல்லாததான

குணம் அடைந்து எப்பற்றுக்களும் அற்று ... ஒரே நிலையான
சாத்துவிகக் குணம் ஒன்றையே அடைந்து, எல்லாவிதமான
ஆசைகளையும் ஒழித்து,

குறியொடும் சுத்த பத்தர் இருக்கும் ... கடவுள் குறி ஒன்றையே
கருதும் பரிசுத்தமான பக்தர்கள் இருக்கும்

குரு பதம் சித்திக்கைக்கு அருள் சற்றும் கிடையாதோ ...
பெருமை பொருந்தும் ஞான நிலை எனக்குக் கை கூடுவதற்கு
உனது திருவருள் சற்றேனும் கிடைக்காதோ?

பிறை கரந்தை கொத்து பணி மத்தம் ... சந்திரன், திருநீற்றுப்
பச்சைக் கொத்துக்கள், பாம்பு, ஊமத்தம் மலர்,

தலை எலும்பு அப்பு கொக்கின் இறகு அக்கம் ... கபால எலும்பு,
கங்கை நீர், கொக்கின் இறகு, ருத்ராக்ஷ மாலை

பிரமன் அன்று எட்டற்கு அற்ற திரு கொன்றையும் வேணி ...
பிரமன் முன்பு எட்டுதற்கு அரிதாக இருந்த அழகிய கொன்றை இவை
எல்லாம் அணிந்த சடை

பிறவு நின்று ஒக்க தொக்கு ... மற்றவைகளும் விளங்கி ஒன்று
சேர்ந்து கூடி

மணக்கும் சரணி அம் பத்ம கைக் கொடி ... (சிவபெருமான் வீழ்ந்து
வணங்குவதால் அவர் தலையில் உள்ள பொருள்களின்) மணம் வீசும்
திருவடி உடையவள், அழகிய தாமரை போன்ற திருக்கரத்தை உடைய
கொடி போன்றவள்,

முக்கண் பெறு கரும்பு அத் தக்கது அருள் ... மூன்று கண்கள்
கொண்ட கரும்பு போன்றவள், அந்தத் தக்கதான பொருளை
(அடியேனுக்கு) அருள் செய்பவள்,

நல் பங்கய வாவி திறை கொளும் சித்ரக் குத்து முலைக்
கொம்பு
... நல்ல திருக் குளத்துத் தாமரையையும் வென்று அடக்கும்
அழகிய, திரண்டு குவிந்த மார்பைக் கொண்ட கொம்பு போன்றவள்,

அறியும் அம் தத்தை கைக்கு அகம் மொய்க்கும் த்ரிபுரை ...
ஞானமுள்ளவள், அழகிய கிளி கையில் பயின்று இருக்கும் திரிபுரை
(சந்திர கண்டம், சூரிய கண்டம், அக்கினி கண்டம் என்னும் முப்பிரிவை
உடைய சக்கரத்துக்குத் தலைவி),

செம்பட்டுக் கட்டு நுசுப்பின் திருவான தெரிவை ... செம்பட்டு
ஆடை கட்டியிருக்கும் இடையை உடைய, லக்ஷ்மிகரம் பொருந்திய நங்கை,

அம் துர்க்கி சத்தி எவர்க்கும் தெரி அரும் சுத்த பச்சை நிற
பெண் சிறுவ
... அழகிய துர்க்கா தேவி, பராசக்தி, எல்லோருக்கும்
தெரிவதற்கு அரிதான சுத்தமான பச்சை நிறம் கொண்ட பெண் ஆகிய
பார்வதி தேவியின் பிள்ளையே,

தொண்டர்க்கு சித்தி அளிக்கும் பெருமாளே. ... அடியார்களுக்கு
வீடு பேற்றை அளிக்கும் பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.27  pg 2.28  pg 2.29  pg 2.30 
 WIKI_urai Song number: 457 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 315 - kaRai ilangkum (kAnjeepuram)

kaRaiyilang ugra saththidha rikkum
     saravaNan chiththath thukkuLo Likkung
          karavadan kotrak kukkuda vaththan ...... thaniveerak

kazhalidum padhmak katsevi veRpan
     pazhaniman kachchik kotravan matrung
          kataka vanjikkuk karthanena sen ...... thamizhpAdi

kuRaiyilan putruk kutramaRukkum
     poRaigaLnan thaRpap buththiyai vitten
          guNamadang gakket tuguNa matrondr ...... iladhAna

guNamadain dheppatr trukkaLu matrung
     kuRiyodum suddhap baththarirukkum
          gurupadham siddhik kaikkaruL satrung ...... kidaiyAdhO

