Banner of KaumaramLord Murugan
ஸ்ரீ கச்சியப்ப சிவாச்சாரியார் அருளிய கந்த புராணம்

Kandha Puranam by Sri Kachiyappa Sivachariyar

காண்டம் - படலம் பட்டியலுக்கு அகர வரிசையில் முதற்குறிப்புக்கு செய்யுள் முதற்குறிப்பு pdf வடிவம்

kANdam - padalam List Tamil alphabetical index verse index pdf version

previous kandam   1 - உற்பத்தி காண்டம்   next kandam1 - uRpaththi kANdam

previous padalam   1 - திருக்கைலாசப் படலம்   next padalamthirukkailAsap padalam

Chennai Mrs Revathy Sankaran
'சென்னை'
ரேவதி சங்கரன்

'Chennai'
Mrs Revathy Sankaran


(பாசம் நீக்கித்தன்)

பாசம் நீக்கித்தன் பாற்படு நல்லருள்
     ஈசன் நல்கு மியல்பென வெய்தினோர்
          தேசு மாற்றிச் சிறந்ததன் மெய்யொளி
               வீசு கின்றது வெள்ளியங் குன்றமே. ......    1

(ஆறு சூடிய வாதி)

ஆறு சூடிய வாதியம் பண்ணவன்
     ஏறு மூரிவெள் ளேறுமக் கண்ணுதல்
          நீறு சேர்தரு கோலமும் நித்தனைத்
               தேறும் அன்பர்தஞ் சிந்தையும் போன்றதே. ......    2

(மோன நன்னிலை)

மோன நன்னிலை முற்றிய பெற்றியர்
     ஞான மார்பிழம் பன்ன நலத்ததாய்
          ஊனு லாய வுயிர்த்தொகை மாசொரீஇத்
               தானெ லாஞ்செறிந் தென்னவுஞ் சான்றதே. ......    3

(கான மார்ந்த)

கான மார்ந்த கடுக்கைநற் கூவிளைத்
     தேன வாம்பொழிற் றிண்சிக ரத்திடை
          வான யாறு வருதலின் மாசிலா
               ஞான நாயகன் போல நணியதே. ......    4

(தண்ண றுந்துள)

தண்ண றுந்துள வாற்புனை தார்முடிப்
     பண்ண வன்கண் படுத்திடு பாற்கடல்
          கண்ணு தற்குமொர் காமரு பீடமாய்
               நண்ணு கின்றது போலும் நலத்ததே. ......    5

(பொதியு மின்னமு)

பொதியு மின்னமு தோடு பொருந்துவ
     கதிரின் மிக்க கறையறு காட்சிய
          மதிய மாயிர கோடி மணந்துதாம்
               உதய மானது போன்றதவ் வொண்கிரி. ......    6

(நெற்றி மேனிமிர்)

நெற்றி மேனிமிர் கண்ணும் நிலாவொளிர்
     பொற்ற டம்புய நான்கும் பொருந்துறப்
          பெற்றெம் மானரு ளாற்பிரம் பொன்றுகைப்
               பற்று நந்தி பரிவொடு காப்பது. ......    7

(புரந்தரன் முதலாகி)

புரந்த ரன்முத லாகிய புங்கவர்
     வரம்பின் மாதவர் மாசறு காட்சியர்
          நிரந்த பூத கணவர் நிரந்தரம்
               பரிந்து போற்றிப் பயில்வதம் மால்வரை. ......    8

(மின்னரம் பையா)

மின்ன ரம்பைய ராடலும் விஞ்சையர்
     கின்ன ரம்பயில் பாடலுங் கீழ்த்திசை
          மன்ன னாதியர் வாழ்த்துமவ் வானவர்
               இன்னி யங்களும் எங்கணு மார்ப்பது. ......    9

வேறு

(கீணி லாவுறு)

கீணி லாவுறு முலகெலாம் நீங்கியே கீழ்போய்ச்
     சேணி லாவுறு பதமெலா முருவிமீச் சென்று
          மாணி லாவுறும் அண்டத்தின் அடிமுடி மருவத்
               தாணு வாயுல கிறுதியின் நிற்பதச் சயிலம். ......    10

(மாடு சூழ்தரு மேரு)

மாடு சூழ்தரு மேருவே யாதியாம் வரைகள்
     பாடு சேரினு முலகெலா மழியினும் பரந்து
          கூடு மண்டங்கள் குலையினுங் கொன்றைவே ணியன்போல்
               கேடி லாமலே அமர்வது கயிலையங் கிரியே. ......    11

(நலம்வ ருங்கலை)

நலம்வ ருங்கலை மதியமு மிரவியும் நாகர்
     குலம்வ ருந்தனுக் குறையலா மற்றைய கோளும்
          அலம ருஞ்சுடர் உடுக்களு மமரரும் பிறரும்
               வலம்வ ரும்படி யிருப்பது கயிலைமால் வரையே. ......    12

(ஏற்றம் மேருவே)

ஏற்றம் மேருவே யாதியாம் வரைகள்ஏழ் வகையால்
     சாற்றும் நேமிகள் ஆழியங் கிரிபெருஞ் சலதி*1
          நாற்றி சைக்கணும் நொச்சிபோற் சூழ்தர நடுவண்
               வீற்றி ருப்பது கயிலையா கியதனி வெற்பு. ......    13

(படியெலா முண்டும்)

படியெ லாமுண்டும் ஏனமாய்த் தாங்கியும் பண்டோர்
     அடியி னாலகப் படுத்தியு மிடந்துமுற் றருளும்
          நெடிய மாயனு முலகிறு மெல்லையில் நிமலன்
               வடிவ மேயெனக் காணுதற் கரியதவ் வரையே. ......    14

