![]() | ![]() திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's | ![]() |
---|
திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அநுபூதி - 51 உருவாய் அருவாய் |
![]() | ![]() | தமிழில் பொருள் எழுதியது 'திருப்புகழ் அடிமை' திரு சு. நடராஜன் (சென்னை) Meanings in Tamil by 'Thiruppugazh Adimai' Thiru S Nadarajan (Chennai) | PDF வடிவத்தில் ![]() ![]() ![]() | அகரவரிசை எண்வரிசை தேடல் alphabetical numerical search |
பாடல் 51 ... உருவாய் அருவாய் (குருவாக வந்து அருளினான் கந்தன்) உருவாய் அருவாய், உளதாய் இலதாய் மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க் கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க் குருவாய் வருவாய், அருள்வாய் குகனே. ......... பதவுரை ......... உருவாய் ... ஆறுமுகமும் பன்னிருதோளும் கொண்ட சகள வடிவாயும், அருவாய் ... குணம், குறி, நாமம் அற்ற அகளமாயும், உளது ஆய் ... உண்டு என்பவருக்கு உள் பொருளாகவும், இலது ஆய் ... இல்லை என்பாருக்கு இல் பொருளாகவும், மலராய் ... மலராகவும், மருவாய் ... அம் மலரின் மணமாகவும், மணியாய் ... மாணிக்கமாகவும், ஒளியாய் ... அதன் ஒளியாயும், கருவாய் ... சகல உயிர்களையும் பிரளய காலத்தில் தன் மேனியில் வைத்து காப்பவனும், உயிராய் ... சிருஷ்டிக்கும் போது சகல ஜீவன்களுக்கும் உயிருக்கு உயிராகவும் ஆன்மாவாகவும் திகழ்பவனும், விதியாய் ... அந்த உயிர்களின் வினைப் பயனாகவும், கதியாய் ... முத்தி நிலையில் அந்த உயிர்கள் சென்றடையும் நிலையாகவும், குகனே ... உள்ள முருகக் கடவுளே குருவாய் வருவாய் அருள்வாய் ... என் குருவாக வந்து எனக்கு அருளி என்னை ஆட்கொண்டவன். ......... பொழிப்புரை ......... ஆறுமுகமும் பன்னிரு விழியும் கொண்ட சகள வடிவாகவும், குணம் குறி நாமம் அற்ற அகளமாயும், உண்டு என்பார்க்கு உள் பொருளாயும், இல்லை என்பார்க்கு இல் பொருளாயும், மலராயும், அம் மலரின் மணமாகவும், மாணிக்கமாகவும், அதன் ஒளியாயும், சகல உயிர்களையும் பிரளய காலத்தில் தன் மேனியில் வைத்துத் தாங்குபவனும், சிருஷ்டிக்கும் சமயம் சகல உயிர்களுக்கும் உயிராய், ஆன்மாவாய் திகழ்பவனும், அவ்வுயிர்களின் வினைப்பயனாய் உள்ளவனும், முத்தி நிலையில் அவ்வுயிர்கள் சென்றடையும் நிலையாக உள்ளவனும் திகழும் கந்தக் கடவுளே, நீயே குருவாக வந்து என்னை ஆட்கொண்டவன். ......... விளக்கவுரை ......... 'வருவாய் அருள்வாய்' என்பதை முன்னிலை வினை முற்றாக வைத்து இப்பாடலுக்கு பொருள் காண்பது சாதாரண முறையாகும். ஏற்கனவே, .. குரு வடிவாய் வந்து என் உள்ளம் குளிர குதிகொண்டவே .. ... என்று கந்தர் அலங்காரத்திலும் (பாடல் 102), வேறு பல விதமாகவும் முருகன் தனக்கு அருளியதைச் சொல்லி விட்டதால் கடைசி பாட்டில் மீண்டும் பிரார்த்தனை செய்ய அவசியமில்லை. இதுவரை என் இதய தாமரையின் தாகராகாசத்தில், தகரத் தந்தச் சிகரத் தொன்றித் .. தடநற் கஞ்சத் துறைவோனே .. ('புகரப் புங்க' - திருச்செந்தூர்த் திருப்புகழ் 81). இப்போது மனிதச் சட்டை தாங்கி குருவாக வந்து உபதேசம் அருளினான் என்பதே சிறப்பான பொருளாகும். இம்மாதிரி பொருள் காண்பதற்கு திருப்புகழிலும் பல உதாரணங்களைக் காணலாம். .. சந்தம் களிக்கும் சம்புவிற்கும் செம்பொருள் ஈவாய் .. ... என்று, 'மனத்தின் பங்கு' எனத் தொடங்கும் திருச்செந்தூர்த் திருப்புகழில் (பாடல் 86) கூறும் இடத்தில் உள்ள 'ஈவாய்' என்கிற சொல் முன்னிலை வினை முற்று இல்லை. சிவனுக்கு உபதேசம் செய்தவனே என்ற பொருள் நன்றாகத் தெரிகின்றது. அதுபோல், 'என்னை இயக்கி வைக்கும் பொருளே