Kaumaram dot com - The Website for Lord Muruga and His Devotees

Kandha Puranam
by
Sri Kachiyappa
Sivachariyar

ஸ்ரீ கச்சியப்ப சிவாச்சாரியார்
அருளிய
கந்த புராணம்

Lord MuruganSri Kaumara Chellam

காண்டம் - படலம் பட்டியலுக்கு அகர வரிசையில் முதற்குறிப்புக்கு செய்யுள் முதற்குறிப்பு pdf வடிவம்

kANdam - padalam List Tamil alphabetical index verse index pdf version

previous kandam   4 - யுத்த காண்டம்   next kandam4 - yudhdha kANdam

previous padalam   8 - அக்கினிமுகாசுரன் வதைப் படலம்   next padalamAkkinimugAsuran vadhaip padalam

Ms Revathi Sankaran (8.17mb)
(1 - 80)



Ms Revathi Sankaran (7.83mb)
(81 - 160)



Ms Revathi Sankaran (7.94mb)
(161 - 242)




(நாலாநாட் பகல் அக்கினிமுகாசுரன் வதை நிகழ்ந்ததாகும்)

(எட்டாசையு ளோர்)

எட்டாசையு ளோர்களை எண்கரியைக்
     கட்டாவுறு சில்கதி ரைப்பரியை
          முட்டாவரு தேரினை முன்கொணரா
               வட்டாடிய தோர்வலி பெற்றுடையான். ......    1

(கருவாயுறு கின்ற)

கருவாயுறு கின்றதொர் காலைமுதல்
     திருமாதுடன் முற்றழல் சிந்திடலும்
          பெருமாயவள் வந்துபி றந்திடுவோன்
               எரிமாமுகன் என்ற இயற்பெயரான். ......    2

(பன்னாக மிசை)

பன்னாக மிசைத்துயில் பண்ணவனூர்
     பொன்னார்சிறை கொண்டதொர் புள்ளினுடன்
          அந்நான்முக னூர்தியும் ஆடுறுவான்
               முன்னாட்கொடு வந்ததொர் மொய்ம்புடையான். ......    3

(முன்னுற்றவன் வானெ)

முன்னுற்றவன் வானெழு மொய்கதிரோன்
     தன்னைச்சிறை யிட்டது தான்வினவா
          மன்னுற்றிடு சோமனை வைகல்பல
               இன்னற்பட வேசிறை இட்டுடையான். ......    4

(தெய்வப்படை தாங்கி)

தெய்வப்படை தாங்கிய செங்கையினான்
     ஐவர்க்குள தாகிய ஆற்றலுளான்
          மைவைத்திடும் வஞ்சனை மாயம்வலான்
               எவ்வெப்படை தன்னையும் ஈறுசெய்வான். ......    5

(அந்தார்முடி கொண்டி)

அந்தார்முடி கொண்டிடும் ஐயன்முனம்
     வந்தானடி தன்னை வணங்கியிவண்
          எந்தாய்மெலி வுற்றனை என்னெனலுஞ்
               சிந்தாகுல மோடிது செப்பிடுவான். ......    6

(உண்ணாடிய மாயை)

உண்ணாடிய மாயைகொ டொற்றுமையால்
     விண்ணாடர் பொருட்டிவண் மேவியுளான்
          கண்ணாரெயில் வேலி கடந்துநமை
               எண்ணாது புரத்திடை ஏகினனால். ......    7

(ஏகுந்தொழில்)

ஏகுந்தொழில் வெய்யவன் இந்நகரம்
     வேகும்படி செந்தழல் வீசிடலும்
          மாகொண்டல்கள் ஏவினன் மற்றவைமா
               றாகும்புனல் சிந்தி அவித்தனவே. ......    8

(மடல்கொண்டிடு)

மடல்கொண்டிடு தாரினன் மற்றதுகண்
     டுடல்கொண்ட சினத்தொ டொருங்குலகங்
          கடைகொண்டிடு கின்ற கனற்படைதொட்
               டடல்கொண்ட முகிற்றிறல் அட்டனனே. ......    9

(அட்டானது கேட்ட)

அட்டானது கேட்டனம் ஆடகனை
     விட்டாம்அனி கத்தொடு வெஞ்சமர்செய்
          தொட்டார்வலி நோக்கி உடைந்தவனும்
               நெட்டாழி புகுந்து நிமிர்ந்தனனால். ......    10

(நங்கொற்ற மிகு)

நங்கொற்ற மிகுத்திடு நாற்படையும்
     அங்குற்றிடு கின்றன மாநகரை
          உங்குற்றிடு தூதன் ஒறுத்தனனால்
               இங்குற்ற நிகழ்ச்சியி தென்றனனே. ......    11

(செங்கோன்முறை)

செங்கோன்முறை கோடிய தீயவுணன்
     அங்கோதிய கேட்டலும் ஆரழல்கால்
          வெங்கோரமு கத்து வியன்புதல்வன்
               தங்கோமுக மாவிது சாற்றிடுவான். ......    12

(மன்னர்க்கிறை)

மன்னர்க்கிறை யாகிய மன்னவநீ
     உன்னுற்றுள மீதில் உருத்திடவே
          முன்னுற்றிடு தூதுவன் மொய்ம்பினனோ
               என்னுக்கவன் ஆற்றலை எண்ணுதிநீ. ......    13

(மிடல்கொண்டிடு)

மிடல்கொண்டிடு தூதனை மிக்கவரைப்
     புடைகொண்டமர் செய்திடு பூதர்தமை
          அடல்கொண்டிவண் நின்னை அடைந்திடுவன்
               விடைதந்தரு ளென்று விளம்பினனே. ......    14

(நன்றேயிது செப்பி)

நன்றேயிது செப்பினை நண்ணலனை
     வென்றேவரு கென்று விடுத்திடலும்
          நின்றேதொழு தவ்விடை நீங்கினனால்
               குன்றேநிகர் தோள்வலி கொண்டுடையோன். ......    15

(கார்க்கோலமும்)

கார்க்கோலமும் வெய்ய கருங்கடலின்
     நீர்க்கோலமும் அன்னவன் நீடியதன்
          சீர்க்கோநக ரத்திடை சென்றனனால்
               போர்க்கோலம் அமைந்து புறம்படர்வான். ......    16

(மைக்கொண்டல்)

மைக்கொண்டல் படர்ந்திடு மால்வரைபோல்
     மொய்க்கொண்டிடு சாலிக முன்னுறவே
          மெய்க்கொண்டணி புட்டில் விரற்பரியாக்
               கைக்கொண்டனன் விண்ணவர் கைப்படையே. ......    17

(தன்றாதையி னை)

தன்றாதையி னைத்தரு தாயுதவும்
     பொன்றாழ்சிலை கைக்கொடு பொள்ளெனவே
          ஒன்றாகிய தேரிடை யொல்லைபுகாச்
               சென்றான்விழி யிற்கனல் சிந்திடுவான். ......    18

(அறமற்றிடு தீயன்)

அறமற்றிடு தீயன் அகன்றுநகர்ப்
     புறமுற்றனன் அங்கது போழ்துதனில்
          திறமற்றது தூதுவர் செப்புதல்முன்
               மறமுற்றிடு தானைகள் வந்தனவே. ......    19

(ஓராயிர வெள்ளம்)

ஓராயிர வெள்ளம் ஒருத்தலினம்
     தேரானவும் அத்தொகை திண்டிறல்மா
          ஈராயிர வெள்ள மியாவர்களும்
               ஆராய்வரி தாலவு ணக்கடலே. ......    20

வேறு

(ஆன காலையில் அங்கி)

ஆன காலையில் அங்கி முகாசுரன்
     மான மேற்கொண்டு மாற்றலர் யாரையும்
          யானொர் கன்னல்முன் ஈறுசெய் வேனெனாச்
               சேனை தன்னொடுஞ் சென்றிடல் மேயினான். ......    21

(நல்கு மாறின்றி)

நல்கு மாறின்றி நாள்பல நீங்கியே
     மல்கு காதலர் வந்து கலந்துழிப்
          பில்கு காமத்துப் பெய்வளைப் பேதையர்
               அல்கு லென்ன அசைந்தகல் வுற்றதேர். ......    22

(அருத்தி மெல்லியர்)

அருத்தி மெல்லியர் ஆரதங் கொண்டுழல்
     விருத்தர் கூட்டம் வெறுத்திடு மாறுபோல்
          எருத்த மீதில் இடிப்பவர் தம்முரைக்
               கருத்தின் நிற்கில காய்சின வேழமே. ......    23

(மண்ணிற் பாய்வன)

மண்ணிற் பாய்வன மாதிரஞ் சூழ்வன
     விண்ணிற் றாவுவ வீதியிற் செல்வன
          எண்ணிற் பல்பொருள் இச்சைகொள் வேசியர்
               கண்ணிற் கொப்பன கந்துக ராசியே. ......    24

(வஞ்சம் நீடி அருள)

வஞ்சம் நீடி அருளற்று மாயமே
     எஞ்ச லின்றி இருள்கெழு வண்ணமாய்
          விஞ்சு தம்மல்குல் விற்றுணும் மங்கையர்
               நெஞ்ச மொத்தனர் நீள்படை வீரரே. ......    25

(தார்த்த டம்புய)

தார்த்த டம்புயத் தானவர் பல்லியம்
     ஆர்த்த ஓதை அகிலமும் புக்கதால்
          தூர்த்த மங்கையர் சோர்வினிற் செய்பழி
               வார்த்தை எங்கணும் வல்லையிற் சேறல்போல். ......    26

(சோதி மெய்யெழில்)

சோதி மெய்யெழில் தூயன மாற்றியே
     மீது செல்லரும் வெவ்விருள் உய்த்தலால்
          ஏதின் மாதரை எய்திடும் புன்மையோர்
               காதல் போன்ற கடிதெழும் பூழியே. ......    27

(பீட்டின் மிக்க)

பீட்டின் மிக்க பெரும்பணை தாங்கிய
     மோட்டின் ஒட்டக முந்திய கந்தரம்
          நீட்டி வாங்குவ நேர்ந்தவர் முன்தலை
               காட்டி வாங்குங் கணிகையர் போலவே. ......    28

(சீறு மால்கரி)

சீறு மால்கரி தேர்மிசைப் பூண்டுவிண்
     ஆற ளாவிநின் றாடுவ கேதனம்
          ஊறு காதல் ஒருவன்கண் வைகினாள்
               வேறு ளாரையும் வெஃகிவி ளித்தல்போல். ......    29

(வீழு மும்மத)

வீழு மும்மத வேழங்கள் மத்தகம்
     சூழி காலின் அசைதொறும் தோன்றுவ
          மாழை நோக்கியர் மைந்தர்க்கு மாலுறக்
               காழ கத்தனம் காட்டி மறைத்தல்போல். ......    30

(தோம ரஞ்சிலை)

தோம ரஞ்சிலை சூலம் மழுப்படை
     நாம வெங்கதை நாஞ்சில் முசலம்வேல்
          நேமி தானவர் நீள்கரம் செல்வன
               காமர் மங்கையர் கட்டொழில் தாங்கியே. ......    31

வேறு

(எற்றின பறையின்)

