பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காஞ்சீபுரம்) திருப்புகழ் உரை 17 பெருமை சிறந்த பண் போன்ற மொழியை உடைய கிளி சத்தியத்தில் (உண்மையில்) பித்தன் (மிக்க ஈடுபாடு உடை யவன் - மெய்யனாகிய பித்தன் (சிவனுடைய) ப்ரீதியை (அன்பை) உண் (உட்கொண்ட) கற்பு வாய்ந்த பச்சை ஒளி வீசும் பேரொளியாள், வீணை ஏந்திய கையினள், தாமரை யில் வீற்றிருக்கும் மடமங்கை, கொடிபோல்வாளாகிய பார்வதி தேவியினர் குழந்தையே! பிரமர் உலகத்தைத் தொடும்படி வளர்ந்திருந்த ஒரு மலையை ( கிரவுஞ்சத்தைப் ) பிளந்தெறிந்த வேலாயுதத்தைக் கொண்ட திருக்கரத்தனே! நாளும் சிறப்புடனே (மேம்பாட்டு டனே) கச்சியில் நின்றருளும் பெருமாளே! (என் துயர் போமோ) 456 தினைப்புனத்து மடந்தை (வள்ளிக்குத் தக்கதான புயங்களை உடையவன் , குமரன், என்று ஏத்தி (போற்றிப்) பக்தர்கள் துதிக்கின்ற பொருளை, மனத்திற் கொண்ட கற்பனைகள் முழுமையும் பிறவான பலவற்றையும் சொல்லுகின்ற தொண்ணுாற்றாறு எனப்பட்ட தத்வங் களும் (உண்மைகளும்) ஆக எல்லாவற்றையும் பற்றியும் பற்றற்றும் நிற்கின்ற பெர்துப் பொருளை, சூரியனுக்கு ஒப்பாகத் தக்க பேரொளியைக் கொண்ட அத்தம்தனை (பொருளை, செல்வத்தை) நாள்தோறும் கோபத்துடனே தர்க்கம் பேசிச் சிலுகிக்கொண்டு (சண்டையிட்டு), அறுவகைச் சமயத்தாரும் கைக்குத்துடன் இட்டு (வாதித்து)ம் ஒருவருக்கும் தெரிதற்கு அரிதான சத்யப் பொருளைத் தெரிசனம் செய்து உன் திருவிளையாடல்களைப் பாடி