குருவாகவும் வந்தான்' என்றுதான் பொருள் கொள்ள வேண்டும். இந்தப் பரம் பொருளே உருவாகவும் அருவாகவும் இருப்பான். உளதாகவும் இலதாகவும் இருப்பான். பிரபஞ்சத்திற்கு முடிவான கதியாகவும், ஜீவாத்மாக்களை நடத்தி வைக்கும் விதியாகவும் இருப்பான். எல்லாம் ஒடுங்கிய நிலையில், உயிர்கள் தன் கேவல நிலையில் பரம் பொருளாகிய கருவில் மறைத்து இருக்கிறான். சிருஷ்டி ஆரம்பிக்கும் பொழுது இறைவன் பிரபஞ்சத்திற்கு நிமித்த காரணனாய் (குயவன்) இருந்து தன்னுள் அடங்கி இருந்த சக்தியே துணை காரணமாய்க் கொண்டு (சக்கரம்) சுத்த மாயையை (மண்) முதல் காரணமாய்க் கொண்டு பிரபஞ்சத்தில் அனைத்தையும் தோற்றுவிக்கிறான். தன் பெரும் கருணையினால் அந்த உயிர்களுக்கு தேகம், அந்தக்கரணம், வசிக்க உலகு, பல வகையான அனுபவங்கள் .. போன்றவற்றைக் கொடுத்து, தானே உயிருக்கு உயிராய் இருந்து அவைகளை நடத்தி வைக்கிறான். கடைசியில் அந்தந்த உயிர்களின் பக்குவ நிலைகளைக் கண்டறிந்து, தானே குருவாக வந்து ஆன்மாக்களுக்கு முக்தி நிலையை அளிக்கிறான். இப்பேர்ப்பட்ட குகனுடைய திருவருளினால் நானே அவனாகவும், அவனே நானாகவும் நிற்கும் கந்தர் அநுபூதி நிலை அடியேனுக்கு கிடைத்தது. இதையே மேற்கண்ட 51 பாடல்களிலும் 'மாத்ருகா மந்திர' மாலையாக உலகோருக்கு கூறி இருக்கிறேன். இந்த அநுபூதி நிலையை எல்லோரும் பெற வேண்டும் என்பதே கருணை தெய்வமான அருணகிரிப் பெருந்தகையாரின் வேண்டுகோளாகும். சும்மா இருவென நீ சொல்ல பொருள் ஒன்றும் அம்மா அறிந்திலன் என்று அன்று உரைத்த எம்மான் அருணகிரிநாதன் அனுபவம் நாயேற்கு கருணை பொழி போரூரா காட்டு. ... திருப்போரூர் சந்நதி முறை. முருகா சரணம் .. முருகா சரணம் .. முருகா சரணம் |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 4.694 pg 4.695 pg 4.696 pg 4.697 pg 4.698 pg 4.699 pg 4.700 pg 4.701 WIKI_urai Song number: 51 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
![]() | கௌமாரம் குழுவினர் The Kaumaram Team பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
![]() | திரு எல். வசந்த குமார் எம்.ஏ. Thiru L. Vasanthakumar M.A. பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
![]() | 'மலைமந்தீர்' திரு. இஷ்விந்தர்ஜிட் சிங் 'MalaiMandir' Thiru Ishwinderjit Singh பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
![]() | சென்னை ரேவதி சங்கரன் Revathy Sankaran (Chennai) பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
![]() | M.S. பாலஷ்ரவண்லக்ஷ்மி புதுச்சேரி M.S. Balashravanlakshmi Puducherry பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. PLEASE do not ask me for songs about other deities or for BOOKS - This is NOT a bookshop - sorry. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. © Copyright Kaumaram dot com - 2001-2040 COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED. Please contact me (the webmaster), if you wish to place a link in your website. email: kaumaram@gmail.com Disclaimer: Although necessary efforts have been taken by me (the webmaster), to keep the items in www.kaumaram.com safe from viruses etc., I am NOT responsible for any damage caused by use of and/or downloading of any item from this website or from linked external sites. Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items from the internet for maximum safety and security. மேலே top |