Kaumaram dot com - The Website for Lord Muruga and His Devotees

Kandha Puranam
by
Sri Kachiyappa
Sivachariyar

ஸ்ரீ கச்சியப்ப சிவாச்சாரியார்
அருளிய
கந்த புராணம்

Lord MuruganSri Kaumara Chellam

காண்டம் - படலம் பட்டியலுக்கு அகர வரிசையில் முதற்குறிப்புக்கு செய்யுள் முதற்குறிப்பு pdf வடிவம்

kANdam - padalam List Tamil alphabetical index verse index pdf version

previous kandam   2 - அசுரகாண்டம்   next kandam2 - asura kANdam

previous padalam   34 - அசமுகிப் படலம்   next padalamasamugip padalam

Ms Revathi Sankaran (4.05mb)
(நீங்காதுறை தனி)

நீங்காதுறை தனிநாயகன் நெடுமாலயன் உணரா
     ஓங்காரமு தற்பண்ணவன் உறையுங்கிரி செல்லப்
          பாங்காயணங் கினர்போற்றிடப் பயில்காழிவ னத்திற்
               பூங்காவனந் தனிலேசசி இருந்தேதவம் புரிந்தாள். ......    1

(சேணாடுபு ரக்கின்)

சேணாடுபு ரக்கின்றவன் சிந்தித்திடு கின்ற
     மாணாகிய வினைமுற்றுற வருவான்றவம் புரிவாள்
          காணாளவன் வருகின்றது காலம்பல தொலைய
               நாணாடொறுந் தன்மேனியின் நலமாழ்குற மெலிவாள். ......    2

(கொளையாரிசை)

கொளையாரிசை அளிபாடிய குழலிந்திரன் பிரிவால்
     உளையாமனம் பதையாத்தவத் துறைகின்றதொ ரளவில்
          வளையார்கலி உலகந்தனில் வாழ்சூரபன் மாவுக்
               கிளையாள்பலர் இளையார்புணர்ந் தாலுஞ்சிறி திளையாள். ......    3

(கழிகின்றதொர் கட)

கழிகின்றதொர் கடலேபுரை காமந்தெறு நோயால்
     அழிகின்றவள் எவர்தம்மையும் வலிதேபிடித் தணையும்
          இழிகின்றதொ ரியல்பாள்முகில் இனம்வாய்திறந் தெனவே
               மொழிகின்றதொர் கடியாள்அச முகியென்பதொர் கொடியாள். ......    4

(பொறையில்லவள்)

பொறையில்லவள் அருளில்லவள் புகழில்லவள் சிறிதும்
     நிறையில்லவள் நாணில்லவள் நிற்கின்றதொ ரறத்தின்
          முறையில்லவள் வடிவில்லவள் முடிவில்லதொர் கற்பின்
               சிறையில்லவள் உலகோர்க்கொரு சிறையாமெனத் திரிவாள். ......    5

(கீழுற்றிடும் உலகெ)

கீழுற்றிடும் உலகெத்தனை யவையாவையுங் கிளர்ந்தோர்
     வாழுற்றிடும் உலகெத்தனை அவையாவையு மாடே
          சூழுற்றிடும் உலகெத்தனை அவையாவையுஞ் சுற்றா
               ஊழுற்றிடு தன்னூர்தனில் ஒருநாழியில் வருவாள். ......    6

(பொய்யுற்றவள் கள)

பொய்யுற்றவள் களவுற்றவள் புரையுற்றிடு சுரையூன்
     துய்யுற்றவள் களியுற்றவள் சோர்வுற்றவள் கொலைசெய்
          கையுற்றவள் விழியாலழல் காலுற்றவள் பவத்தின்
               மொய்யுற்றவள் படிறுற்றவள் முனிவுற்றவள் மனத்தின். ......    7

(பொங்குஞ்சிகை)

பொங்குஞ்சிகை அழல்மைத்தலை புகுந்தாலென ஒளிருஞ்
     செங்குஞ்சிய துடையாளெவர் செருச்செய்யினும் இடையாள்
          துங்கங்கெழு தூணத்திடை தோன்றிக்கன கனைமுன்
               பங்கம்படுத் துயிருண்டெழு பகுவாயரி நிகர்வாள். ......    8

(சீயப்பெரு முகன்)

சீயப்பெரு முகன்தாரகன் நிகராகிய திறலாள்
     மாயத்தொழில் பயில்கின்றவள் மணிமால்வரை புரையுங்
          காயத்தவள் அடற்கூற்றையுங் கடக்கின்றதொர் வலியாள்
               தோயப்புண ரிகளேழுமொர் துணையிற்கடந் திடுவாள். ......    9

(மாலுற்றிட வாழ்)

மாலுற்றிட வாழ்சூரபன் மாவின்கிளை முழுதும்
     மூலத்தொடு முடிவித்திடு முறையூழ்வினை யென்னச்
          சூலத்தினை யேந்தித்தனி தொடர்துன்முகி யுடனே
               ஆலத்தினை துருவாமென ஆங்குற்றனள் அன்றே. ......    10