எற்றின பறையின் வீழ்ந்த எழிலிகள் எழுந்த பூழி
     சுற்றின வான மீப்போய்த் தூர்த்தன கங்கை நீத்தம்
          வற்றின படையும் பூணும் வயங்கின மயங்கி எங்கும்
               செற்றின பதாகை ஈட்டம் இருண்டன திசைக ளெல்லாம். ......    32

(சோமகண் டகனே)

சோமகண் டகனே சோமன் சூரியன் பகைஞன் மேகன்
     காமர்பிங் கலனே ஆதிக் கடிதெழு தானை வீரர்
          மாமருங் கதனிற் செல்ல மன்னவர் மன்னன் மைந்தன்
               ஏமரு பூத சேனைக் கெதிருற எய்தி னானால். ......    33

(எதிர்ந்தனர் பூதர்)

எதிர்ந்தனர் பூதர் தாமும் அவுணரும் இடிப்பிற் பேரி
     அதிர்ந்தன துடியுஞ் சங்கும் ஆர்த்தன அண்ட மீன்கள்
          உதிர்ந்தன அனையர் கூடி உடன்றுபோர் புரிய வையம்
               பிதிர்ந்தன பொதிந்த அண்டப் பித்திகை பிளந்த தன்றே. ......    34

(தொட்டனர் வேலும்)

தொட்டனர் வேலும் வாளுந் தூண்டினர் பகழி மாரி
     விட்டனர் பிண்டி பாலம் வியன்மழுத் தண்ட மோச்சிக்
          கிட்டினர் சூலம் வீசிக் கிளர்ந்தனர் அவுணர் பூதர்
               பட்டனர் அளப்பி லோர்கள் பரந்தன குருதி நீத்தம். ......    35

(முத்தலைக் கழுவை)

முத்தலைக் கழுவைத் தண்டை முசலத்தை நேமி தன்னைக்
     கைத்தலத் திருந்த கூர்வாய்க் கணிச்சியைப் பிறங்கல் தன்னை
          எத்திறத் தவரும் பூதர் எறிந்தனர் எறிந்த காலை
               அத்தலை அவுண வீரர் அளப்பிலர் பட்டா ரம்மா. ......    36

(தறிந்தன புரவி)

தறிந்தன புரவித் தாளுந் தலைகளுந் தடந்தேர் அச்சும்
     முறிந்தன துவசம் அற்ற மும்மதக் கோட்டு மாக்கண்
          மறிந்தன உடலம் வேறா மடிந்தனர் வயவர் எங்கும்
               செறிந்தன கழுகு காகம் திரண்டன கூளி திண்பேய். ......    37

(இருபெரும் படை)

இருபெரும் படையும் இவ்வா றேற்றிகல் புரியும் வேலை
     வெருவரு வேற்கண் மாதர் வியர்ப்பின்வந் துதித்த வீரர்
          பொருவருஞ் சிலைகள் வாங்கிப் புங்கவம் பொழிந்து சூழ
               ஒருவரும் அவுணர் நில்லா தோடினர் உடைந்து போனார். ......    38

(உடைதலும் அவுண)

உடைதலும் அவுணன் மைந்தன் ஒய்யென விடுப்ப மேகன்
     கடுமுரட் சோமன் சோம கண்டகன் முதலா வுள்ள
          படையுறு தலைவர் பல்லோர் பகழியின் மாரி தூவி
               அடுசிலை வீரர் மேற்சென் றமரினை யிழைத்தா ரன்றே. ......    39

(இழைத்திட அதனை)

இழைத்திட அதனை நோக்கி இலங்கெழில் தாளில் வீரக்
     கழற்புனை கின்ற வீர புரந்தரன் கடிய சீற்றத்
          தழற்பெருங் கடவுள் போல்வான் அசனியே றஞ்ச ஆர்க்கும்
               முழக்கினன் ஒருதன் சேனை முன்னுறக் கடிது வந்தான். ......    40

(வந்தனன் அங்கை)

வந்தனன் அங்கைச் சாபம் வாங்கினன் வாளி மாரி
     சிந்தினன் தலைவர் தேரைச் சிதைத்தனன் சென்னி தள்ளி
          இந்துகண் டகனை வானில் ஏற்றினன் ஏனை வீரர்
               உந்திய சேமத் தேர்மேல் உற்றிகல் புரிந்து சூழ்ந்தார். ......    41

(சுற்றினர் வீரன்)

சுற்றினர் வீரன் மேனி சோரிநீ ரொழுகும் ஆற்றால்
     முற்றுறு பகழி தூவ முழங்கழ லென்னச் சீறி
          மற்றவர் சிலையுந் தேரும் மண்மிசை வீட்டி வல்லே
               நெற்றியின் உரத்தின் தோளின் நெடுங்கணை பலவும் உய்த்தான். ......    42

(உய்த்தலும் அவுணர்)

உய்த்தலும் அவுணர் வேந்தற் குற்றுழி யுதவ நின்ற
     மெய்த்திற லாற்ற லாளன் மேகனென் பவனோர் தண்டங்
          கைத்தல மிசையி லேந்திக் கணப்படை வீரன் தேர்மேல்
               மத்திகை முட்கோல் கொண்ட வலவனை மோதி ஆர்த்தான். ......    43

(மோதலுந் தனது)

மோதலுந் தனது பாகன் முடிந்திடு தன்மை காணூஉ
     மேதகு தலைவன் வீர புரந்தரன் வேலொன் றேந்தி
          ஈதினின் முடிதி என்றே ஏவினன் ஏவ லோடும்
               பூதல மிசையே வீழாப் பொன்றினன் புயலின் பேரோன். ......    44

(புயலுறு நாம)

புயலுறு நாமத் தண்ணல் பொன்றலும் அதனை நாடி
     அயலுறு தானை வீரர் அஞ்சினர் அகன்று போக
          இயலது தன்னை நோக்கி எரிமுகன் எரியிற் சீறிப்
               பயிலுறு சிலையொன் றேந்திப் படையொடுங் கடிது வந்தான். ......    45

வேறு

(வளைத்தான்தனி)

வளைத்தான்தனிப் பெருவில்லினை மருவார்மனம் வளைய
     விளைத்தான்அவட் சிறுநாணொலி மிகவார்த்தனன் விண்மேல்
          முளைத்தார்தரு பிறைபோல்வதொர் முனைவாளிகள் தெரியாக்
               கிளைத்தார்தரு பூதப்படை கேடுற்றிடப் பொழிந்தான். ......    46

(தலையற்றனர் கர)

தலையற்றனர் கரமற்றனர் தாளற்றனர் தோளா
     மலையற்றனர் மார்பற்றனர் வாயற்றனர் செய்யுங்
          கொலையற்றனர் செவியற்றனர் கூறுற்றிடு நாவின்
               நிலையற்றனர் படையற்றனர் நெடும்பூதர்கள் எவரும். ......    47

(ஆரிற்றன சகடி)

ஆரிற்றன சகடிற்றன அச்சிற்றன கிடுகின்
     ஏரிற்றன கொடியிற்றன முடியிற்றன ஈர்க்கும்
          மூரிப்பரி மாவிற்றன முருகன்படை வீரர்
               தேரிற்றன படையிற்றன செருவிற்றன அன்றே. ......    48

(ஓடுற்றன குருதி)

ஓடுற்றன குருதிப்புனல் உலகச்சுற வொலியா
     ஆடுற்றன கவந்தக்குறை அலகைக்குல மிகவே
          பாடுற்றன ஞமலித்தொகை பரவுற்றன கொடிமேற்
               கூடுற்றன பாறுற்றன குறுகுற்றன கழுகே. ......    49

(அக்காலையின் அது)

அக்காலையின் அதுகண்டனன் அழல்கான்றிட நகையா
     மைக்காலனும் வெருவுற்றிடு வலிசேர்திறல் மகவான்
          கைக்கார்முகந் தனைவாங்குபு கணைமாரிகள் சொரியாப்
               புக்கான்அவு ணனுமாங்கெதிர் பொழிந்தான்சர மழையே. ......    50

(கரவன்விடு நெடு)

கரவன்விடு நெடுவாளிகள் கந்தன்படை ஞன்மேல்
     வருகின்றன உறுகின்றன மன்னன்மகன் முன்னம்
          பொருகின்றநம் வீரன்விடு புகர்வெங்கணை பலவும்
               இரிகின்றன படுகின்றன விருவோர்பக ழியுமே. ......    51

(போரிவ்வகை புரி)

போரிவ்வகை புரிகின்றுழிப் புரைதீர்விறல் மகவான்
     தேரும்பொரு சிலையுங்கணை செறியாவமுஞ் சிதையா
          ஈரைம்பது சரமார்புற எய்தேயிகல் அவுணர்
               ஆரும்படி புகழும்படி ஆர்த்தான்அறம் பேர்த்தான். ......    52

(மாறாகிய அவுணர்)

மாறாகிய அவுணர்க்கிறை வலியுந்திறல் மகவான்
     வீறானவை இழந்திட்டதும் விழிதீயுற நோக்கிச்
          சீறாச்சிலை வளையாக்கணை சிதறாவசை பலவுங்
               கூறாவெதிர் புகுந்தாரவன் துணையாமெழு குமரர். ......    53

(இடிகாலுறு முகிலா)

இடிகாலுறு முகிலாமென எழுவீரரும் ஏகிக்
     கடிதேமுனி வொடுசிந்திய கணையாவையும் விலக்கா
          விடமாகிய எரிமாமுகன் விறலோர்புய வரைமேல்
               வடிவார்கணை பலசிந்துபு மழையாமென மறைத்தான். ......    54

(சகத்தானவர் புகழ)

சகத்தானவர் புகழப்படு தலைவன்மகன் சரங்கள்
     மிகத்தான்விட மெலிவுற்றிடும் எழுவீரரும் வெய்யோன்
          முகத்தாயிரங் கரத்தாயிரம் உரத்தாயிரம் மொய்ம்பின்
               அகத்தாயிரங் கணைபாய்ச்சினர் அவன்றேரையும் அறுத்தார். ......    55

வேறு

(அறுத்திடும் எல்லை)

அறுத்திடும் எல்லையின் அழலின் மாமுகன்
     மறித்துமொர் தேரிடை வாவி வல்லைபோய்
          எறித்தரு கதிருடை யெழுவர் தம்மையுஞ்
               செறுத்தெரி விழித்திவை செப்பல் மேயினான். ......    56

(ஒன்றொரு படை)

ஒன்றொரு படையினால் உங்கள் ஆவியைத்
     தென்றிசை மறலியார் தெவிட்ட நல்கியே
          வென்றிகொள் மொய்ம்புடை விடலை தன்னையுங்
               கொன்றிடு கின்றனன் என்று கூறினான். ......    57

(கூறுபோ தத்தி)

கூறுபோ தத்தினிற் குமரன் தானையோர்
     வேறுவே றடுகணை வீசி வெய்யவன்
          ஏறுதேர் தன்னையும் இவுளி தன்னையும்
               நூறினார் அவனுடல் நூழை யாக்கினார். ......    58

(ஆயது காலையில் அவுணன் வே)

ஆயது காலையில் அவுணன் வேறொரு
     பாயிருந் தேரிடைப் பாய்ந்து கண்ணுதல்
          தூயவன் படையினை எடுத்துத் துண்ணென
               நேயமொ டருச்சனை நிரப்பித் தூண்டினான். ......    59

(அடலெரி முகத்தி)

