முருகனுக்கான Bajan Songs for |
---|
திருச்செந்தூர் செந்தில்வேல் thiruchchendhUr sendhilvEl |
திரு கண்ணப்பன் ராமமூர்த்தி Thiru Kannapan Ramamoorthy | English in PDF format PDF வடிவத்தில் | பட்டியல் தேடல் list search |
(திருச்செந்தூர் செந்தில்வேல் முருகன் வந்தான் என் நினைவையெல்லாம் அவன் உருவை நினைத்திட செய்தான்) (2) திருச்செந்தூர் செந்தில்வேல் முருகன் வந்தான் ... முருகன் வந்தான் தாமரையில் பூத்து வந்த தங்கமுகமாய் வெண்ணிலவு ஒளி கொடுக்கும் அழகுமுகமாய் (2) காலமகள் பெற்ற மகன் ஆறுமுகமாய் பால் மணமும் பூ மணமும் படிந்தமுகமாய் (திருச்செந்தூர் ... ) திருச்செந்தூர் செந்தில்வேல் முருகன் வந்தான் ... முருகன் வந்தான் தங்கரதம் போல வரும் பிள்ளைமுகமாய் கல்லாத பேதையரை காக்குமுகமாய் (2) கல்பொழுது வேண்டுவோர்க்கு கருணைமுகமாய் கந்தனென கடம்பனென பளிங்குமுகமாய் (திருச்செந்தூர் ... ) திருச்செந்தூர் செந்தில்வேல் முருகன் வந்தான் ... முருகன் வந்தான் ஆதி சக்தி அன்னை மகன் வீரமுகமாய் வேல் வடிவில் கண்ணிரண்டும் விளங்குமுகமாய் (2) வானத்தோடு பூமி தொட்ட வண்ணமுகமாய் அடியவரைக் காத்திடவே சிரித்தமுகமாய் (திருச்செந்தூர் ... ) திருச்செந்தூர் செந்தில்வேல் முருகன் வந்தான் ... முருகன் வந்தான். |
திரு கண்ணப்பன் ராமமூர்த்தி Thiru Kannapan Ramamoorthy பாடகர் பக்கத்திற்கு to singer's page |
பதிவிறக்க 1.12mb to download |
(thiruchchendhUr sendhilvEl murugan vandhAn en ninaivaiyellAm avan uruvai ninaiththida seidhAn) (2) thiruchchendhUr sendhilvEl murugan vandhAn ... murugan vandhAn thAmaraiyil pUththu vandha thangamugamAi veNNilavu oLi kodukkum azhagumugamAi (2) kAlamagaL peRRa magan ARumugamAi pAl maNamum pU maNamum padindhamugamAi (thiruchchendhUr ... ) thiruchchendhUr sendhilvEl murugan vandhAn ... murugan vandhAn thangaradham pOla varum piLLaimugamAi kallAdha pEdhaiyarai kAkkumugamAi (2) kalpozhudhu vENduvOrkku karuNaimugamAi kandhanena kadambanena paLingumugamAi (thiruchchendhUr ... ) thiruchchendhUr sendhilvEl murugan vandhAn ... murugan vandhAn Adhi sakthi annai magan veeramugamAi vEl vadivil kaNNiraNdum viLangumugamAi (2) vAnaththOdu bUmi thotta vaNNamugamAi adiyavaraik kAththidavE siriththamugamAi (thiruchchendhUr ... ) thiruchchendhUr sendhilvEl murugan vandhAn ... murugan vandhAn. |
பட்டியல் PDF வடிவத்தில் List in PDF format |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. [xhtml] .[css] |