(ஏயின பான்மையின்)
ஏயின பான்மையின் இவன்மூதூர்
மாய்தரும் எல்லையின் வருகின்ற
ஆயிர வாகுள அடல்வீரர்
மேயின தன்மை விளம்புற்றாம். ......
1(ஓலம் உடைக்கடல்)
ஓலம் உடைக்கடல் உமிழ்கின்ற
நீல விடத்தினை நிகர்மெய்யார்
மாலை யுடைப்பல வடவைத்தீக்
கோல மெனச்சிகை கொண்டுற்றார். ......
2(தீங்களி றாதிய)
தீங்களி றாதிய திறல்மாக்கள்
தாங்குவை யோடு தலைப்பெய்தே
ஆங்குள சோரி அறாதீமப்
பாங்கர்கள் அன்னதொர் பகுவாயார். ......
3(எல்லையில் நேமிகள்)
எல்லையில் நேமிகள் யாவுந்தாம்
ஒல்லொலி நீரின் உடைந்தென்னக்
கல்லுறை சிந்து கருங்கொண்மூச்
செல்லென ஆர்த்தனர் செல்கின்றார். ......
4வேறு(மைவரு நீல வரை)
மைவரு நீல வரைத்தொகை தாங்கும்
மொய்வரு கின்ற முடிக்குழு வென்ன
ஐவகை நூற்றின் அமர்ந்தகல் வானைத்
தைவரு கின்ற தலைத்தொகை கொண்டார். ......
5(மராமர மானவை)
மராமர மானவை மாதிர மெங்கும்
பராவ விடுத்திடு பலகவ டென்ன
விராவிய அங்கத மேவி விளங்கும்
ஒராயிர மாகிய ஒண்புய முள்ளார். ......
6(எழுக்கொடு முத்தலை)
எழுக்கொடு முத்தலை எஃகம்வில் நாஞ்சில்
கழுக்கடை சங்கொடு கப்பணம் வெவ்வாள்
மழுக்கதை சக்கரம் வச்சிர மாதி
விழுப்படை யாவும் விராவிய கையார். ......
7(எண்டகு நேமிகள்)
எண்டகு நேமிகள் ஏழும் அளக்கர்
மண்டல மானவு மன்னுயிர் யாவுங்
கொண்டிடி னுங்குறை வின்றி நிரம்பா
தண்டம தென்ன அகன்ற வயிற்றார். ......
8(விழுமிய பஃறலை)
விழுமிய பஃறலை வெம்பணி யேனைக்
குழுவொடு போற்றினர் கொண்டுற லாற்றா
தழுதிட நாடிய தற்கயர் வார்போல்
கழல்கள் அரற்று கழற்றுணை கொண்டார். ......
9(இருபுயம் ஓர்முகம்)
இருபுயம் ஓர்முகம் எய்திய வானோன்
ஒருவனை வெல்ல ஒராயிர ரானேம்
பொருவகை சென்றிடல் புன்மைய தென்னா
வருபழி யுன்னி மனந்தளர் கின்றார். ......
10(மாகர வான்முன)
மாகர வான்முன மாயையின் வந்தான்
ஆகையி னால்இவன் ஐதென வானிற்
போகுவ னால்இது பொய்யல வல்லே
ஏகுமின் ஏகுமின் என்றுசெல் கின்றார். ......
11(மீளிகை யாலெறி)
மீளிகை யாலெறி மேதகு வேர
மாளிகை கோபுர மண்டபம் வீழ்வ
காளிக ரன்னக ரங்கள்கொ டேற்றுத்
தூளிகள் செய்தனர் தூர்த்திடு கின்றார். ......
12(எய்யென மெய்யிடை)
எய்யென மெய்யிடை எங்கும் வியர்ப்பச்
செய்யன கண்வழி செந்தழல் சிந்த
வெய்ய உயிர்ப்பெழ வேர்வுள மூள
ஒய்யென ஓடினர் உற்றிடு கின்றார். ......