அடலெரி முகத்தினான் ஆதி நாயகன்
     படைதொட அன்னது படியும் வானமும்
          வடவையின் உருவமாய் வரலும் அச்செயல்
               விடலைகள் எழுவரும் வெகுண்டு நோக்கினார். ......    60

(அனற்படை அன்ன)

அனற்படை அன்னதால் அதற்கு மாறதாப்
     புனற்படை விடுக்குவ மென்று புந்திகொண்
          டினப்படு துணைவர்கள் யாரும் வாருண
               முனைப்படை தூண்டினர் முடியுஞ் செய்கையார். ......    61

(தூண்டிய வாருண)

தூண்டிய வாருணத் தொல்லை மாப்படை
     சேண்டொடர்ந் திடுதலும் தேவன் தீப்படை
          ஆண்டெதி ராகியே அவற்றை நுங்கிற்றால்
               ஈண்டொரு முனிகடல் ஏழும் உண்டென. ......    62

(சலபதி படைகளை)

சலபதி படைகளைத் தடிந்து வாய்மடுத்
     துலகுளோர் வெருவர ஊழி யான்படை
          வலியுட னேகிஏழ் வயவர் தம்மையும்
               மெலிவுசெய் துயிர்கொடு மீண்டு போயதே. ......    63

(மீண்டது போதலும்)

மீண்டது போதலும் வீரர் அவ்விடை
     மாண்டனர் கயிலையின் மருங்கு போயினார்
          மூண்டிடு பெருங்கனல் முகத்தன் அங்கது
               காண்டலும் ஆர்த்தனன் களிப்பில் உம்பரான். ......    64

(ஒருங்குற வீரர்கள்)

ஒருங்குற வீரர்கள் உலந்து வீடலும்
     மருங்குற நோக்கிய வயவெம் பூதர்கள்
          கரங்களை மறித்தனர் கலங்கி வாய்புடைத்
               திரங்கினர் வெருவினர் இரிந்து போயினார். ......    65

(நெற்றியில் வீரர்தம்)

நெற்றியில் வீரர்தம் விளிவு நீங்கலா
     துற்றிடு பூதர்கள் உலைந்து சாய்வதுந்
          தெற்றென நோக்கினன் செயிர்த்து விம்மினான்
               வெற்றியின் கிழவனாம் வீர வாகுவே. ......    66

(வீரமொய்ம் புடைய)

வீரமொய்ம் புடையவன் வெருவ லீரெனப்
     பாரிடக் கணங்களைப் பாணி யாலமைத்
          தோரிறை முன்னரே ஒருதன் தேரொடும்
               ஆரழல் முகத்தன்முன் அணுகப் போயினான். ......    67

(போய்க்குறு குற்று)

போய்க்குறு குற்றுழிப் பொருநர்த் தேய்த்தலின்
     வீக்கிய கனைகழல் வீர வாகுவைத்
          தாக்கெரி முகமுடைத் தறுகண் வெய்யவன்
               நோக்கினன் வெகுண்டிவை நுவறல் செய்குவான். ......    68

வேறு

(எதிரா கியபூ தரை)

எதிரா கியபூ தரைஏ னையரை
     மதியேன் நினையே அடவந் தனன்நீ
          அதுகா லையின்இங் ஙன்அடைந் தனையால்
               விதியே உனைஎன் முன்விடுத் ததுவே. ......    69

(கொன்றாய் பலரை)

கொன்றாய் பலரைக் கொடுவெஞ் சமரின்
     வென்றாய் பலரை மிகைசெய் தனையாய்
          நின்றாய் வருவாய் நினதா ருயிருக்
               கின்றா குவதோ இறுதிப் பகலே. ......    70

(முன்னர்ப் பொரு)

முன்னர்ப் பொருதே முரிவுற் றவர்போல்
     என்னைக் கருதேல் இனிஓ ரிறையில்
          உன்னைத் தலைகொய் தொருசென் னியையும்
               மன்னர்க் கிறைசே வடிவைத் திடுவேன். ......    71

(பூண்பால் முலை)

பூண்பால் முலைமா தர்புணர்ச் சியெனும்
     ஆண்போர் தனிலே வலியற் றழியும்
          ஆண்பால் ஒருவன் அவனே அலனோ
               ஏண்பால் உனையான் இவண்வென் றிலனேல். ......    72

(என்னா எதிரா)

என்னா எதிரா இவையொப் பனசொற்
     சொன்னான் அதுகேட் டிடுதொல் விறலோன்
          பொன்னார் தருசெங் கைபுடைத் துநகைத்
               தொன்னான் முகநோக் கியுரைத் திடுவான். ......    73

(முளையார் தருபொன்)

முளையார் தருபொன் னவன்முந் துசமர்
     விளையா வடிவந் தனைவிட் டகலா
          வளையார் புனல்புக் கனன்அன் னவனுக்
               கிளையாய் ஒருநீ எவணுய் குதியோ. ......    74

(மூண்டார் அமர்செய்)

மூண்டார் அமர்செய் திடுமொய்ம் பரெலாம்
     மாண்டார் கதிரோன் பகைமற் றொருவன்
          மீண்டான் அவனும் விளிவுற் றிடுநீ
               ஈண்டா ருயிர்தோற் றிடவே கினையோ. ......    75

(வீடிச் செருவில்)

வீடிச் செருவில் விளிவா குதியோ
     பேடித் தொழில்கற் றிடுபிள் ளையென
          ஓடிக் கடல்புக் குயிருய் குதியோ
               நாடிக் கடிதொன் றைநவிற் றுதியே. ......    76

(பார்காத் திடினும்)

பார்காத் திடினும் பலதா னவரும்
     நேர்காத் திடினும் நிலைபெற் றழியாச்
          சூர்காத் திடினுந் தொலைவில் விறலோர்
               ஆர்காத் திடினும் அடுவேன் உனையே. ......    77

(என்றிங் கிவை)

என்றிங் கிவைவீ ரன்இசைத் திடலுங்
     குன்றன் னசினத் தழல்கொம் மெனவே
          சென்றுள் ளமலைத் துழிதீ முகவன்
               வன்றிண் சிலையொன் றைவளைத் தனனே. ......    78

வேறு

(நடுத்தான்அகன்)

நடுத்தான்அகன் றிடுசூர்மகன் நாணோதையைச் சிலைநின்
     றெடுத்தான்எடுத் தலும்வெய்யவன் இரவோனுடன் இரிந்தான்
          உடுத்தான்உதிர்ந் தனசேடனும் உலைந்தான்உல கனைத்துங்
               கெடுத்தான்இவ னெனவானவர் கிளையோடின அன்றே. ......    79

(அக்காலையின் முக)

அக்காலையின் முகமாறுடை அமலன்றனக் கன்பன்
     கைக்கார்முகம் இருகால்வளைத் தொருகாலொலி காட்டத்
          திக்கானன முடையான்முதல் தேவாசுரர் துளங்கி
               இக்காலம தோபார்முழு திறுங்காலம தென்றார். ......    80

(என்னாவிசைத் திடு)

என்னாவிசைத் திடுமெல்லையில் எரிமாமுகன் ஈரேழ்
     கொன்னார்கணை விடுத்தார்த்தனன் குறுகுற்றது வருமுன்
          மின்னாமெனப் பதினாற்கணை விடுத்தேயவை விலக்கிப்
               பொன்னார்தரு திறல்மொய்ம்பினன் புயலேறெனத் தெழித்தான். ......    81

(செஞ்ஞாயிறு கதிர்)

செஞ்ஞாயிறு கதிர்கான்றெனத் தீமாமுகத் தவுணன்
     ஐஞ்ஞான்கெனுந் தொகைபெற்றிடும் அயில்வெங்கணை தொடுப்ப
          எஞ்ஞான்றுமுற் றிடுசீர்த்தியன் இருபான்கணை துரந்து
               மைஞ்ஞான்றிடு முகில்மேற்செலு மருத்தாமெனத் தடுத்தான். ......    82

(கண்டங்கது கனல்)

கண்டங்கது கனல்மாமுகன் கணையாயிரந் துரந்து
     புண்டங்கிய தனிவேலுடைப் புனிதன்றன திளவல்
          முண்டம்புக உய்த்தேதிறல் முதுவால்வளை அதனை
               அண்டங்கிழி படஊதினன் அவுணப்படை புகழ. ......    83

(ஆராரும் வியக்கு)

ஆராரும் வியக்குந்திறல் அடல்மொய்ம்பினன் அங்கண்
     ஓராயிரம் வடிவாளிகள் ஒருங்கேதொடுத் துய்த்துச்
          சூராகிய அவுணன்தரு தொல்லைத்தனி மைந்தன்
               தேரானதும் பரியானதும் சிலையானதுஞ் சிதைத்தான். ......    84

(சிதையும்பொழு தயல்)

சிதையும்பொழு தயல்வேறொரு தேரின்மிசைப் பாயாக்
     கதையொன்றினை விடுத்தான்எரி கனல்மாமுகன் அதன்மேல்
          குதையொன்றினைத் துரந்தேயருட் குமரேசனுக் கிளையோன்
               சுதையொன்றியக் களத்தேவிழத் துண்டம்பல கண்டான். ......    85

(மாற்றோர்சிலை)

மாற்றோர்சிலை யினைவாங்கி வளைத்தேகனல் முகத்தோன்
     காற்றோன்படை துரக்கின்றுழி இவனும்மது கடவக்
          கூற்றோன்படை தொடுத்தானவன் குமரன்றனக் கிளையோன்
               வேற்றோர்படை துரந்திட்டிலன் அதுவேசெல விட்டான். ......    86

(மாகத்துறு கதிர்)

மாகத்துறு கதிர்வெம்படை மன்னன்தரு மதலை
     வேகத்தினில் விடவாங்கது விடுத்தேயது விலக்கி
          நாகத்தமர் கறைநீவிய நனிகூரிய கணைநூ
               றாகத்திடை படவேதுரந் தடல்மொய்ம்பினன் ஆர்த்தான். ......    87

(தருமத்தியல் நிறு)

தருமத்தியல் நிறுவுற்றிடு தக்கோன்விடு சரங்கள்
     மருமத்தினிற் படுகின்றுழி வானோரமு தருந்தும்
          கருமத்தினில் விரவிக்கடல் கடையக்கவிழ்ந் திட்ட
               பெருமத்தென நிலைசோர்ந்துதன் பெருந்தேர்மிசை வீழ்ந்தான். ......    88

(விழுகின்றதொ ரெரி)

விழுகின்றதொ ரெரிமாமுகன் வியன்மார்பெனும் வரைநின்
     றிழிகின்றன நதியாமென எருவைப்புனல் உயிரும்
          ஒழிகின்றது வருகின்றது லாவுற்றது தேற்றம்
               அழிகின்றது வருமந்தகன் அச்சுற்றனன் அணுக. ......    89

(விளிந்தானென மய)

விளிந்தானென மயங்குற்றவன் வெஞ்சூர்உரும் ஏற்றால்
     நெளிந்தாடர வசைந்தாலென நெடுந்தேர்மிசைப் பெயராத்
          தெளிந்தாயிடை யிரங்கிப்பொரு திறல்வன்மைய திலனாய்
               எளிந்தான்எளிந் திடுகின்றவன் இத்தன்மைசிந் தித்தான். ......    90

(மொழிபட்டிடு திறல்)

