(அந்நாள் அதனில்)
அந்நாள் அதனில் அவுணர்க் கிறைஏவல்
தன்னான் மிகவுந் தளர்ந்து சிலதேவர்
எந்நாள்இப் புன்மை எமைநீங்கும் என்றிரங்கிப்
பொன்னாடு விட்டுப் புவிதன்னிற் போந்தனரே. ......
1(தீந்தமிழின் வைப்பா)
தீந்தமிழின் வைப்பான தெக்கிண தேயநண்ணி
மாந்தர்புகழ் காழி வனம்போந்து வானவர்தம்
வேந்துதனைக் கண்டு விரைநாண் மலரடிக்கீழ்ப்
போந்து பணிந்து புகழ்ந்து புகல்கின்றார். ......
2(ஒன்றே தருமம்)
ஒன்றே தருமம் ஒழிந்து புவனமெலாஞ்
சென்றே அடுகின்ற தீயவுணர் தந்துடக்கில்
அன்றே எமைவிட் டகன்றாய் உனக்கிதுவும்
நன்றே எமையாளும் நாயகனும் நீயன்றோ. ......
3(கோட்டுக் களிற்றோ)
கோட்டுக் களிற்றோடுங் கோளரியோ டும்புவியை
வாட்டுற் றிடுஞ்சூர வல்லியத்தின் வன்சிறையில்
ஈட்டுற்ற தேவர் எனும்பசுக்கள் தம்மையெலாங்
காட்டிக் கொடுத்துக் கரந்ததென்கொல் காவலனே. ......
4(ஏனம் பசுமான்)
ஏனம் பசுமான் இரலை மரைபடுத்த
ஊனும் வடியும் ஒலிகடலின் உள்ளபல
மீனுஞ் சுமந்து விறலசுரர்க் கேவல்செய்து
மானங் குலைந்து மறந்தோம் மறைகளுமே. ......
5(மையார் களத்தார்)
மையார் களத்தார் வரம்பெற்ற சூரனுக்குச்
செய்யாத ஏவலெலாஞ் செய்தோம் நெறிநீதி
எய்யாத மான மிவையெல்லாந் தானிழந்தோம்
ஐயா மிகவும் அலுத்தோம் அலுத்தோமே. ......
6(முந்நாளுந் தந்தி)
முந்நாளுந் தந்தி முகத்தவுணன் ஏவல்செய்து
பன்னாள் உழன்றோம் பரமர் அதுதீர்த்தார்
பின்னாளுஞ் சூரன் பெயர்த்தும் எமைவருத்த
இந்நாடி ரிந்தோம் இனித்தான் முடியாதே. ......
7(எந்நாளும் உன்னை)
எந்நாளும் உன்னைப் புகலென் றிருந்தவியாந்
துன்னா அவுணராற் சோர்ந்து துயருழப்ப
உன்னா ருயிர்காத் தொளித்திங் கிருந்தனையால்
மன்னா உனக்குத் தகுமோ வசையன்றோ. ......
8(சூரன் முதலா)
சூரன் முதலாச் சொலப்பட்ட வெவ்வசுரர்
வீரங் குலைந்து விளிவதற்கும் இவ்வுலகில்
ஆரும் பழிக்கத் திரிகின்றோம் ஆகுலங்கள்
தீரும் படிக்குஞ் செயலொன்று செய்வாயே. ......
9(என்னாப் பலவும்)
என்னாப் பலவும் இயம்பி இரங்குதலும்
மன்னா கியமகவான் மாற்றம் அவைகேளா
அன்னார் மனங்கொண்ட ஆகுலத்தைக் கண்டுநெடி
துன்னா அயரா உயிரா உரைக்கின்றான். ......
10(மாயை உதவ)
மாயை உதவ வருகின்ற வெஞ்சூரன்
தீய பெருவேள்வி செய்யத் தொடங்குமன்றே
போய நமதுரிமை பொன்னாடுந் தோற்றனமென்
றோயு முணர்வால் உமக்கங் குரைத்திலனோ. ......
11(அற்றே மகஞ்செய்)
அற்றே மகஞ்செய் தமலன் தருவரங்கள்
பெற்றே நமது பெரும்பதமுங் கைக்கொண்டு
சற்றேனும் அன்பில்லாத் தானவர்கோன் தாழ்வான
குற்றே வலைநம்பாற் கொண்டான் குவலயத்தே. ......