(கானின்றுள பொழி)

கானின்றுள பொழிலேர்தனைக் காணாநனி சேணாள்
     ஆநன்றென வியவாப்புவி அமர்சோலையி தன்றால்
          வானின்றுள வனத்தைக்கொடு வந்தேயிவண் மகவான்
               தானின்றுவைத் தானிங்கிது தப்பாதென நிற்பாள். ......    11

(ஏலாவிது காணா)

ஏலாவிது காணாயென ஈர்ந்தண்பொழில் எழிலை
     ஆலாலம தெனவேவரும் அசமாமுகி யென்பாள்
          பாலானதுன் முகிதன்னொடு பகராவது காட்டிக்
               கோலாலம துடனேயது குறுகும்படி வந்தாள். ......    12

(மட்டுற்றிடு தண்)

மட்டுற்றிடு தண்காவினை வருடைத்தனி முகத்தாள்
     கிட்டிச்சினை நனைமாமலர் கிளையாவையும் நோக்கித்
          தட்டற்றிவண் உறைகின்றவர் தமைநோக்குவ லென்னா
               எட்டுத்திசை யினும்நாடுதற் கிடையுற்றனள் கடிதின். ......    13

(அதுகண்டனன்)

அதுகண்டனன் அவண்நின்றதொ ரையன்படைத் தலைவன்
     முதுகண்டகி இவளாம்அச முகியென்பதொர் கொடியாள்
          எதுகண்டிவண் வருகின்றனள் என்னோகருத் திவள்தன்
               கதிகண்டனன் நிற்பேனெனைக் காணாநெறி யதனில். ......    14

(மற்றிங்கிவள் செய)

மற்றிங்கிவள் செயல்யாவையும் வரலாற்றொடு காணாத்
     தெற்றென்றவண் மீள்கின்றுழிச் செவ்வேயெதிர் போந்து
          குற்றந்தனக் கிசையுந்திறம் முடிப்பேனெனக் கொலைசெய்
               விற்றங்கிய புயவேடரில் வேறோரிடை நின்றான். ......    15

(நின்றானவன் அது)

நின்றானவன் அதுகண்டிலள் நெஞ்சிற்களி தூங்கக்
     குன்றாமுலை அசமாமுகக் கொடியாள்அவ ளுடனே
          சென்றாள்மலர்க் காவெங்கணுந் திரிந்தாள்திரிந் தளவில்
               பொன்றாழ்முலைச் சசிமாதவம் புரிகின்றது கண்டாள். ......    16

(அந்தாவிவள் அயி)

அந்தாவிவள் அயிராணிநம் மரசன்றனக் கஞ்சி
     நந்தாவளந் தனைப்பெற்றபொன் னகரத்தைவிட் டிங்கே
          வந்தாளிவள் தன்னைக்கொடு வருவீரென எங்கோன்
               முந்தாதர முடனுய்த்தனன் முடிவற்றதன் படையே. ......    17

(இங்குற்றதை உணரா)

இங்குற்றதை உணராமையின் இமையோர்புரம் நாடி
     அங்குற்றிலள் அயிராணியென் றரசன்தனக் குரைப்ப
          வெங்கட்டழ லெனச்சீறினன் மீண்டுஞ்சிலர் தமையித்
               திங்கட்புரை முகத்தாள்தனைத் தேடும்படி விடுத்தான். ......    18

(வானெங்கணும் பில)

வானெங்கணும் பிலமெங்கணும் வரையெங்கணும் பரவை
     தானெங்கணுந் திசையெங்கணுந் தரையெங்கணுந் தரையிற்
          கானெங்கணும் நமர்தேடினர் காணாரிவள் தன்னை
               ஊனெங்கணும் வருந்தத்திரிந் துழன்றாரிது வுணரார். ......    19

(தண்டேனமர் குளிர்)

தண்டேனமர் குளிர்பூங்குழற் சசியென்பவள் தனைநான்
     கண்டேனினி இவள்மையலிற் கவலாதொழி கென்றே
          வண்டோலிடு தொடைமன்னவன் மகிழ்வெய்தமுன் னுய்ப்பக்
               கொண்டேகுவன் யானேயிவள் தனையென்றுகு றித்தாள். ......    20

(இத்தேமொழி தனை)

இத்தேமொழி தனைஇந்திரன் ஈண்டேதனி யாக
     வைத்தேகினன் இவள்தன்னை வருந்தாதளித் திடவோர்
          புத்தேளிரும் இலரிங்கிது பொழுதாமவன் புகுமுன்
               கொத்தேமலர்க் குழலாள்தனைக் கொடுபோவனென் றடைவாள். ......    21

(தீனக்குரற் கடுஞ்)

தீனக்குரற் கடுஞ்சொல்லெனும் உருமேறு தெழிப்பக்
     கூனற்பிறை எயிறாகிய மின்னுப்புடை குலவக்
          கானக்கரும் படிவத்தொடு கால்கொண்டெழு விசையால்
               வானப்புயல் வழுவிப்புவி வந்தாலென வந்தாள். ......    22