மொழிபட்டிடு திறல்மாற்றலர் முனைவெஞ்செருத் தனில்யான்
     அழிபட்டிடின் வருவாயென அந்நாட்சிறு காலைப்
          பழிபட்டிடும் வெறியாட்டினைப் பயின்றேபலி யூட்டி
               வழிபட்டதன் நகர்க்காளியை மனத்தின்மிசை நினைத்தான். ......    91

வேறு

(விஞ்சுந் தொல்விறல்)

விஞ்சுந் தொல்விறல் மேவு சூர்தரு
     மைஞ்சன் தன்னை மனத்தில் உன்னலும்
          நஞ்சுந் துண்ணென நண்ணு காளிதன்
               நெஞ்சந் தன்னில் நினைத்தல் மேயினாள். ......    92

(சூலங் கொண்ட லமர்)

சூலங் கொண்ட லமர்ந்து தோன்றுவாள்
     சூலங் கொண்ட லமந்த தோளினாள்
          கோலம் பெற்ற குலிங்க வேணியாள்
               கோலம் பெற்ற குறுங்கொ லைக்கணாள். ......    93

(போதங் கொன்று)

போதங் கொன்று பொறாமை மிக்குளாள்
     போதங் கொன்று பொலஞ்செய் தாளினாள்
          ஏதந் தீர்ந்திடும் எண்ண லார்சிரம்
               ஏதந் தீர்ந்திடும் ஏம வாளினாள். ......    94

(சங்கா ரத்தணி)

சங்கா ரத்தணி தாங்கு கொங்கையாள்
     சங்கா ரத்தணி தந்த செங்கையாள்
          உங்கா ரத்தின் உரத்த ஆடையாள்
               உங்கா ரத்தின் உரப்பும் ஓதையாள். ......    95

(ஞாலத் தேவரும்)

ஞாலத் தேவரும் நாகர் வேந்தரும்
     ஞாலத் தேவரும் ஏத்த நண்ணுவாள்
          காலத் தீயர்க ளிற்றின் மேலையோர்
               காலத் தீயர் கலங்கு காட்சியாள். ......    96

(அஞ்சத் தானடி)

அஞ்சத் தானடி யான வானவர்
     அஞ்சத் தானடி பேர்த்து லாவுவாள்
          நஞ்சத் தானவர் நைய வெம்மைசெய்
               நஞ்சத் தானவர் சுற்றம் நல்குவாள். ......    97

(அங்கத் தன்மை)

அங்கத் தன்மை யளாய மர்ந்திடும்
     அங்கத் தன்மை யளாய காளிமால்
          சிங்கத் தேறிய செல்வன் மைந்தன்முன்
               சிங்கத் தேறினள் செல்லல் மேயினாள். ......    98

(வில்லுச் சூலம்)

வில்லுச் சூலம் வியன்ம ழுக்கதை
     எல்லைப் பல்படை யாவை யுங்கொளா
          மல்லற் காளிகள் மாப்பெ ரும்படை
               செல்லக் கூளி செறிந்து சூழ்தர. ......    99

(மூதக் கார்ப்பொடு)

மூதக் கார்ப்பொடு விண்ணை முட்டுற
     வேதக் கூளிகள் ஏறு கேதனம்
          ஊதச் சங்கம் ஒழிந்த பல்லியம்
               மேதக் கோசை மிகுத்து மேவவே. ......    100

வேறு

(விரைவொடு பறந்த)

விரைவொடு பறந்தலை மேவி வீழ்ந்தயர்
     எரிமுக மதலையை எய்தி நோக்கியான்
          உரமிகும் ஒன்னலர் உயிரை உண்பன்நீ
               பரிவுறல் என்றனள் அமைத்த பாணியாள். ......    101

(இவ்வகை அருளியே)

இவ்வகை அருளியே இளவல் பாற்படும்
     தெய்வதப் பூதர்தஞ் சேனை மேற்செலாக்
          கவ்வைகொள் செருத்தொழில் கருதி ஆர்த்தனள்
               ஐவகைப் பூதமும் அச்சங் கொள்ளவே. ......    102

(ஆர்த்திடும் எல்லை)

ஆர்த்திடும் எல்லையில் அளக்கர் சூழ்ந்தென
     ஆர்த்திடும் எல்லையில் அடல்வெம் பூதரும்
          வேர்த்தனர் அழுங்கினர் மேற்சென் றேற்றனர்
               வேர்த்தனர் அழுங்கினர் விண்ணு ளோரெலாம். ......    103

(காளிகள் சூலம்வேல்)

காளிகள் சூலம்வேல் கணிச்சி கார்முகம்
     வாளிகள் சிந்தினர் வரைநெ டுந்தரு
          நீளிகள் எழுக்கதை நேமி இன்னன
               கூளிகள் வீசினர் குறுகிப் போர்செய்தார். ......    104

(அத்திறன் நோக்கி)

அத்திறன் நோக்கியே ஆடற் பூதர்கள்
     எத்திறத் தவரையும் ஈறு செய்கெனாக்
          கைத்தலத் திருந்ததோர் கழுமுள் வீசினாள்
               பத்திரை தன்னருள் படைத்த காளியே. ......    105

(வீசிய முத்தலை)

வீசிய முத்தலை வெய்ய வேற்படை
     காய்சின எரிபுகை கான்று காளிகள்
          மாசகல் உருப்பல வகுத்துப் பாரிடர்
               பாசன மருளுறப் படர்தல் உற்றதே. ......    106

(சண்டிகை விடுபடை)

சண்டிகை விடுபடை தனது வன்மையைக்
     கண்டனன் இளையவன் கணங்கள் ஆருயிர்
          உண்டிடும் இஃதென உன்னி யேழிரு
               புண்டரு சிலீமுகம் பொள்ளென் றேவினான். ......    107

(தீக்கலுழ் வேலினான்)

தீக்கலுழ் வேலினான் செலுத்தும் ஆசுகம்
     மேக்குறு முத்தலை வேலை நுண்டுகள்
          ஆக்கிய தாக்கலும் அனைய தன்மையை
               நோக்கினள் காளியென் றுரைக்கும் நோன்மையாள். ......    108

(துண்ணென யான்)

துண்ணென யான்விடு சூலந் தன்னையும்
     அண்ணலம் பகழியால் அறுத்தென் னாற்றலை
          எண்ணலன் நிற்பனால் இன்னும் அங்கவன்
               உண்ணிகழ் உயிரினை உண்குவேன் என்றாள். ......    109

(என்றிடு காளியோ)

என்றிடு காளியோ ரிமைப்பின் முந்துற
     நின்றிடு சேனையங் கடலை நீக்கியே
          வென்றிடு வயப்புலி மிசைக்கொண் டார்த்திடாச்
               சென்றனள் வீரன்முன் செப்பல் மேயினாள். ......    110

(முன்னுற யான்விடு)

முன்னுற யான்விடு மூவி லைப்படை
     தன்னைவெங் கணைகளால் தடுத்து நின்றனை
          இன்னுமொர் சூலமுண் டெறிவன் வீகுதி
               அன்னது காத்திடல் அரிது காணென்றாள். ......    111

(என்றலும் முறுவல்)

என்றலும் முறுவல்செய் திலங்கு சூலமாங்
     கொன்றல ஆயிரம் ஒருங்கு வீசினும்
          நின்றவை முழுவதும் நீறு செய்வனென்
               வன்றிறல் தெரிந்திலை மாதுநீ யென்றான். ......    112

(கொற்றமொய்ம் பின)

கொற்றமொய்ம் பினன்இவை கூறக் கேட்டுளஞ்
     செற்றம தாகியே தெழித்துச் சண்டிகை
          மற்றுமொர் சூலவேல் வல்லை வீசினாள்
               சுற்றிய பாரிடத் தொகுதி யுட்கவே. ......    113

(அருந்திறல் அமரர்)

அருந்திறல் அமரர்கள் அதுகொல் ஆலமென்
     றிரிந்தனர் பணியெனா இனனும் இந்துவும்
          வருந்தினர் சூலமுன் வந்த தன்மையைத்
               தெரிந்தனன் வீரமொய்ம் புடைய செம்மலே. ......    114

(எட்டுடன் இரண்டு)

எட்டுடன் இரண்டுநூ றெனுந்தொ கைப்படு
     நெட்டிரும் பகழிகள் நிகரத் தூண்டியே
          அட்டனன் துணிபட அரியின் மேலவள்
               தொட்டிட வருவதோர் சூலந் தன்னையே. ......    115

(எறித்தரு சூலம)

எறித்தரு சூலம திற்று வீழ்தலுஞ்
     செறுத்தனள் இங்கிவன் சிரத்தை வாளினால்
          அறுத்துதி ரப்புனல் சுவைத்திட் டாவியைப்
               பறித்திடு வேனெனப் பகர்ந்திட் டாளரோ. ......    116

(நாலிரு தோளுடை)

நாலிரு தோளுடை நங்கை தோன்றல்முன்
     வாலுளை மடங்கலின் இருத்தல் மாண்பொரீஇப்
          பாலுறு திரைக்கடற் பரப்பை விட்டகல்
               ஆலம தாமென ஆர்த்திட் டேகினாள். ......    117

(ஆர்த்திடு சண்டிகை)

ஆர்த்திடு சண்டிகை அங்கை தன்னிலோர்
     கூர்த்திடும் வாட்படை கொண்டு கொம்மெனத்
          தீர்த்தனுக் கினியதோர் செம்மல் நிற்புறுந்
               தார்த்தடந் தேர்மிசைத் தனிவந் தெய்தினாள். ......    118

(நோக்கினன் மொய்ம்)

நோக்கினன் மொய்ம்பினான் நோன்மை பூண்டுளான்
     தாக்கணங் காம்இவள் தன்ன தாவியை
          நீக்குதல் செய்வது நீர்மைத் தன்றெனாத்
               தூக்கினன் அவள்வலி தொலைக்க உன்னுவான். ......    119

(இடித்தென உரப்பினன் எண்)

இடித்தென உரப்பினன் எண்கை தன்னையும்
     ஒடித்தன னாமென ஒருகை யாலுறப்
          பிடித்தனன் மற்றொரு பெருங்கை யாலுரத்
               தடித்தனன் காளிவீழ்ந் தவச மாயினாள். ......    120

(கரங்கொடு சேவகன்)

கரங்கொடு சேவகன் கல்லென் றெற்றலும்
     உரங்கிழி வுற்றனள் உமிழ்ந்த சோரிநீர்
          தரங்கம தெறிகடல் தன்னைப் போன்றுலாய்
               இரங்கிய தவள்துயர் யாவர் கூறுவார். ......    121

(எண்கையும் ஒருகை)

எண்கையும் ஒருகையால் ஏந்தல் பற்றியோர்
     ஒண்கையின் நீலிதன் உரத்தில் எற்றலும்
          மண்கிழி வுற்றன வரைகள் கீண்டன
               விண்கிளர் அண்டபித் திகையும் விண்டதே. ......    122

(திரைபெறு கடலென)

திரைபெறு கடலெனக் கான்ற செம்புனல்
     வரைபெறு தனதுமெய் மறைத்த லால்துயர்க்
          கரைபெறல் இல்லவள் காளி என்றுமுன்
               உரைபெறு பெயரையும் ஒழிவுற் றாளரோ. ......    123

(இவ்வகை அவசமாய்)