piRaikaran dhaikkoth thuppaNi maththam
     thalaiyelum bappuk kokkiRa kakkam
          biramanan drettaR katrathiruk kon ...... draiyumvENip

piRavunin drokkath thokku maNakkum
     charaNiyam padhmak kaikkodi mukkaN
          peRukarum baththak kaththAruL naR ...... pangayavAvi

thiRaikoLum chithrak kuththu mulaikkombu
     aRiyumandh dhaththaik kaikkaga moykkun
          thripuraisem pattuk kattunu suppin ...... thiruvAna

therivaiyan dhurgi saththi evarkkun
     therivarum suddhap pachchaini RappeN
          siRuvathoN darkku sidhdhi aLikkum ...... perumALE.

......... Meaning .........

kaRaiyilang ugra saththidha rikkum saravaNan: "He is Lord SaravaNan, holding in His hand the fierce blood-stained weapon, the Spear;

chiththath thukkuLo Likkung karavadan: He is the thief hiding deep inside my heart;

kotrak kukkuda vaththan: He holds a staff with the emblem of the valorous rooster;

thaniveerak kazhalidum padhmak katsevi veRpan: He has two lotus-like hallowed feet, adorned with unique and triumphant anklets; He belongs to the Serpent Hill (ThiruchchengkOdu);

pazhaniman kachchik kotravan: He has an abode at Mount Pazhani; He is the valiant Lord of KAnchipuram;

matrung kataka vanjikkuk karthanena sen thamizhpAdi: and also, He is the consort of vanji (rattan reed) creeper-like VaLLi wearing the bangles" - thus I wish to sing Your glory in chaste Tamil.

kuRaiyil anputru: I wish to love You spotlessly;

kutramaRukkum poRaigaL nantha aRpap buththiyai vittu: I wish to enhance my patience enabling me to eradicate my shortcomings and to get rid of my meanness;

enguNamadang gakkettu: I wish all my vices leave and I reach a state devoid of any characteristic;

guNa matrondr iladhAna guNamadaindhu: I wish to have no other quality than SathvaguNa (tranquility) and to remain unswervingly serene;

eppatr trukkaLu matrum: I wish to get rid of all attachments;

kuRiyodum suddhap baththarirukkum gurupadham siddhik kaikku: I wish to attain the illustrious state of True Knowledge realised by the pure souls whose sole goal is Divine pursuit;

aruL satrung kidaiyAdhO: for getting this wish fulfilled, will You not kindly bless me a little?

piRaikaran dhaikkoth thuppaNi maththam: The crescent moon, bunches of karandhai leaves, a serpent, Umaththam flower,

thalaiyelum bappuk kokkiRa kakkam: skulls, the river Ganga, the feather of a crane, a garland of rudraksha beads,

biramanan drettaR katrathiruk kon draiyumvENi: and the pretty kondRai (Indian laburnum) flower that was beyond the reach of BrahmA (when He tried to have a vision of the head of Lord SivA) - all these adorn His tresses;

piRavunin drokkath thokku maNakkum: and many other things make His Head fragrant with a Divine aroma;

charaNiyam padhmak kaikkodi: the same aroma is experienced from Her feet (as Lord SivA prostrates with His Head falling at Her feet); She has pretty hands like lotus and a creeper-like body;

mukkaN peRukarum baththak kaththAruL: She is like the pretty sugarcane, with three eyes (the Sun, the Moon and Agni); She is the One to graciously preach the most appropriate ManthrA to me;

naR pangayavAvi thiRaikoLum chithrak kuththu mulaikkombu: Her vine-like waist supports two firm, beautiful and bud-like bosoms that conquer the classy lotus in pond;

aRiyumandh dhaththaik kaikkaga moykkun thripurai: She is Omniscient; She is Tripura (presiding over the ChakrA containing the three subdivisions of Chandra KaNdam, Surya KaNdam and Agni KaNdam), holding a pretty parrot in Her Hand;

sem pattuk kattunu suppin thiruvAna therivai: She is the Goddess radiating the beauty of Lakshmi with a dazzling red silk draped around Her tender waist;

yan dhurgi saththi evarkkun therivarum suddhap pachchaini RappeN siRuva: She is the pretty Goddess Durga; She is the Supreme Power (ParAsakthi); She is the emerald green young lass (BAlA) who cannot be easily perceived by one and all; She is PArvathi, and You are Her child, Oh Lord!

thoN darkku sidhdhi aLikkum perumALE.: You liberate Your devotees granting them eternal bliss, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 315 kaRai ilangkum - kAnjeepuram

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]