![]() | ![]() முருகனுக்கான Bajan Songs for | ![]() |
|---|
| அறுபடை வீட்டினில் aRupadai veettinil |
![]() | ![]() | திரு கண்ணப்பன் ராமமூர்த்தி Thiru Kannapan Ramamoorthy | English in PDF format PDF வடிவத்தில் | பட்டியல் தேடல் list search |
(அறுபடை வீட்டினில் வாழ்கின்றவன் வடிவேல் முருகன் அழகைப் பாடு முருகன் மகிமைகளைத் தொகுத்து தீந்தமிழில் குழைத்து இறை உணர்வில் திளைத்துப் பாடு சரவணப் பொய்கையில் அருள்கின்ற முருகனைத் தாங்கிடும் தாமரையாக்கு என்னைப் படைத்திட்ட முருகனின் திருவடிப் பணிந்தேன் பாக்கள் பாட இசை ஞானம் எனதாக்கு திருச்செந்தூரின் திருக்குமரன் இவன் மூத்தவனோ அந்த யானைமுகன் சிவபாலன் இவன் உமையாளின் மகன் முருகா ... என அழைத்திடவே மெழுகா ... மனம் கரைகிறதே முருகா ... முருகா ... முருகா) குன்றிருக்கும் இடம் குமரன் இருப்பிடம் அங்கு மலைமகளின் மகனாட்சி அந்த சுவாமிமலை ஞானப் பழனிமலை அந்த மருதமலையுமே அதன் சாட்சி தெய்வயானை ஒருபுரம் வள்ளி ஒருபுரம் நடுவில் முருகன் அந்த திருக்காட்சி அதைக் கண்டு மனம் குளிரும் கண்கள் கசிந்துருகும் எங்கும் பக்தி பரவசமாட்சி அறுபடை வீட்டினில் வாழ்கின்றவன் ஓமெனும் பிரணவ மந்திரப் பொருளை சிவனுக்கெடுத்துறைத்த பெருமானே சிவன் செவிமடுக்க மகன் பொருளுறைக்க நீ குருபரன் ஆனாயே சக்தி வேல் கொடுத்து நீ போர்தொடுத்து அந்த சூரனை நீதான் அழித்தாயே அந்த மகிழ்ச்சியை அளித்த ஐயன், ஐயப்பன் சோதரன் முருகன் நீதானே (அறுபடை வீட்டினில் ... முருகா ... முருகா ... முருகா). |
![]() |
திரு கண்ணப்பன் ராமமூர்த்தி Thiru Kannapan Ramamoorthy |
(aRupadai veettinil vAzhkindravan vadivEl murugan azhagaip pAdu murugan magimaigaLaith thoguththu theenthamizhil kuzhaiththu iRai uNarvil thiLaiththup pAdu saravaNap poigaiyil aruLgindra muruganai thAngidum thAmaraiyAkku ennaip padaiththitta muruganin thiruvadip paNindhEn pAkkaL pAda isai gnAnam enadhAkku thiruchchendhUrin thirukkumaran ivan mUththavanO andha yAnaimugan sivabAlan ivan umaiyALin magan murugA ... ena azhaiththidavE mezhugA ... manam karaigiRadhE murugA ... murugA ... murugA) kundrirukkum idam kumaran iruppidam angu malaimagaLin maganAtchi andha swAmimalai gnAnap pazhanimalai andha marudhamalaiyumE adhan sAtchi dheyvayAnai orupuram vaLLi orupuram naduvil murugan andha thirukkAtchi adhaik kaNdu manam kuLirum kaNgaL kasindhurugum engum bakthi paravasamAtchi aRupadai veettinil vAzhkindravan Omenum piraNava mandhirap poruLai sivanukkeduththuRaiththa perumAnE sivan sevimadukka magan poruLuRaikka nee guruparan AnAyE sakthi vEl koduththu nee pOrdhoduththu andha sUranai neethAn azhiththAyE andha magizhchchiyai aLiththa aiyan, aiyappan sOdharan, murugan needhAnE (aRupadai ... ... murugA ... murugA ... murugA). |
| பட்டியல் PDF வடிவத்தில் List in PDF format |
| ... https://kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே home contents top |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. PLEASE do not ask me for songs about other deities or for BOOKS - This is NOT a bookshop - sorry. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. © Copyright Kaumaram dot com - 2001-2040 COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED. Please contact me (the webmaster), if you wish to place a link in your website. email: kaumaram@gmail.com Disclaimer: Although necessary efforts have been taken by me (the webmaster), to keep the items in www.kaumaram.com safe from viruses etc., I am NOT responsible for any damage caused by use of and/or downloading of any item from this website or from linked external sites. Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items from the internet for maximum safety and security. மேலே top |