13(நாகர் தமக்கொர்)
நாகர் தமக்கொர் நமன்றனை யன்னோர்
ஆகிய ஆயிரர் ஆயிர மொய்ம்பர்
வேகம தாகி விழுத்தகு வீர
வாகுவை எய்தி மடங்கலின் ஆர்த்தார். ......
14(ஆர்த்திடும் ஓதை அகன்)
ஆர்த்திடும் ஓதை அகன்செவி செல்லத்
தார்த்தொகை தூங்கு தடம்புய வீரன்
பார்த்தனன் மூவெயில் பண்டெரி செய்த
தீர்த்தனெ னச்சிறி தேநகை செய்தான். ......
15(மேனிமிர் மந்தர)
மேனிமிர் மந்தர வெற்பென நின்றே
வானள வோங்கு மராமரம் ஒன்றைத்
தேனினம் வான்றிசை சிந்தி யரற்ற
ஊன்முதிர் கைகொ டொசித்தனன் மன்னோ. ......
16(அண்டம் இருண்டி)
அண்டம் இருண்டிட ஆதவ ரானோர்
மிண்டிய பேரொளி வீந்திட வீரன்
வண்டழை துன்று மராமரம் அங்கை
கொண்டது பன்முறை கொட்புறல் செய்தான். ......
17வேறு(மாயிர மருப்புள)
மாயிர மருப்புள மராமரம் இறுத்தே
தூயன்அம ராடல்முயல் தொன்னிலைமை நோக்கி
ஆயிரம் அடுத்தபுயர் ஆயிரரும் அங்கண்
மூயினர்கள் அண்ணலை முரட்படை சொரிந்தார். ......
18(தொடுத்தனர்கள் வார்)
தொடுத்தனர்கள் வார்கணைகள் தொட்டனர்கள் வைவேல்
எடுத்தபல தோமரம் எறிந்தனர்கள் ஆலம்
விடுத்தனர்கள் முத்தலை வியன்கழுமுள் உய்த்தார்
அடற்குலிசம் வீசினர்கள் ஆழிகள் துரந்தார். ......
19(இப்பரிசி னுள்ள)
இப்பரிசி னுள்ளபடை யாவுமுறை தூங்கு
மைப்புயல்க ளென்னவரை வின்றிவிரை வாக
ஒப்பரிய வீரன்மிசை உய்த்திடலும் அன்னோன்
துப்பொடு மரந்தனி சுழற்றிஅடல் உற்றான். ......
20(விட்டபடை யாவை)
விட்டபடை யாவையும் வெறுந்துகள வாகப்
பட்டிட மரங்கொடு பராகமவை செய்ய
உட்டெளிவின் மானவர் ஒராயிரரும் வீரற்
கிட்டினர் வளைந்தனர் கிளர்ந்தமர் முயன்றார். ......
21(ஒட்டியம ராடிய)
ஒட்டியம ராடிய ஒராயிரவர் தாமுங்
கெட்டிரிய மேருநிகர் கேழ்கிளர் புயத்தோன்
மட்டுநனை வார்சினை மரங்கொடு புடைத்தே
சட்டக மிறந்துபடு தன்மைபுரி குற்றான். ......
22(செக்கர்புரை குஞ்சி)
செக்கர்புரை குஞ்சிகெழு சென்னிகள் கிழிந்தார்
நெக்கனர் கபோலவகை நெற்றிபிள வுற்றார்
அக்கநிரை சிந்தினர் அலங்குகுழை யற்றார்
உக்கனர்கள் பல்லெயி றுடைந்தனர்கள் துண்டம். ......
23(வாய்நிரை பகிர்ந்த)
வாய்நிரை பகிர்ந்தனர்கள் மாழைதிகழ் கண்ட
மானவு முரிந்தனர்கள் அற்றனர்கள் பொற்றோள்
ஊனமகல் அங்கைகள் ஒசிந்தனர் தசைந்தே
பீனமுறு மார்பிடை பிளந்தனர் தளர்ந்தார். ......
