(இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவதற்கு முன்பு எனது முக்கியக் குறிப்பைப் படியுங்கள் - நன்றி).
(Please read my important note before using this website - Thank You).
திருப்புகழ் 81 புகரப் புங்க  (திருச்செந்தூர்)
Thiruppugazh 81 pugarappungka  (thiruchchendhUr)
Thiruppugazh - 81 pugarappungka - thiruchchendhUrSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

mp3
 
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனனத் தந்தத் தனனத் தந்தத்
     தனனத் தந்தத் ...... தனதான

......... பாடல் .........

புகரப் புங்கப் பகரக் குன்றிற்
     புயலிற் றங்கிப் ...... பொலிவோனும்

பொருவிற் றஞ்சச் சுருதிச் சங்கப்
     பொருளைப் பண்பிற் ...... புகல்வோனும்

திகிரிச் செங்கட் செவியிற் றுஞ்சத்
     திகிரிச் செங்கைத் ...... திருமாலும்

திரியப் பொங்கித் திரையற் றுண்டுட்
     டெளிதற் கொன்றைத் ...... தரவேணும்

தகரத் தந்தச் சிகரத் தொன்றித்
     தடநற் கஞ்சத் ...... துறைவோனே

தருணக் கொங்கைக் குறவிக் கின்பத்
     தையளித் தன்புற் ...... றருள்வோனே

பகரப் பைம்பொற் சிகரக் குன்றைப்
     படியிற் சிந்தத் ...... தொடும்வேலா

பவளத் துங்கப் புரிசைச் செந்திற்
     பதியிற் கந்தப் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

புகரப் புங்கப் பகரக் குன்றில் ... புள்ளிகளை உடையதும்
தூய்மையானதும் அழகியதுமான மலையை ஒத்த ஐராவத யானையின்
மேலும்

புயலிற் றங்கிப் பொலிவோனும் ... மேகத்தின் மேலும் தங்கிப்
பொலிகின்ற தேவேந்திரனும்,

பொருவிற் றஞ்சச் சுருதிச் சங்கப் பொருளை ... இணையற்றதும்,
எல்லாக் கலைகளுக்கும் தஞ்சமானதும் ஆகிய வேதத் தொகுப்புகளின்
பொருளை

பண்பிற் புகல்வோனும் ... முறையாக மொழிபவராகிய பிரமதேவனும்,

திகிரிச் செங்கட் செவியில் துஞ்ச ... மலை போன்றதும், செம்மைப்
பண்புடையதுமான ஆதிசேஷன் மீது துயின்ற

அத்திகிரிச் செங்கைத் திருமாலும் ... அந்தச் செங்கையில்
சக்ராயுதத்தை ஏந்திய நாராயணமூர்த்தியும்,

திரியப் ... தமக்கு இந்த உபதேசம் கிடைக்கவில்லையே என்று இங்கும்
அங்கும் திரிந்திடவும்,

பொங்கித் திரையற்று உண்டு ... உவகை பொங்கி, உள்ளத்தில்
எண்ண அலைகள் நீங்கி, சிவானுபவத்தை உட்கொண்டு,

உள்தெளிதற்கு ஒன்றைத் தரவேணும் ... என் உள்ளம் தெளியுமாறு
ஒரு மொழியை உபதேசித்து அருள வேண்டும்.

தகரத்து அந்தச் சிகரத்து ஒன்றி ... தகராகாசமாக இருந்து* அழகிய
வேதசிரோமுடியாம் பேரிடத்தைப் பொருந்தி,

தடநற் கஞ்சத் துறைவோனே ... அகன்ற நல்லிடமான இதயக்
கமலத்தில் வீற்றிருப்பவனே,

தருணக் கொங்கைக் குறவிக்கு ... இளமையான மார்பகங்களை
உடைய குறப்பெண் வள்ளிக்கு

இன்பத்தையளித்து அன்புற்று அருள்வோனே ... பேரின்பத்தை
வழங்கி அவள்மீது அன்புகொண்டு அருள்பவனே,

பகரப் பைம்பொற் சிகரக் குன்றை ... ஒளியுடைய பசும்பொற்
சிகரங்களைக் கொண்ட கிரெளஞ்சமலையை

படியிற் சிந்தத் தொடும்வேலா ... இந்தப் பூமியின் கண்
பொடியாகுமாறு தொடுத்தருளிய வேலாயுதனே,

பவளத் துங்கப் புரிசை ... பவளம் போன்று சிவந்த தூய மதில்கள்
சூழ்ந்த

செந்திற்பதியிற் கந்தப் பெருமாளே. ... திருச்செந்தூர்த் தலத்தில்
எழுந்தருளிய கந்தப் பெருமாளே.