12(நீள்வா ரிதியின்)
நீள்வா ரிதியின் நெடுமீன் பலசுமந்து
தாழ்வாம் பணிபிறவுஞ் செய்துந் தளர்ந்துலகில்
வாழ்வா மெனவே மதித்திருந்தோம் மற்றதன்றிச்
சூழ்வால் ஒருதீமை சூரபன்மன் உன்னினனே. ......
13(என்னே அத்தீமை)
என்னே அத்தீமை யெனவே வினவுங்காற்
பொன்னே அனைய புலோமசையைப் பற்றுதற்குங்
கொன்னே எனையுங் கொடுஞ்சிறையில் வைப்பதற்கு
முன்னே நினைந்தான் முறையில்லாத் தீயோனே. ......
14(ஆன செயலுன்னி)
ஆன செயலுன்னி அனிகந் தனைநம்பால்
வானுலகில் உய்ப்ப மதியால் அஃதுணர்ந்து
நானும் இவளும் நடுநடுங்கி அச்சுற்று
மேனி கரந்து விரைந்துவிண்ணை நீங்கினமால். ......
15(மீனும் வடியும்)
மீனும் வடியும் வியன்தசையுந் தான்சுமந்த
ஈன மதுவன்றி ஈதோர் பழிசுமக்கின்
மானம் அழிய வருமே அதுவன்றித்
தீன முறுசிறையுந் தீராது வந்திடுமே. ......
16(வெய்யவர்தம் வன்)
வெய்யவர்தம் வன்சிறையின் வீழின் முடிவில்லா
ஐயன் அடிகள் அருச்சித் தியாமெல்லாம்
உய்ய அவுணர் உயிரிழப்ப மாதவத்தைச்
செய்யும் நெறியுண்டோ வெனச்சிந்தை செய்தனனே. ......
17(சிந்தை அதனில்)
சிந்தை அதனில் இனைய செயலுன்னி
அந்த மறுதுயரத் தாழும் நுமைவிட்டு
வந்து புவியின் மறைந்துதவஞ் செய்துமுக்கண்
எந்தை அடிகள் அருச்சித் திருந்தனனே. ......
18(அல்லல் புரியும்)
அல்லல் புரியும் அவுணர்பணி யால்வருந்தித்
தொல்லையுள மேன்மையெலாந் தோற்றனமே மற்றினிநாம்
எல்லவரும் வெள்ளி மலைக்கேகி இறைவனுக்குச்
சொல்லி நமது துயரகற்றிக் கொள்வோமே. ......
19(வம்மின் எனவுரை)
வம்மின் எனவுரைப்ப வானோர் அதுகேளா
வெம்மி னதுகண்ட வியன்கண் டகியெனவும்
அம்மென் மயிலெனவும் ஆடி நகைசெய்து
தம்மின் மகிழ்ந்து மதர்ப்பினொடு சாற்றலுற்றார். ......
20(கோவுநீ எங்கள்)
கோவுநீ எங்கள் குரவனுநீ தேசிகன்நீ
தேவுநீ மேலாந் திருவுநீ செய்தவநீ
ஆவிநீ மற்றை அறிவுநீ இன்பதுன்பம்
யாவுநீ யாகில் எமக்கோர் குறையுண்டோ. ......
21(பார்த்துப் பணித்த)
பார்த்துப் பணித்த பணிசெய்து நின்றன்னை
ஏத்தித் திரிதல் எமக்குக் கடனாகும்
நீத்துத் துயர நெறியுறுத்தி எம்மையென்றுங்
காத்துப் புரத்தல் உனக்குக் கடன்ஐயா. ......
22(தேரா அவுணர்)
தேரா அவுணர் திறந்தன்னை முன்தடிந்தாய்
சூரா தியருயிருங் கொள்ளுநெறி சூழ்கின்றாய்
பாராள் பவர்க்கும் பலமுனிவர்க் குஞ்சுரர்க்கும்
ஆராயின் நீயன்றி யாரே துணையாவார். ......
23(ஆதலால் எங்கள்)
ஆதலால் எங்கள் அலக்கண் அகற்றிடுவான்
காதலாய் அத்தன் கயிலைக் கெமைக்கொண்டு
போதுநீ யென்னப் புரந்தரனும் நன்றென்று
கோதிலா உள்ளத் தொருசூழ்ச்சி கொண்டனனே. ......
24(ஆவ தொருகாலை)
ஆவ தொருகாலை அமரர்கோன் தானெழுந்து
தேவர் தமைநோக்கிச் சிறிதிங் கிருத்திரென
ஏவரையும் அங்கண் இருத்தியொரு தானேகிப்
பாவை அயிராணி பாங்கர் அணுகினனே. ......
25ஆகத் திருவிருத்தம் - 3191