இவ்வகை அவசமாய் இம்பர் வீழ்ந்தபின்
     ஐவகை உணர்ச்சியும் அனாதி யானவுஞ்
          செவ்விது தொன்மைபோற் சேரச் சூர்மகள்
               வெவ்வலி இழந்துகண் விழித்து விம்மினாள். ......    124

(ஆண்மையின் மேல)

ஆண்மையின் மேலவன் அகலத் தெற்றிட
     ஏண்மையும் வீரமும் இழந்து வீழ்ந்தது
          நீண்மய லானது நினைந்து நெஞ்சிடை
               நாண்மலி வுற்றனள் நடுங்கும் ஆவியாள். ......    125

(அந்தமில் அறுமுக)

அந்தமில் அறுமுகத் தமலன் ஏவலால்
     வந்தவ னொடுபொரின் வாகை எய்துமோ
          புந்தியி லாதிவட் புக்க னன்எனாச்
               சிந்தைசெய் தெழுந்தனள் வன்மை தீர்ந்துளாள். ......    126

(இகழ்ந்தவர் உரத்தி)

இகழ்ந்தவர் உரத்தினை இகழ்ந்து கூர்நகத்
     தகழ்ந்துயி ருண்டிடும் அணங்கு தேர்மிசைத்
          திகழ்ந்தனன் நின்றிடு திறலி னான்றனைப்
               புகழ்ந்தனள் இனையன புகல்வ தாயினாள். ......    127

(கன்றிய கற்புடை)

கன்றிய கற்புடைக் கனலி மாமுகன்
     இன்றெனை அருச்சனை இயற்றி ஏத்தியே
          ஒன்றல வுயிர்ப்பலி யுதவி வேண்டினான்
               நன்றிய தயர்த்திலன் நானிங் கெய்தினேன். ......    128

(உன்னுடை வன்மையும் - 2)

உன்னுடை வன்மையும் உனது வீரமுஞ்
     சின்னமும் உணர்ந்திலன் செருவின் முந்துறீஇ
          நின்னுடன் இகலியிந் நிலைமை யாயின
               இன்னினி ஏகுவன் இருந்த தொல்லிடை. ......    129

(கறுத்தினி வல்லை)

கறுத்தினி வல்லையில் கனன்மு கத்தனை
     ஒறுத்துயிர் உண்குதி ஒழிந்து ளாரையும்
          அறுத்தனை நிற்குதி அலரி தன்னைமுன்
               செறுத்தவன் தன்னையும் அடுதி செம்மல்நீ. ......    130

(அடையலர் தம்மை)

அடையலர் தம்மைவென் றாறு மாமுகம்
     உடையவன் கருணைபெற் றுவகை மேவுதி
          நெடிதுபல் லூழியும் நீடி வாழ்தியால்
               கடைமுறை இவையெலாங் காண்டி நீயென்றாள். ......    131

(இத்திறம் யோகினி)

இத்திறம் யோகினி இசைத்து வெஞ்சமர்
     வித்தகன் விடைகொடு மீண்டு கோளரிச்
          சித்திர வெருத்தமேற் சேர்ந்து தொல்படை
               மொய்த்திடப் போயினள் முந்து வந்துழி. ......    132

வேறு

(சண்டிகை போந்த)

சண்டிகை போந்த காலைத் தழல்முகன் அனைய வெல்லாங்
     கண்டனன் வெகுண்டு நன்றிக் கள்வன தாற்றல் என்னாத்
          திண்டிறல் ஆற்றல் சான்று சேண்கிடந் துருமுக் கான்று
               கொண்டல தெழுந்தா லென்னக் கொம்மென எழுந்து சொல்வான். ......    133

(கொன்றுயிர் பலவும்)

கொன்றுயிர் பலவும் நுங்கிக் குருதியும் வடியும் மாந்தி
     ஒன்றுதன் னகடுதூரா துலப்புறாப் பசிநோய் மிக்குச்
          சென்றிடு காளி யாலோ தெவ்வர்தஞ் செருவை யான்முன்
               வென்றனன் சூரன் சேய்க்குத் துணைகளும் வேண்டு மோதான். ......    134

(சூலமுந் தண்டும்)

சூலமுந் தண்டும் வாளுஞ் சுடர்மழுப் படையுஞ் சீற்றக்
     கோலமுங் கொண்டு பாங்கிற் கூளிகள் சூழ வைகும்
          நீலிதன் வன்மை காண்பான் நினைந்திவண் விளித்த தன்றி
               வேலவன் படையை அன்னாள் வெல்லுமென் றுளங்கொண்டேனோ. ......    135

(வாவியுங் குளனும்)

வாவியுங் குளனும் பொய்தீர் நதிகளும் மற்று மெல்லாந்
     தூவுநுண் பனியா லன்றே துளும்புவ அஃதே போலத்
          தேவரை ஏவல் கொண்ட சிறப்புடைத் தமியேன் இங்ஙன்
               மேவிய காளி யாலோ எய்துவன் வீரத் தன்மை. ......    136

(இன்னினிக் கணம)

இன்னினிக் கணம தொன்றின் இளவலா ருயிரை வௌவி
     முன்னுற அகன்ற ஒற்றன் முரண்வலி அதனைச் சிந்தி
          அன்னவன் ஆவி கூற்றுக் கடிசிலா அளிப்பன் அல்லான்
               மன்னன்முன் போவ தில்லை வஞ்சினம் இஃதே என்றான். ......    137

(கனல்முகன் இனை)

கனல்முகன் இனைய மாற்றங் கழறியே அவுணத் தொல்பேர்
     அனிகம்வந் தயலின் ஈண்ட ஆழியந் தேரிற் சென்று
          வனைதரு சிலையொன் றேந்தி வன்மையால் வாங்கி நூறு
               முனையிரும் பகழி வீர மொய்ம்பன்மேல் தூண்டி ஆர்த்தான். ......    138

(கொடுந்தொழி லாள)

கொடுந்தொழி லாளன் செய்கை குரைகழல் வீரன் காணா
     முடிந்திட வந்தாய் போலும் முயற்சியீ தழகி தென்னா
          நெடுந்தனிச் சிலைகா லூன்றி ஞெரேலென வளைத்துத் தானும்
               அடுந்திறற் கணைநூ றோச்சி அறுத்தனன் அவுணன் வாளி. ......    139

வேறு

(அறுத்தபொழு தத்தி)

அறுத்தபொழு தத்தில்அவு ணர்க்கரசன் மைந்தன்
     மறத்தினொடு நூறுசரம் வாலியன பூட்டிச்
          சிறப்புடைய செம்மலுறு தேரினை யழித்துக்
               குறித்தவிறல் கொண்டுசமர் வால்வளை குறித்தான். ......    140

(தேரழித லும்வெகு)

தேரழித லும்வெகுளி செய்திளவல் ஈரேழ்
     கூரிய நெடும்பகழி கொம்மென விடுத்தே
          ஆரழல் முகத்தவுணன் அங்கையிடை கொண்ட
               மூரிவரி வெஞ்சிலை முரித்தமர் விளைத்தான். ......    141

(வில்லது முரிந்திட)

வில்லது முரிந்திடலும் வேறோர்சிலை வாங்கிக்
     கல்லென வெயிற்றணி கறித்திவனை இன்னே
          கொல்வனெனும் வெய்யமொழி கூறிமண நாறும்
               அல்லிமல ரோன்படையை அண்ணல்மிசை உய்த்தான். ......    142

(அத்தகைமை நோக்கி)

அத்தகைமை நோக்கினன் அயன்படையை யானும்
     உய்த்திடின் எனக்குவரும் ஊதியம்என் என்னாச்
          சித்தமுறு பூசனை செலுத்திவிறல் வீர
               பத்திர நெடும்படையொர் பாணிகொடு விட்டான். ......    143

(வாரிதி வளாகம்)

வாரிதி வளாகம்அரை மாத்திரையின் உண்ணும்
     வீரனெடு வெம்படை விரைந்துபடர் காலை
          நாரணன் மகன்படை நடுங்கிநனி தாழா
               யாருநகை செய்திட இரிந்துளதை யன்றே. ......    144

(அன்னமிசை யோன்)

அன்னமிசை யோன்படை அழிந்திடலும் வீரன்
     தன்னது நெடும்படை தடுப்பில்வகை யேகி
          வன்னிமுகன் ஆவிகொடு மாமுடிகள் தள்ளி
               மின்னுவென வீரனிடை மீண்டுபடர்ந் தன்றே. ......    145

வேறு

(வெய்யஅக் கனல்)

வெய்யஅக் கனல்முகன் விளிந்து வீழ்ந்தனன்
     ஒய்யென அச்செயல் உம்பர் நோக்குறா
          ஐயனை வாழ்த்திநின் றலரின் மாரிதூய்
               மெய்யணி துகிலெலாம் வீசி யாடினார். ......    146

(புறந்தரு கலிங்கமும்)

புறந்தரு கலிங்கமும் பூணும் நாணமும்
     துறந்தனர் உவகையால் சொல்லும் ஆடலர்
          சிறந்துடன் ஆர்த்தனர் தேவர் அற்றைநாட்
               பிறந்திடு மைந்தர்தம் பெற்றி எய்தினார். ......    147

(எரிமுகன் அவ்விடை)

எரிமுகன் அவ்விடை இறப்ப ஆங்கவன்
     பெரும்படை வீரர்கள் புலம்பி யாமெலாம்
          ஒருசிறு தூதனுக் குடைது மோவெனாச்
               செருவினைக் குறித்தனர் உலப்பில் தீமையோர். ......    148

(முற்படுந் தலைவர்)

முற்படுந் தலைவர்கள் மூவெண் ணாயிரர்
     பொற்புடை இளையவன் புடையிற் சுற்றிடாக்
          கப்பணந் திகிரிகோல் கணிச்சி வேல்கதை
               சொற்படு படையெலாஞ் சொரிந்து போர்செய்தார். ......    149

(செய்தது நோக்கியே)

செய்தது நோக்கியே செயிர்த்துச் சேவகன்
     கைதனில் இருந்ததோர் கார்மு கம்வளைஇ
          நொய்தினில் ஆயிர நூறு கோடிகோல்
               எய்தனன் தெழித்தனன் அவுணர் ஏங்கவே. ......    150

(இத்திறங் கணம)

இத்திறங் கணமதொன் றிடைய றாமலே
     கைத்தனு உமிழ்ந்திடுங் கணையின் மாமழை
          உய்த்தனன் திரிந்தனன் உலகம் பேர்த்திடும்
               மெய்த்திறல் மருத்தினும் விரைவின் மேவியே. ......    151

(எறிந்திடு படைகளு)

எறிந்திடு படைகளும் எய்த கோல்களும்
     முறிந்தன துணிந்தன மொய்ம்பு மார்பமுஞ்
          செறிந்திடு கரங்களும் சிரமும் தாள்களும்
               தறிந்தன அவுணர்தந் தலைவர் வீடினார். ......    152

(வேழமும் புரவியும்)

வேழமும் புரவியும் துணிந்து வீழ்ந்தன
     வாழியம் தேர்நிரை அனைத்தும் இற்றன
          சூழுறும் அவுணரும் தொலைந்து போயினார்
               பாழியம் தோளினான் பகழித் தன்மையால். ......    153

(பாறொழுக் குற்றன)

பாறொழுக் குற்றன ககனம் பார்மிசை
     வீறொழுக் குற்றதொல் படைகள் வீந்திடச்
          சேறொழுக் குற்றன தசைகள் செம்புனல்
               ஆறொழுக் குற்றதால் அமர்செய் ஆறெலாம். ......    154

