![]() | ![]() முருகனுக்கான Poems for | ![]() |
|---|
![]() | ![]() | 'ஆடிட்டர்' அருளிசைமணி திரு சுப. மெய்யப்பன் (துபாய், அமீரகம்) 'Auditor' aruLisaimaNi Thiru Suba. Meiyapphan (Dubai, UAE) | English | பட்டியல் தேடல் list search |
| குருவருளும் திருவருளும் நிறைவாய்ப் பெறுவோம் guruvaruLum thiruvaruLum niRaivAip peRuvOm |
அருமைகுரு அருணகிரி அரியதமிழ்த் திருப்புகழை சிரமதனில் மேற்கொண்டு உறவுகளே உறைத்திடுவீர் சிரமமும் சிக்கலும் இருக்கலாமே படிப்பதில் சிரமமே எக்காலும் இருக்காதே படிப்பதால் வரங்கள் பல வேண்டிடினும் வரவு உயர வேண்டிடினும் புறமெங்கும் போகாதீர் விரைவாக உணர்ந்திடுவீர் கரமதனில் கருத்தோடு திருப்புகழை எடுத்திடுவீர் சரவணனை வணங்கிடுவீர் சௌபாக்கியம் பெற்றிடுவீர் கிருபானந்த வாரியொடு வள்ளிமலை சுவாமியையும் குமரகுரு தாசருடன் அருணகிரி நாதரையும் குருவாக ஏற்றியே பரவிநிதம் போற்றிடுவோம் குருவருளும் திருவருளும் நிறைவாகப் பெற்றிடுவோம் உமையவளின் குமரனை உலகைவலம் வந்தவனை அமரர்குலம் காத்திட்ட அறுமுகனை அழகனை உயிர் அதனுக்கும் மேலாம் திருப்புகழால் பாடிடவே - நமை உயரத்தில் வைத்திடுவான் ஓங்குபுகழ் தந்திடுவான். (இப்பாடல் 24-04-2022 அன்று எழுதியது.) |
English transliteration arumaiguru aruNagiri ariyathamizhth thiruppugazhai siramadhanil mErtkoNdu uRavugaLE uRaiththiduveer siramamum sikkalum irukkalAmE padippadhil siramamE ekkAlum irukkAdhE padippadhAl varangkaL pala vENdidinum varavu uyara vENdidinum puRamengkum pOgAdheer viraivAga uNarndhiduveer karamadhanil karuththOdu thiruppugazhai eduththiduveer saravaNanai vaNangkiduveer sowbAkyam petriduveer kirubAnandha vAriyodu vaLLimalai suvAmiyaiyum kumaraguru dhAsarudan aruNagiri nAdharaiyum guruvAga EtriyE paravinidham pOtriduvOm guruvaruLum thiruvaruLum niRaivAgap petriduvOm umaiyavaLin kumaranai ulagaivalam vandhavanai amararkulam kAththitta aRumuganai azhagAnai uyir adhanukkum mElAm thiruppugazhAl pAdidavE - namai uyaraththil vaiththiduvAn Ongkupugazh thandhiduvAn. |
| பட்டியல் List |
| ... https://kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே home contents top |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. PLEASE do not ask me for songs about other deities or for BOOKS - This is NOT a bookshop - sorry. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. © Copyright Kaumaram dot com - 2001-2040 COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED. Please contact me (the webmaster), if you wish to place a link in your website. email: kaumaram@gmail.com Disclaimer: Although necessary efforts have been taken by me (the webmaster), to keep the items in www.kaumaram.com safe from viruses etc., I am NOT responsible for any damage caused by use of and/or downloading of any item from this website or from linked external sites. Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items from the internet for maximum safety and security. மேலே top |