24(உந்திகள் குடங்க)
உந்திகள் குடங்கரின் உடைந்துகுடர் யாவுஞ்
சிந்தினர் மருங்கெழில் சிதைந்தனர் புறங்கண்
முந்துதொடர் என்பொடு முரிந்தனர்கள் வாமஞ்
சந்துபொரு கின்றமுழந் தாளடிகள் அற்றார். ......
25(வீந்தனர்க ளோர்)
வீந்தனர்க ளோர்சிலவர் வீழ்ந்துமிதி பட்டுத்
தேய்ந்தனர்க ளோர்சிலவர் செய்யகுடர் சிந்திச்
சாய்ந்தனர்க ளோர்சிலவர் தங்குருதி ஆற்றுள்
தோய்ந்தனர்க ளோர்சிலர் துடித்தனர்கள் சில்லோர். ......
26(எறிந்திடு படைத்தொ)
எறிந்திடு படைத்தொகுதி ஏகுமுனம் வீழ்ந்து
மறிந்தனர்க ளோர்சிலவர் மாய்ந்துகக னம்போய்ச்
செறிந்தனர்க ளோர்சிலர் சிதைந்துதலை போயும்
முறிந்தவுடல் கொண்டமர் முயன்றனர்கள் சில்லோர். ......
27(ஏரகலும் வீரர்)
ஏரகலும் வீரர்தமி யாக்கையிது வண்ணஞ்
சேரவிறல் உற்றுடைய செவ்வியின் எழுந்த
சோரிநதி மாநகர் தொலைத்துவளன் வாரி
வாரிதி நிறைந்தவனி மீதினும் மடுத்த. ......
28வேறு(அறந்தெ ரிந்துணர்)
அறந்தெ ரிந்துணர் ஆண்டகை அகன்மரம் புடைப்பக்
குறைந்த சென்னிவான் திரிவன எயிற்றொடு குலவிச்
செறிந்த தேவரோ டமிர்தொளித் துண்டவர் சென்னி
நிறைந்தி டாமதித் துணைகவர்ந் துலவுதல் நேரும். ......
29(அடல்கொள் மொய்)
அடல்கொள் மொய்ம்பினன் மரம்புடைத் தலுஞ்சில அவுணர்
உடல்சி னப்பரி முகத்தவர் தலைதுமிந் துதிர
நெடிதும் வாய்வழி சிந்தவீழ்ந் தனர்நெடுங் கடலுள்
வடவை மாமுக மங்கிகான் றிடுவதே மான. ......
30(வள்ளல் மாமர)
வள்ளல் மாமரத் தண்டுகொண் டடித்தலும் வலியோர்
பிள்ளை மாமதி எயிற்றணி சிந்துவிண் பெயர்ந்தே
அள்ளல் வேலையின் முறைமுறை வீழ்வன அதன்கண்
துள்ளு மீன்கணம் உகண்டுவீழ் கின்றதோர் தொடர்பின். ......
31(வலிந்த வூழ்முறை)
வலிந்த வூழ்முறை யாவரே கடந்தவர் மரத்தாற்
பொலந்த யங்குபூண் மார்பினன் எற்றிடும் பொழுதிற்
கலந்து போர்செய்தார் ஓர்சிலர் வாளொடு கரம்போய்த்
தொலைந்து ளார்செலும் நெறியின்வீழ்ந் தவர்சிரந் துணிப்ப. ......
32(இனைய பற்பல நிகழ்)
இனைய பற்பல நிகழ்ந்திட இணையிலா ஒருவன்
தினையின் வேலையில் ஆயிரம் புயமுடைத் திறலோர்
அனைவர் தம்மையும் பஃறுணி படுந்திறன் அட்டுத்
தனிமை தன்னொடு நின்றனன் அமர்க்களந் தன்னில். ......
33ஆகத் திருவிருத்தம் - 4515