(ஊற்றங்கொடு வருது)

ஊற்றங்கொடு வருதுன்முகி யுடனேயச முகிதான்
     தோற்றங்கிளர் மணிவெற்பெனத் துண்ணென்றவண் வரலும்
          ஏற்றம்பெற நோற்றேதனி இருந்தாளது காணாக்
               கூற்றந்தனைக் கண்டாலெனக் குலைந்தாள்வலி குறைந்தாள். ......    23

(நீரோதமி சைத்த)

நீரோதமி சைத்தங்கிய நிருதக்குல மகளோ
     பாரோர்மயக் குறுபேய்மக ளோபாரிடத் தணங்கோ
          சூரோடுறு தனிக்கொற்றவை தொழில்செய்பவள் தானோ
               ஆரோவிவள் அறியேனென அஞ்சிக்கடி தெழுந்தாள். ......    24

(எழுகின்றவள் தனை)

எழுகின்றவள் தனைநில்லென இசைத்தேயெதிர் எய்தி
     மொழிகின்றனள் அயிராணிநின் முதிராவிள நலனும்
          பழியில்லதொர் பெருங்காமரும் பயனற்றிவண் வறிதே
               கழிவெய்திடத் தவம்பூண்டிடல் கடனோஇது விடுநீ. ......    25

(ஆரொப்புனக் குலக)

ஆரொப்புனக் குலகந்தனில் அருளாழியம் பகவன்
     மார்பத்துறை திருமங்கையும் மற்றிங்குனக் கொவ்வாள்
          பாரிற்கரந் திருந்தேதவம் பயில்வாயிதென் உன்னைச்
               சேரத்தவம் புரிகின்றனன் திறற்சூரபன் மாவே. ......    26

(இந்நாள்வரை உனை)

இந்நாள்வரை உனைநண்ணிய இமையோர்க்கிறை உனது
     நன்னாயகன் நாகப்பெரு நலனுற்றவன் அன்றே
          தன்னாலுணர் வரிதென்பர்கள் தன்பேரழ கதனாற்
               பன்னாள்அவ னுடன்மேவினை பாகிற்படு கரிபோல். ......    27

(தவறுஞ்சுரர் உலகொ)

தவறுஞ்சுரர் உலகொன்றுளன் சதவேள்வியன் எம்முன்
     புவனம்பல அண்டம்பல புரக்குந்திரு வுளனால்
          இவனங்கவன் பணியேபுரிந் திளைத்தேகரந் துழல்வான்
               அவனிங்கிவன் றனையேவல்கொண் டகிலந்தனி யாள்வான். ......    28

(அழிவில்லவன் அவ)

அழிவில்லவன் அவனிங்கிவன் அழியும்பரி சுடையான்
     பழியில்லவன் அவனிங்கிவன் பழிவேலையில் திளைப்பான்
          கழியும்படர் உழந்தானிவன் களிப்புற்றுளன் அவனே
               தொழுவன்பல ரையுமிங்கிவன் தொழுமோவவன் சிலரை. ......    29

(அந்நேரில னொடு)

அந்நேரில னொடுமேவுவ தறிகின்றிலை அனையான்
     தன்னேவலின் ஒழுகித்திரி தமியோன்றனைத் துணையென்
          றின்னேமெலிந் தனையீதுனக் கியல்போநின தெழிலுங்
               கொன்னேகழிந் தனபற்பகல் குறியாயிது குணனோ. ......    30

(எத்தேவரும் முகிலூ)

எத்தேவரும் முகிலூர்தியும் இகல்மேவரும் அவுணக்
     கொத்தேவரும் அணங்கோருமுன் குற்றேவல்செய் திடவே
          முத்தேவரும் புகழப்படும் மொய்ம்புற்றிடு சூர்முன்
               உய்த்தேயவ னொடுகூட்டுவன் உலகாண்டுடன் இருக்க. ......    31

(பொன்னோடிகல் பங்)

பொன்னோடிகல் பங்கேருகப் பூங்கோமளை தனையும்
     அன்னோன்வெறுத் திடுவன்பிறர் அனைவோரையும் அஃதே
          உன்னோடள வறுகாதலின் உறுமிங்கிது சரதம்
               என்னோடினி வருவாய்கடி தென்றாள் அறங் கொன்றாள். ......    32

ஆகத் திருவிருத்தம் - 3332previous padalam   34 - அசமுகிப் படலம்   next padalamasamugip padalam

previous kandam   2 - அசுரகாண்டம்   next kandam2 - asura kANdam

காண்டம் - படலம் பட்டியலுக்கு அகர வரிசையில் முதற்குறிப்புக்கு செய்யுள் முதற்குறிப்பு pdf வடிவம்

kANdam - padalam List Tamil alphabetical index verse index pdf version

Kandha Puranam - The Story of Lord Murugan

Sri Kachchiappa Sivachariyar

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 
Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] .[css]