(பலவுடை நெடுந்த)

பலவுடை நெடுந்தலைப் பதகர் துஞ்சலும்
     நிலவுடை எயிற்றிடை நிவந்த தீக்கனல்
          புலவுடை விழுநிணம் புழுக்கல் செய்ததால்
               கலிகெழு கொடியொடு கணமுந் துய்க்கவே. ......    155

(மாமையில் செறிந்த)

மாமையில் செறிந்தன வடிவின் மால்கரி
     தாமயிர்ப் புறவடி தடக்கை வன்றலை
          ஏமயிர்த் தோகையோ டிற்று நீங்குற
               ஆமையிற் போவன குருதி ஆற்றினே. ......    156

(கார்கெழும் அவுண)

கார்கெழும் அவுணருட் கலந்த சோரியின்
     தாரைகள் நீத்தமாய் எழுந்து தக்கவர்
          பேருட லுட்கொடு பெயர்ந்த பின்னுற
               வாரிதி வடவையுண் டுலவு மாண்பென. ......    157

(கரியினும் பரியினு)

கரியினும் பரியினுங் கால்கொண் டோங்கிய
     குருதியம் புனல்மழை குலாவும் வைகலின்
          வரைதொறும் வரைதொறும் மாறு மாறெழா
               அருவிகள் சென்றென அழுங்கிச் செல்லுமால். ......    158

(மீளிகள் குருதிநீர்)

மீளிகள் குருதிநீர் வெள்ள மாயதில்
     வாளுறு வேல்களும் வாளும் மற்றவுங்
          கோளுறு மயிலையிற் குலவக் கண்டுதங்
               கேளிரென் றெதிர்வன கெழும வேலைமீன். ......    159

(அழல்பொரு செக்கர்)

அழல்பொரு செக்கர்வா னகத்தின் மாமதிக்
     குழுவினர் சேர்ந்துறக் குலவுங் கொள்கைபோல்
          நிழல்பொதி கவிகைதந் நெடிய தாளற
               ஒழுகிய குருதியின் ஒருங்கு செல்வவே. ......    160

(அலைகெழு குருதி)

அலைகெழு குருதியா றழுங்குற் றேகலால்
     தலைகளும் உடல்களும் தசையும் வாரிடக்
          கொலைபுரி மறவர்தங் குடரிற் பின்னியே
               வலையெறிந் தீர்த்தனர் வயவெம் பூதரே. ......    161

(ஞாளிகள் திரிவ)

ஞாளிகள் திரிவதோர் மருங்கு நாமவெங்
     கூளிகள் திரிவதோர் மருங்கு கூளியாம்
          மீளிகள் திரிவதோர் மருங்கு வென்றிடும்
               காளிகள் திரிவதோர் மருங்கு கண்ணெலாம். ......    162

(தேரிடை உலந்தவன்)

தேரிடை உலந்தவன் சிரத்துந் துஞ்சிய
     சாரதி தலையினும் புரவி தம்மினுஞ்
          சோரிகள் இழிவன தொலைந்த வையமும்
               ஆருயிர் எய்தியாங் கதுபெற் றென்னவே. ......    163

(சினவலி அவுணர்)

சினவலி அவுணர்தந் திகிரி பூண்டிடு
     துனைவரு கேசரி துஞ்சச் சோரிநீர்
          கனைகட லிடைசெலக் கண்டு தேரைதம்
               இனமென எதிர்தழீஇ யிரங்கு கின்றவே. ......    164

(விரிந்தஇத் திறமியல்)

விரிந்தஇத் திறமியல் வெங்க ளத்திடை
     இரிந்திடு தானவர் இறந்து நீங்கினார்
          கருந்தலை அடுக்கலிற் கழல்கள் தாக்குறத்
               திரிந்தனர் அயர்ந்தனர் சிலவர் துஞ்சினார். ......    165

(மழுக்களும் அயில்)

மழுக்களும் அயில்களும் வாளும் முத்தலைக்
     கழுக்களுங் கால்படக் கவலுற் றார்சிலர்
          விழுக்கொடு வள்ளுரம் விராய பூழியில்
               இழுக்கினர் அழுந்தினர் இறந்துற் றார்சிலர். ......    166

(பாய்ந்திடு குருதியம் பர)

பாய்ந்திடு குருதியம் பரவை ஆற்றிடை
     நீந்தினர் ஒருசிலர் நீந்திக் காலெழா
          தோய்ந்தனர் ஒருசிலர் ஓடி னார்சிலர்
               மாய்ந்தனர் ஒருசிலர் மாய வீரரே. ......    167

(காண்டொறுங் காண்)

காண்டொறுங் காண்டொறும் அவுணர் கண்ணிடை
     ஈண்டிய வெள்ளிடை இளவல் மேனியாய்
          நீண்டதொர் பையுளாய் நிகழ ஏங்கியே
               மாண்டனர் சிலர்சிலர் வாய்வெ ரீஇயினார். ......    168

(துப்புறு பூதர்பின்)

துப்புறு பூதர்பின் தொடரத் தாடொழா
     மெய்ப்படை முழுவதும் வீசி ஆயிடைத்
          தப்பினர் இறுதியில் சாய்ந்து மாய்ந்தவர்
               கைப்படை வாங்கியே கடிதுற் றார்சிலர். ......    169

(எண்ணமில் படை)

எண்ணமில் படைக்கலம் யாவும் வீசியே
     தண்ணுமை வரிதுடி தக்கை பேரியாம்
          பண்ணமை இயம்பல பற்றி ஆர்த்திடா
               நண்ணினர் நடுவனை நடுக்குந் தானவர். ......    170

(பரிக்குவை அரிக்கு)

பரிக்குவை அரிக்குவை படைத்த மாமுகத்
     திரக்கமில் அவுணர்கள் இரத்தத் தில்தம
          நெருக்குறு சிரத்தொகை நீட்டி மெய்யெலாங்
               கரக்குநர் ஒருசிலர் உயிரின் காதலார். ......    171

(சூளுறு போரிடை)

சூளுறு போரிடைத் தொலைந்து போகியே
     நீளிகல் உறுகிலா நிருதர் சம்புவாய்
          ஆளுடை வயவர்ஊன் அருந்த ஆயிடை
               ஞாளிகள் கவர்தலும் நடுக்குற் றார்சிலர். ......    172

(தீயினை முருக்கு)

தீயினை முருக்குறுந் திறல்வெம் பூதர்கள்
     தாயினர் தொடர்தலுஞ் சாய்ந்து ளோர்சிலர்
          நாயின துருக்கொடு நடக்க ஞாளிகள்
               ஆயின அடர்த்தலும் அஞ்சி னார்சிலர். ......    173

(விசையொடு சாரதர்)

விசையொடு சாரதர் விரவ வேற்றுரு
     இசைகிலர் இறந்தவர் இனத்துள் மேயினார்
          தசைகவர் ஞமலிகள் தலைச்சென் றீர்க்கவும்
               அசைவில ராகியே அழுங்கி னார்சிலர். ......    174

(புண்டரு குருதிநீர்)

புண்டரு குருதிநீர் புறத்துச் சிந்திட
     மண்டமர் தன்னிடை மாண்ட கேள்வரைக்
          கண்டிலர் சிரந்தெரீஇக் கவன்ற ரற்றிய
               ஒண்டொடி மாதரின் உலவி னார்சிலர். ......    175

(சூர்த்திடு நோக்கொடு)

சூர்த்திடு நோக்கொடுந் துண்ணென் றெய்தியே
     ஆர்த்திடு பூதர்வந் தணுக வாய்வெரீஇ
          வேர்த்துடல் பனிப்பவீழ்ந் துதைத்தும் வெய்யதாள்
               பேர்த்திடல் இன்றியும் பேதுற் றார்சிலர். ......    176

(அழிதரு வோர்தமை)

அழிதரு வோர்தமை அவரின் முன்னரே
     கழிதரும் உயிரினர் கணங்க ளாகிவிண்
          வழிதரு செலவினில் வந்து பற்றியெம்
               பழிதரு வீரெனப் பணிக்கின் றார்சிலர். ......    177

(வல்விரை பறவை)

வல்விரை பறவையை நோக்கி மற்றவட்
     செல்லுதிர் பூதர்கள் தெரியத் கண்டிரேல்
          இல்லையிந் நெறிதனில் இறந்து ளோரெனச்
               சொல்லுதிர் நீரெனத் தொழுகின் றார்சிலர். ......    178

(காசினி அதனிடை)

காசினி அதனிடைக் கவிழ்ந்த கேள்வரை
     ஆசையி னொடுதழீஇ அலமந் தேங்கிய
          பாசிழை மாதரிற் பரவப் பூதர்கள்
               நாசியீர்ந் திடுதலும் நாணுற் றார்சிலர். ......    179

(அடல்கெழு தூத)

அடல்கெழு தூதனால் அவுணர் யாவருங்
     கெடுவது திண்ணம்யாங் கெடுகி லோமெனாக்
          குடர்கெழு சோரியங் குடிஞைக் கண்ணுறீஇக்
               கடலுறு வரையினுட் கலந்து ளார்சிலர். ......    180

(சாரதர் குழுவினை)

சாரதர் குழுவினைத் தப்பித் தத்தம
     தாருயிர் உய்ந்தபின் அங்கண் மாண்டவர்
          சோரிய துரமிசை துதையப் பூசியே
               வீரர்கள் இவரென மேவு வார்சிலர். ......    181

(இவ்வகை துஞ்சினர்)

இவ்வகை துஞ்சினர் அன்றி எண்ணிலா
     வெவ்வலி அவுணர்கள் வெருவி ஓடலும்
          மைவரு நெறிமுயல் மகேந்தி ரப்புரங்
               கௌவையின் அரற்றின கடலு டைந்தபோல். ......    182

(அங்கது பொழுதினி)

அங்கது பொழுதினில் ஆடல் முற்றியே
     செங்களம் நடுவுறு செம்மல் தன்புடை
          எங்கணும் நீங்கிய இலக்க வேந்தருஞ்
               சங்கையில் பூதருந் தலைச்சென் றீண்டினார். ......    183

(எரிந்திடு கனல்முகன்)

எரிந்திடு கனல்முகன் எய்த வெஞ்சரம்
     உரந்தனை யகழ்ந்திட ஒருதன் வன்மைபோய்
          அரந்தையின் மூழ்கியே அழிந்த வீரமா
               புரந்தரன் எழுந்தொரு புடையில் எய்தினான். ......    184

(புண்டர நீறணி)

புண்டர நீறணி புனிதன் பாங்கரின்
     மிண்டினர் இவரெலாம் மேவி நிற்றலும்
          எண்டகும் இளையவர் எழுவர் தம்மையுங்
               கண்டிலன் கவன்றனன் கழறல் மேயினான். ......    185

(ஆண்டகை வீரர்கள்)

ஆண்டகை வீரர்கள் அடைய லார்க்கெதிர்
     மூண்டமர் இயற்றிய மூவர் நால்வரும்
          மாண்டன ரேகொலோ மயங்கி னார்கொலோ
               ஆண்டவர் கிடந்தனர் இயம்பு வீரென்றான். ......    186

(என்றலும் உக்கிரன்)