* ஆன்மாக்களின் இதய தாமரைக்கு நடுவே ஞானமயமாக விளங்கும்
ஆகாயம் 'தகராகாசம்' எனப்படும்.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.80  pg 1.81 
 WIKI_urai Song number: 21 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss

YouTube  'YouTube' Links for this song  
  இப்பாடலுக்கான யூ ட்யூப் பதிவுகள்  

to come வரவிருக்கின்றது

 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 


Song 81 - pugarap pungka (thiruchchendhUr)

pugarap pungap pagarak kundRiR
     puyalil thangip ...... polivOnum

poruvil thanjach churudhich changap
     poruLaip paNbiR ...... pugalvOnum

thigirich chengat seviyil thunjath
     thigirich chengaith ...... thirumAlum

thiriyap pongith thiraiyath thuNdut
     teLidhaR kondRaith ...... tharavENum

thagarath thandhach chikarath thondRith
     thadanaR kanjath ...... thuRaivOnE

tharuNak kongaik kuRavik kinbath
     thaiaLith thanbut ...... RaruLvOnE

pagarap paimpoR chikarak kundRaip
     padiyiR sindhath ...... thodumvElA

pavaLath thungap purisaic chendhiR
     padhiyil kandhap ...... perumALE.

......... Meaning .........

pugarap pungap pagarak kundRiR: There is this dotted, beautiful, pure and mountain-like elephant, AirAvatham;

puyalil thangip polivOnum: and the one who mounts it and also the clouds is IndrA.

poruvil thanjach churudhich sanga: There is this unique collection of Scriptures, called VEdAs, a repository of all arts,

poruLaip paNbiR pugalvOnum: whose meaning is well interpreted by BrahmA.

thigirich chengat seviyil thunjath: There is this humongous red Snake called AdhisEshan upon whom He slumbers

thigirich chenkaith thirumAlum: holding in his hand the great weapon called ChakrA; and He is Vishnu.

thiriya: The three of them were roaming hither and thither (looking for You to preach to them)!

pongith thiraiyath thuNdu: Enthralling my mind and freeing it from worries, deeply immersed in Siva-yOgA,

utteLidhaR kondRaith tharavENum: and for my inner clarity, You should come and teach me that unique ManthrA (OM)!

thagarath thandhach chikarath thondRith: In the Cosmos of Thakaram*, sitting on the zenith of the VEdAs

thadanaR kanjath thuRaivOnE: is my lotus heart; and You dwell in it!

tharuNak kongaik kuRavik: To VaLLi, the damsel of the KuRavAs, with youthful bosom,

inbaththai aLith thanbutr aruLvOnE: You bestow the greatest bliss with a lot of love, Oh Lord!

pagarap paimpoR sikarak kundRai: The golden peaks of the bright mount Krouncha

padiyiR sindhath thodumvElA: were reduced to powder on this earth by the force of Your Spear!

pavaLath thungap purisaic sendhiR: Surrounded by the pure coral red fortresses is ThiruchchendhUr

padhiyil kandhap perumALE.: which place is Your favourite abode, Oh Great One!


* Thakara Akasam is the cosmos in the inner soul of the AthmA where True Knowledge glows like a light.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

mp3
 

Thiru Arunagirinathar's Thiruppugazh - 81 pugarap pungka - thiruchchendhUr


   Kaumaram.com சமீபத்தில் DDOS தாக்குதலால் பாதிக்கப்பட்டது.
எனவே, படங்கள் மற்றும் ஆடியோ தற்காலிகமாக கிடைக்காது.
நான் இதை படிப்படியாக சரிசெய்ய முயற்சிக்கிறேன்.
உங்கள் பொறுமைக்கும் புரிந்துணர்வுக்கும் நன்றி. ... வலைத்தள நிர்வாகி.  



  Kaumaram.com was recently affected by DDOS attack.
As such, images and audio will be temporarily unavailable.
I am trying to correct this progressively.
Thank you for your patience and understanding. ... webmaster.  


... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 


Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

PLEASE do not ask me for songs about other deities or for BOOKS - This is NOT a bookshop - sorry.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

© Copyright Kaumaram dot com - 2001-2040

COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED.

Please contact me (the webmaster), if you wish to place a link in your website.

email: kaumaram@gmail.com

Disclaimer:

Although necessary efforts have been taken by me (the webmaster),
to keep the items in www.kaumaram.com safe from viruses etc.,
I am NOT responsible for any damage caused by use of
and/or downloading of any item from this website or from linked external sites.
Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items
from the internet for maximum safety and security.

 மேலே   top