வேறு

(அன்னதோர் கயிலை)

அன்னதோர் கயிலை நாப்பண் அம்பொனின் சுடர்மேல் கொண்ட
     நன்னெடுஞ் சிமயத் தோங்கல் நவையொரீஇ நண்ணிற் றென்னக்
          கன்னியங் காப்பு மேவிக் கதிர்மணிக் கற்றை சுற்றப்
               பொன்னெடுங் கோயி லொன்று பொலிவொடும் பொருந்திற் றன்றே. ......    15

(திணிகதிர் ஆரந்)

திணிகதிர் ஆரந் தன்னிற் சிறந்தவச் சிரத்திற் செக்கர்
     மணிதனில் முழுநீ லத்தின் மற்றைய வெறுக்கை தன்னில்
          பணிபட வருளாற் றானே பலித்திடு சிகர மாதி
               அணியினுக் கணியாய் மல்கும் ஆலயச் சூழ லெங்கும். ......    16

(என்று மீறென் பதி)

என்றுமீ றென்ப தின்றி யிருந்திடுங் கயிலை வெற்பிற்
     பொன்றிகழ் நகரந் தன்னுட் பொருவிலாக் கோளும் நாளுந்
          துன்றிய தன்மைத் தென்னத் தூமணிக் கதிர்கள் சூழ
               மன்றம ருறையு ளொன்று வனப்பொடு வைகிற் றன்றே. ......    17

வேறு

(சோதி சேறுமத்)

சோதி சேருமத் தூமணி மண்டபத்
     தாதி யான அரியணை யும்பரிற்
          காத லாகுங் கவுரி*2 யொர் பாங்குற
               வேத நாயகன் வீற்றிருந் தானரோ. ......    18

(பீடுகொண்ட பெரு)

பீடு கொண்ட பெருந்தவப் பெற்றியோர்
     தேடு கின்ற சிறப்புடைத் தாம்புகழ்
          நாடு தும்புரு நாரதர் விஞ்சையர்
               பாடு கின்றனர் பாணியின் பாற்பட. ......    19

(அதிகன் வேணி)

அதிகன்*3 வேணியி லார்தரு கங்கையை
     விதிபு ரந்தரன் விண்டுல கத்துள
          நதிக டாழ்ந்தென நன்னயத் தேவல்செய்
               கதியி னோர்கள் கவரிகள் வீசினார். ......    20

(சீலவட்ட முடிப்பி)

சீல வட்ட முடிப்பிறை தேடுவான்
     ஞால வட்டத் தெழுதரு நாகர்போல்
          ஏல வட்ட முகத்தரு கெங்கணும்
               ஆல வட்ட மசைத்தனர் அன்பினோர். ......    21

(ஆதி தன்னருளெய்தி)

ஆதி தன்னரு ளெய்தி அவன்றிருப்
     பாத தாமரை சூடியப் பண்ணவன்
          கோதி லாத திருவுருக் கொண்டுளோர்
               பூத ராதியர் போற்றிமுன் ஈண்டினார். ......    22

ஆகத் திருவிருத்தம் - 374




*1 ஏழ்வகையால் சாற்றும் நேமிகள் - உவர் நீர்க்கடல் முதலிய ஏழு கடல்கள்.
   ஆழியங்கிரி - சக்கரவாளகிரி.
   பெருஞ்சலதி - பெரும்புறக்கடல்.
*2 அருளே சிவசக்தி என்பது தோன்ற, 'காதலாகுங் கவுரி' என்றார்.
*3 அதிகன் - தன்னிகர் உயர்ச்சி இல்லாத் தலைவன்; சிவபெருமான்.



previous padalam   1 - திருக்கைலாசப் படலம்   next padalamthirukkailAsap padalam

previous kandam   1 - உற்பத்தி காண்டம்   next kandam1 - uRpaththi kANdam

காண்டம் - படலம் பட்டியலுக்கு அகர வரிசையில் முதற்குறிப்புக்கு செய்யுள் முதற்குறிப்பு pdf வடிவம்

kANdam - padalam List Tamil alphabetical index verse index pdf version

Kandha Puranam - The Story of Lord Murugan

Sri Kachchiappa Sivachariyar

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



   Kaumaram.com சமீபத்தில் DDOS தாக்குதலால் பாதிக்கப்பட்டது.
எனவே, படங்கள் மற்றும் ஆடியோ தற்காலிகமாக கிடைக்காது.
நான் இதை படிப்படியாக சரிசெய்ய முயற்சிக்கிறேன்.
உங்கள் பொறுமைக்கும் புரிந்துணர்வுக்கும் நன்றி. ... வலைத்தள நிர்வாகி.  




  Kaumaram.com was recently affected by DDOS attack.
As such, images and audio will be temporarily unavailable.
I am trying to correct this progressively.
Thank you for your patience and understanding. ... webmaster.  



Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

PLEASE do not ask me for songs about other deities or for BOOKS - This is NOT a bookshop - sorry.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

© Copyright Kaumaram dot com - 2001-2040

COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED.

Please contact me (the webmaster), if you wish to place a link in your website.

email: kaumaram@gmail.com

Disclaimer:

Although necessary efforts have been taken by me (the webmaster),
to keep the items in www.kaumaram.com safe from viruses etc.,
I am NOT responsible for any damage caused by use of
and/or downloading of any item from this website or from linked external sites.
Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items
from the internet for maximum safety and security.

 மேலே   top