என்றலும் உக்கிரன் என்னுஞ் சாரதன்
     உன்றுணை யார்களை ஒன்ன லன்மகன்
          கொன்றனன் அவருயிர் கூற்றும் வௌவினான்
               பொன்றிய வைப்பினைப் புகலக் கேட்டியால். ......    187

(இம்பரின் முன்னுற)

இம்பரின் முன்னுற இயம்பும் யோசனை
     ஐம்பதிற் றிரண்டின்மேல் ஆலம் ஒன்றுள
          தும்பருஞ் சிறிதென ஓங்கும் ஆயிடைத்
               தம்பியர் மாய்ந்தனர் சரத மேயென்றான். ......    188

(உக்கிரன் இனையன)

உக்கிரன் இனையன உரைப்ப யாரினும்
     மிக்கவன் வினவியே விழும நோயுறீஇப்
          பக்கம தாயினர் படர ஏகினான்
               தொக்குறும் இளைஞர்கள் துஞ்சும் எல்லைவாய். ......    189

வேறு

(ஓசனை நூறு நீங்கி)

ஓசனை நூறு நீங்கி ஒலிகழல் வீரன் எய்தப்
     பாசிலை வடத்தின் பாங்கே பரிவுடைத் தம்பி மார்கள்
          காய்சின அங்கி செங்கண் கான்றிடக் களேவ ரத்து
               வாசமென் பள்ளி மீது மாய்ந்தனர் கிடப்பக் கண்டான். ......    190

(கண்டனன் விழிகள்)

கண்டனன் விழிகள் செந்நீர் கான்றிட வீழ்ந்து புல்லிக்
     கொண்டனன் இளைஞர் தம்மைக் கூவினன் அரற்றிச் செவ்வாய்
          விண்டனன் உயிர்த்து மேனி வியர்த்தனன் வீரன் ஆவி
               உண்டில தென்னச் சோர்ந்தான் உணர்ந்துபின் இரங்க லுற்றான். ......    191

(தம்பிமீர் தம்பி மீர்)

தம்பிமீர் தம்பி மீர்என் றுரைத்திடும் தழுவிக் கொள்ளீர்
     எம்பிமீ ரென்னும் ஐயோ எங்ஙனஞ் சென்றீ ரென்னும்
          வெம்பினேன் என்னும் என்னை விட்டகன் றீரோ என்னும்
               நம்பினேன் உம்மை என்னும் நானுமக் கயலோ என்னும். ......    192

(அங்கிமா முகனே)

அங்கிமா முகனே நும்மை அடல்செய வல்லான் என்னும்
     இங்குநீர் முடிந்தீர் என்றால் என்செய்வன் தமியேன் என்னும்
          துங்கவெம் படைகள் ஏந்திச் சூழ்ந்துடன் துணையாய் வந்த
               உங்களைத் தோற்றி யானே உய்ந்தனன் போலும் என்னும். ......    193

(அம்மவோ விதியே)

அம்மவோ விதியே என்னும் ஆதகா துனக்கீ தென்னும்
     இம்மெனச் செல்லா தின்னும் இருத்தியோ உயிரே என்னும்
          செம்மைகொள் குணத்தா ரோடு பிறப்பரே சிலரிங் கென்னும்
               எம்மையா ளுடைய வள்ளற் கென்னினி உரைக்கேன் என்னும். ......    194

(சீரிள மைந்தர்)

சீரிள மைந்தர் துஞ்சச் சிலையொடு திரிவேன் என்னின்
     ஆரெனக் கொப்புண் டம்மா அழகிதென் னாற்றல் என்னும்
          சூரர்தங் கிளையை எல்லாந் துண்ணெனச் சென்று சுற்றி
               வேரொடு முடித்தால் அன்றி அகலுமோ வெகுளி யென்னும். ......    195

(துப்புடை வில்லின்)

துப்புடை வில்லின் கல்வித் துணைவர்கள் ஈண்டு துஞ்ச
     வெப்படை தூண்டி னானோ எரிமுகத் தவுணன் என்னும்
          அப்படை நல்கு தேவர் ஆர்கொலோ அறியேன் என்னும்
               மெய்ப்படை வேலி னாருக் கடியரோ வினையேம் என்னும். ......    196

(அடுவனோ அவுணர்)

அடுவனோ அவுணர் சூழ்வை என்றிடும் அனலி உண்ண
     விடுவனோ இவ்வூர் என்னும் எந்தைதன் படையைச் சூர்மேல்
          விடுவனோ என்னும் அந்தோ அஞ்சினேன் வேலுக் கென்னும்
               படுவனோ துயரத் தென்னுஞ் செய்வதென் பாவி என்னும். ......    197

(ஒன்றிய துணைவர்)

ஒன்றிய துணைவர் தம்மை ஒருங்குடன் படுத்த நீரால்
     இன்றமர் செய்து பட்ட எரிமுகன் தன்பால் அன்றோ
          வென்றிய தென்னும் என்றன் வீரமா சுண்ட தென்னும்
               பொன்றிலன் அளியன் போலப் புலம்பினன் வறிதே என்னும். ......    198

(வில்லினைப் பார்க்கும்)

வில்லினைப் பார்க்கும் செங்கேழ் வேலினைப் பார்க்கும் ஏனை
     மல்லலம் படையைப் பார்க்கும் வாளியைப் பார்க்கும் வீரச்
          சொல்லினைப் பார்க்கும் வந்து சூழ்தரு பழியைப் பார்க்கும்
               கல்லென எயிற்றின் பந்தி கறித்திடும் கவலு மன்றே. ......    199

(அருந்துயர் எய்தி)

அருந்துயர் எய்தி இவ்வா றழுங்கினோன் எளிய னாகி
     இருந்தனன் அல்லன் ஏங்கி யாதுமோர் செயலும் இன்றி
          வருந்தினன் அல்லன் கானின் மருந்தினுக் குழன்றான் அல்லன்
               விரைந்துதன் இளையர் தம்மை எழுப்பவோர் வினையங் கொண்டான். ......    200

(நாற்றலை யுடை)

நாற்றலை யுடைய அண்ணல் நாரணன் முதலோர் நல்க
     ஏற்றிடு படையில் ஒன்றை இளையர்கள் எழுவர் மீது
          மாற்றலன் விடுத்தான் என்னின் மற்றவர் ஆவி உண்டோன்
               கூற்றுவன் அன்றோ என்னாக் குறித்திவை கூற லுற்றான். ......    201

வேறு

(ஊனோ டாவி)

ஊனோ டாவிக் கின்பம் விரும்பி உழல்கின்ற
     வானோ ரேபோல் தானவ ரேபோல் வழிசெல்லா
          ஏனோ ரேபோல் எண்ணின னேகொல் எமர்ஆவி
               தானோ உண்பான் கூற்றுவன் என்னும் தமியோனே. ......    202

(விரியுமு ணர்ச்சி)

விரியுமு ணர்ச்சியை மாற்றுவ தல்லால் விண்ணோர்கள்
     ஒருபடை தானும் நங்கள் இனத்தை உயிருண்ணா
          தெரிமுக னென்பான் அட்டனன் அன்றே இளையோரைத்
               தரியல னாகிக் கொன்றவ னம்மா தானன்றோ. ......    203

(போதத் துக்கோர்)

போதத் துக்கோர் வைப்பிட மாயோர் பொறியாகி
     மூதக் கோர்எண் டாரக மூல மொழிகேட்டு
          வேதத் தோனை வெஞ்சிறை பூட்டி விதியாற்றும்
               ஆதித் தேவன் தம்பியர் என்ப தறியானோ. ......    204

(ஆறுட் பட்ட ஐயிரு)

ஆறுட் பட்ட ஐயிரு காலத் தரன்நாமங்
     கூறிட் டோவாச் சேய்உயிர் வவ்வக் குறுகுங்கால்
          சீறித் தாளால் தாக்கிய சின்னஞ் சிறிதுந்தான்
               மாறிற் றில்லைக் கூற்றது தானும் மறந்தானோ. ......    205

(சீலந் தன்னால்)

சீலந் தன்னால் ஒர்விழு போதைச் சிவனுக்கென்
     றோலங் கொண்டே விண்ணிடை புக்கோன் உயிர்வௌவிச்
          சூலந் தன்னிற் கண்ணுதல் ஏற்றச் சுழலுற்றுக்
               காலன் பன்னாள் தூங்கிய வண்ணங் காணானோ. ......    206

(நஞ்சிற் றீயன்)

நஞ்சிற் றீயன் வேட்டுவன் அன்றோர் நாள்முற்றும்
     துஞ்சற் றூணற் றரன்மிசை வில்வந் தூர்த்தோனை
          வெஞ்சொற் கூறிப் பற்றலும் யாங்கண் மிகஎற்ற
               அஞ்சித் தன்தூ தாயினர் போன தறியானோ. ......    207

(அக்கா லத்தின்)

அக்கா லத்தின் எல்லையின் மைந்தற் கரவென்றே
     முக்கா லோதித் தீமை குறித்தே முடிவோனை*1
          மெய்க்கா லன்தூ தாயினர் பற்ற விடுவித்தேம்
               இக்கால் கொண்டே அவரை உதைத்தேன் யானன்றோ. ......    208

(மெச்சியல் கொள்ளா)

மெச்சியல் கொள்ளாத் துன்மதி யாலும் மிகவெய்ய
     துச்சக னாலும் ஏனைய ராலுந் தொன்னாளின்
          இச்சக மாற்றுந் தன்னிறை நீங்கி இடரெய்தி
               அச்ச முழந்தே பட்டது சண்டன் அயர்த்தானோ. ......    209

(நீறு முகத்தார்)

நீறு முகத்தார் கண்டிகை பூண்டார் நிமலன்பேர்
     கூறு முகத்தார் தம்புடை செல்லக் குலைகூற்றன்
          ஆறு முகத்தான் அடியவர் ஆவி யலைத்தானே
               சேறு முகத்தாழ் கரியை யடாதோ சிறுபுள்ளும். ......    210

வேறு

(என்னு மாற்றங்கள் இய)

என்னு மாற்றங்கள் இயம்பியே இளையவன் எழுந்து
     பின்னர் யாத்திடு தூணியில் ஒருசரம் பிடுங்கித்
          தன்ன கங்கொடே யன்னதன் தலைதனில் தரும
               மன்னர் மன்னவன் கண்டிட இத்திறம் வரைவான். ......    211

(வேலு டைத்தனி)

வேலு டைத்தனி நாயகற் கிளையவன் விடுத்தேன்
     கால நாடுறு கூற்றுவ னென்பவன் காண்க
          கோல வெஞ்சிலைத் துணைவர்தம் ஆருயிர் கொண்டாய்
               வாலி தோவிது விடுக்குதி கடிதென வரைந்தான். ......    212

(செந்ந லங்கிளர்)

செந்ந லங்கிளர் தன்னகத் தின்னவா தீட்டிப்
     பொன்னெ டுஞ்சிலை வாங்கியப் பகழியைப் பூட்டிப்
          பன்னி ரண்டுதோள் விமலனை மனங்கொடு பரவி
               மின்னெ னச்சென்றி யமபுரம் புகும்வகை விடுத்தான். ......    213

(கரந்தை சூடுவான் திரு)

கரந்தை சூடுவான் திருமகற் கிளையவன் கணைமுன்
     விரைந்து தெண்கடல் ஏழையுங் கடந்துவிண் ணோங்கி
          இருந்த மானசோத் தரகிரித் தென்புறத் தியம
               புரந்த னிற்சென்று மறலிதன் முன்புபோந் ததுவே. ......    214

