பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காஞ்சீபுரம்) திருப்புகழ் உரை 19 திசைகள் தோறும் (திசைகளில் உள்ளார் யாவர்க்கும்) கற்பிக்கைக்கு (எடுத்து உபதேசிக்க) * இனி (நீ) சற்று திருவுளம் வைத்துத் (தயை கூர்ந்து) உனது வெட்சிமாலை மணம் விசுவதும் சிறிய சதங்கை அணிந்துள்ளதுமான அழகிய (திருவடித்) தாமரையை எனக்கு என்று அருள் புரிவாய்! கனத்த பெரிய தொப்பைக்கு, எள், பொரி, அப்பம், பழம், கிழங்கு கரும்பு, சர்க்கரை, தேங்காய், கடலை, கற்கண்டு இவைகளை வாரியுண்டு பிட்டுடன் விழுங்கும் திருவாயை உடையவர் சோற்றுத்திரளை உட்கொள்ளும் உயர்ந்த துதிக்கையை உடைய் கற்ப்க விநாயகர், முக்கண்ண்ர் , விளங்கும் நமது வீரம் வாய்ந்த ஒற்றைக்கொம்பர் யானை முகத்தினர், அழகிய பொலிவுள்ள (மத்தகத்துப்) புள்ளிகளை உடைய மல்ையன் னவராம் கணபதியைப் பெற்ற அந்தணி (பார்ப்பனி) (1+8) நவசக்ரபீடத்துப்பெண், கவுரி, செவ்விய அழகிய பட்டாலாய மேலாடை அணிந்துள்ள பெண், பழையவளும் அண்டங்களைப் பெற் றவளுமாய மடப்பெண், தன்னைப் பணிவாருடைய பிறப்பு என்னும் அலைகடலை விலக்கி நிறுத்தும் தேவி, ஏகாம்பரநாதரை அடைந்தவள் (மணந்தவளாம்) பார்வதி (காமாசு.சி) தேவிக்கு அருகே அமைந்து வரம் பெற்று (அல்லது அமைந்து தவப்பயனாய் இறைவரிடம் வரம் பெற்று) கச்சியில் நின்றருளும் பெருமாளே! (சதங்கைப் பத்ம மெனக்கென் றருள்வாயே)

  • தாம் பெற விரும்பிய உபதேசப் பொருளை உலகினர் யாவரும் அறியவேண்டும் என அருணகிரியார்க்கு உள்ள இந்த எண்ணம் அவருட்ைய கருணையைக் காட்டுகின்றது. "கருணைக்கு அருணகிரி" என்பதற்கு இது ஒரு

சான்று.