(தொடுத்த அக்க)

தொடுத்த அக்கணை அந்தகன் முன்புதுண் ணெனப்போய்
     அடுத்து வீழ்தலும் விம்மிதம் எய்தியே அவன்சென்
          றெடுத்து நோக்கினன் வீரவா குப்பெயர் இளவல்
               விடுத்த தாகலு முற்றுற உணர்ந்தனன் விரைவில். ......    215

(அயில்நெ டுங்கணை)

அயில்நெ டுங்கணைப் பாசுரத் தகலம துணர்ந்து
     துயரு ழந்தஞ்சி ஈண்டிலர் இளையவன் துணைவர்
          பயில எங்ஙனஞ் சென்றன ரோவெனப் பார்த்தான்
               கயிலை யேகியே இருப்பதா உணர்ச்சியிற் கண்டான். ......    216

(கண்டு தேறினன்)

கண்டு தேறினன் கடாமிசை ஏறினன் கடுங்கால்
     கொண்ட தானைகள் சூறையங் காலெனக் குழுமப்
          பண்டு தானுறை பதியினை நீங்கினன் படரா
               அண்டர் நாயகன் கயிலையஞ் சாரலை யடைந்தான். ......    217

(ஆன காலையில் ஆயிடை)

ஆன காலையில் ஆயிடைப் பொதும்பரொன் றதனின்
     மான வேற்படை அவுணர்தம் படைகளின் மாண்ட
          சேனை வீரர்கள் சூழ்தர எழுவருஞ் சிறந்து
               கான விஞ்சையர் பாடல்கேட் டிருப்பது கண்டான். ......    218

(தொழுது மற்றவர்)

தொழுது மற்றவர் முன்னுற மறலிபோய்த் துன்னி
     முழுது ணர்ந்துளீர் நுங்களை நாடுவான் முன்னோன்
          அழகி தென்றிவண் இருப்பதென் என்னையும் அயிர்ப்பான்
               எழுவி ருங்கடி தெழுவிர்இப் பூதரோ டென்றான். ......    219

(என்ற காலையின் எழுவரு)

என்ற காலையின் எழுவரும் எழுந்திரு மருங்கு
     நின்ற பூதர்கள் யாவரும் போந்திட நீங்கி
          ஒன்றொர் மாத்திரை ஒடுங்குமுன் அவுணர்கோன் உறையும்
               மன்றல் மாநகர் அடுகளம் புக்கனர் மன்னோ. ......    220

(புக்க காலையின்)

புக்க காலையின் எழுவரும் தம்முடல் புகுந்தார்
     மிக்க பாரிடத் தலைவர்கள் யாவரும் விரைவில்
          தொக்கு வீழ்தரு மியாக்கைகள் உற்றனர் சுரர்கள்
               அக்க ணந்தனிற் பூமழை தூவிநின் றார்த்தார். ......    221

(இன்ன வேலையின்)

இன்ன வேலையின் எழுவரும் பதைபதைத் தெழுந்து
     முன்ன வன்றன தடிக்கம லங்களை முறையால்
          சென்னி தாழ்வுற வணங்கினர் செங்கையால் எடுத்துப்
               பொன்னின் மார்புறப் புல்லினன் எல்லைதீர் புகழோன். ......    222

(புல்லி னான்இள)

புல்லி னான்இள வீரரைப் புயங்கமுண் டுமிழ்ந்த
     எல்லி னானென விளங்கினான் அவுணரை இனிநான்
          வில்லி னால்அடல் செய்வதோ அரிதென விறலும்
               சொல்லி னான்மகிழ் வாயினான் புன்கணும் தொலைந்தான். ......    223

(எண்ட குந்திறல்)

எண்ட குந்திறல் எழுவரும் பிறரும்உய்ந் தெழுதல்
     கண்டு வீரமா புரந்தர னுங்கணத் தவரும்
          திண்டி றற்புனை இலக்கரும் உவகையிற் சிறந்து
               கொண்டல் கண்டிடு சாதகம் போல்உளங் குளிர்ந்தார். ......    224

(அன்ன தாகிய)

அன்ன தாகிய எல்லையில் கூற்றனும் அனிகம்
     துன்ன ஆயிடை வந்தனன் இளவலைத் தொழுது
          மின்னு லாவிய வேலினாய் தமியனை வெகுண்டாய்
               முன்னி கழ்ந்திடு வரன்முறை கேளென மொழிவான். ......    225

(எழுதி றத்தரும்)

எழுதி றத்தரும் இங்ஙனம் தம்முடல் விட்டுக்
     குழுவி னோடுபோய்க் கயிலையஞ் சாரலில் குறுகி
          வழிப டுஞ்சில பூதரும் சுற்றிட வதிந்தார்
               அழிபெ ருந்துயர் உழத்தலில் தெரிந்திலை அதனை. ......    226

(அங்க மீதினில்)

அங்க மீதினில் நீறுகண் டிகையினை அணிந்தார்
     தங்கள் பாலினுஞ் செல்லுதற் கஞ்சுறுந் தமியேன்
          இங்கு நின்இளை யார்உயிர் கொள்வனோ எவரும்
               வெங்க கனற்பொறி யுண்பரோ பசிப்பிணி மிகினும். ......    227

(வினைய முன்னி)

வினைய முன்னிநீ விடுகணை நோக்கியான் வெள்ளித்
     தனிவ ரைப்பெருஞ் சாரலில் போந்துசா ரதரோ
          டுனது தம்பியர் தங்களை விளித்திவண் உய்த்தேன்
               முனிவு கொள்ளலை ஐயஎன் னிடையென மொழிந்தான். ......    228

(அந்த கன்மொழி)

அந்த கன்மொழி வினவலும் ஐயனுக் கிளவல்
     நந்து யர்க்கடல் சுவற்றினை கயிலையின் நமர்கள்
          வந்த தன்மையைத் தேற்றில மயங்கியீண் டுற்றாம்
               புந்தி கொள்ளலை யாவது நீயெனப் புகன்றான். ......    229

(புகல லுற்றபின்)

புகல லுற்றபின் விடைகொண்டு கூற்றெனும் புத்தேள்
     உவகை தன்னொடு தன்புரத் தேகினன் ஒன்னார்
          இகலை வெஃகியே பூதரும் துணைவரும் ஏத்த
               நிகரி லாதவன் அன்னதோர் களத்திடை நின்றான். ......    230

(நின்று மற்றிவை)

நின்று மற்றிவை நாடிய ஒற்றர்நீள் நகரில்
     சென்று சூரனைத் தொழுதுநின் மதலைபோர் செய்து
          வென்றி மொய்ம்பினன் விடுத்திடு வீரன்மாப் படையால்
               பொன்றி னான்பொடி யாகிவீழ்ந் தனனெனப் புகன்றார். ......    231

வேறு

(அக்கா லைதனில்)

அக்கா லைதனில் அவுணர்க் குளெலாம்
     மிக்கான் புவியின் மிசைவீழ்ந் தயரா
          எக்கா லுமுறா தவிடர்க் கடலுட்
               புக்கான் மெலிவோ டுபுலம் புறுவான். ......    232

(உண்ணே யமதாம்)

உண்ணே யமதாம் உயிரே உறவே
     கண்ணே மணியே கனல்மா முகனே
          விண்ணே கினையோ இவண்மீள் கிலையால்
               எண்ணேன் உயிர்வாழ்க் கையையிங் கினியே. ......    233

(எந்தைக் கிளையான்)

எந்தைக் கிளையான் தனையிந் நகரின்
     வந்துற் றதொர்தூ தன்மலைந் திடலான்
          நொந்துற் றனைமெய் யுநுடங் கினையால்
               அந்தத் துயர்இங் ஙனமா றியதோ. ......    234

(தேறா இகல்செய்)

தேறா இகல்செய் திடுதே வரெலாம்
     மாறா மகிழ்வுற் றிடவைத் துமனத்
          தாறா இடர்என் வயின்ஆக் கினையால்
               கூறாய் இதுவுங் குமரற் கியல்போ. ......    235

(காரோ திமரு)

காரோ திமருங் குளகா ரணனோ
     சீரோ திமனோ திருமா லவனோ
          நேரோ தியவொற் றடநீ முடிகென்
               றாரோ தினரோ அதறிந் திலனே. ......    236

(பொய்விட் டிடுதூ)

பொய்விட் டிடுதூ துவர்போ ரிடைநீ
     மெய்விட் டனையென் றுவிளம் பினரால்
          நெய்விட் டவயிற் படைநே ரலன்முன்
               கைவிட் டெனையே குவதுன் கடனோ. ......    237

(தூதா னவன்வா ளிது)

தூதா னவன்வா ளிதுணித் திடவிண்
     மீதே கினையென் றுவிளம் பினர்அப்
          போதே அதுணர்ந் துபொறுத் தனனால்
               ஏதே துபொறா தினமென் னுயிரே. ......    238

(ஆவா தமியேன்)

ஆவா தமியேன் அயர்வுற் றிடவே
     மூவா இளமைந் தமுடிந் தனையே
          ஓவா துமகப் பெறவோங் குதவத்
               தேய்வார் களுமுண் டுகொல்இன் னமுமே. ......    239

(எல்லே உனைநம்)

எல்லே உனைநம் புவதென் அகல்வாய்
     சொல்லே துமுரைத் திலைதுன் புறுவேன்
          கல்லே புரைநின் கவின்மார் பதனை
               வல்லே தழுவிக் கொளவந் தருளே. ......    240

(செய்யாய் கரியாய்)

செய்யாய் கரியாய் திருவே சிறுவா
     மெய்யா ருயிரே விடலாய் அடல்வேற்
          கையாய் அரசே களிறே தமியேற்
               கையா வெனைநீ யும்அயர்த் தனையோ. ......    241

(என்றின் னனபன்)

என்றின் னனபன் னியிரங் குதலும்
     நன்றன் னையதோர்ந் துநடுக் கமுறாத்
          துன்றுந் துயரக் கடல்துன் னினளால்
               அன்றந் நகர்மிக் கதழுங் குரலே. ......    242

ஆகத் திருவிருத்தம் - 6435




*1. ஒரு வேடன் தன் மகனுக்கு இறுதிக்காலத்தில், ஆகா (பிடுங்கு), பிரகா (அடி), சங்கர (கொல்) என்னும் சொற்களைக் கூறி, அதன்படி நட என்று கட்டளையிட்டு மாண்டான். அச் சொற்கள் தீமை குறித்தனவாயினும் சிவநாமம் அடங்கப் பெற்றமையால் அவன் சிவகதி அடைந்தான் என்பது இங்குக் குறித்த வரலாறாகும்.



previous padalam   8 - அக்கினிமுகாசுரன் வதைப் படலம்   next padalamAkkinimugAsuran vadhaip padalam

previous kandam   4 - யுத்த காண்டம்   next kandam4 - yudhdha kANdam

காண்டம் - படலம் பட்டியலுக்கு அகர வரிசையில் முதற்குறிப்புக்கு செய்யுள் முதற்குறிப்பு pdf வடிவம்

kANdam - padalam List Tamil alphabetical index verse index pdf version

Kandha Puranam - The Story of Lord Murugan

Sri Kachchiappa Sivachariyar

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 
Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] .[css]