திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அநுபூதி - 11 கூகா என |
தமிழில் பொருள் எழுதியது 'திருப்புகழ் அடிமை' திரு சு. நடராஜன் (சென்னை) Meanings in Tamil by 'Thiruppugazh Adimai' Thiru S Nadarajan (Chennai) | PDF வடிவத்தில் | அகரவரிசை எண்வரிசை தேடல் alphabetical numerical search |
பாடல் 11 ... கூகா என என் கிளை (உறவினர் அழப் போகா வகை உபதேசம் பெற்றது) கூகா என என் கிளை கூடி அழப் போகா வகை, மெய்ப்பொருள் பேசியவா நாகாசல வேலவ நாலு கவித் தியாகா சுரலோக சிகாமணியே. ......... பதவுரை ......... நாகாசல ... திருச்செங்கோட்டு மலையில் எழுந்தருளியவரே, வேலவ ... வேலாயுதக் கடவுளே, நாலு கவி த்யாகா ... நாலு விதக் கவிகளை பாடும் திறமையைத் தந்தவரே, சுரலோக சிகாணியே ... தேவலோகத்திற்கு சிகாமணியாக விளங்குபவரே, என் கிளை கூடி ... என் சுற்றத்தார் ஒன்று கூடி, கூகா என அழ ... கூகா என ஓலமிட்டு அழும்படிக்கு, போகா வகை ... இறந்து போகாத வண்ணம், மெய்ப் பொருள் போசியவா ... உண்மையான பொருளை அடியேனுக்கு உபதேசித்த அற்புதந்தான் என்னே ......... பொழிப்புரை ......... செங்கோட்டு வேலவனே, கவிபாடும் திறமையை எனக்கு அளித்தவனே, தேவ லோகத்தின் மணியானவனே, நான் இந்த உடலை விடும் போது என் சுற்றத்தார்கள் அனைவரும் கூடி, நான் மரண யாத்திரைக்கு போகும் இந்த அவல நிலை மாறும்படி எனக்கு உண்மைப் பொருளை உபதேசித்தது என்ன அதிசயம். ......... விளக்கவுரை ......... முன் பாட்டில் தான் இறக்கும் தருவாயில், 'முருகா நீ மயில் மீது வர வேண்டும்' என்று பிரார்த்தித்தார். இந்தப் பாட்டில் நான் இறப்பை ஒழித்து விட்டதாக களி நடனம் புரிகிறார். அநுபூதி நூலில் மற்ற தலங்களைக் குறிக்காமல், நாகாசலமாகிய திருச்செங்கோட்டை மட்டும் பாடுவதற்கு ஒரு விசேஷ குறிப்பும் உண்டு. தெய்வத் திருமலை எனத் தொடங்கும் கந்தர் அலங்காரத்தில், 'இந்த உடம்பு மறைவதன் முன், செங்கோட்டு வேலவனே, என்னை ஆட்கொண்டு அருளவேண்டும். அப்படிச் செய்தால் உன்னை நான் மறவேன்' என விண்ணப்பிததார். அடியார்கள் இச்சையை நிறைவேற்றுவதையே பணியாகக் கொண்ட முருகன், அருணகிரியாரின் முன் தோன்றி உபதேசம் செய்தார். அந்த நன்றி மறக்காமல் இது மாதிரி குறிப்பிடுகிறார். மானுட உடம்பை விட்டு கிளி ரூபம் எடுத்தார் என்கிற செவி செய்தியை இங்கு நினைத்து, முருகன் உபதேசித்தவுடன் மானுட உடம்பு மாறி, திவ்ய தேகம் பெற்றார் என பொருள் கொள்ள வேண்டும். .. கரண மாய்த்து என் மரண மாற்றிய கருணை வார்த்தை .. ... என்பதுதான் மெய்ப் பொருள். 'நாலுகவித் தியாக' என்பதற்கு சாதாரணப் பொருள் ஆசு, மதுரம், சித்திரம், வித்தாரம் .. எனப்படும் நான்கு வித கவித் திறமையை அருளியதோடு, நான்கு வேதங்களின் மெய்ப்பொருளை நாகாசலத்தில் முருகன் அருணகிரியாருக்கு உபதேசித்தான் என்பதை 'பத்தர் கணப்ரிய' என்ற 'திருச்செங்கோடு' திருப்புகழில், .. தத்துவ தர்ப்பர முற்றும் உணர்த்திய சர்ப்பகிரிச்சுரர் பெருமாளே .. ... என்று குறிப்பிடுகிறார். திருப்புகழ் - பாடல் 602. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 4.646 pg 4.647 pg 4.648 WIKI_urai Song number: 11 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
திரு எல். வசந்த குமார் எம்.ஏ. Thiru L. Vasanthakumar M.A. பாடகர் பக்கத்திற்கு to singer's page |
பதிவிறக்க 0.12mb to download |
'மலைமந்தீர்' திரு. இஷ்விந்தர்ஜிட் சிங் 'MalaiMandir' Thiru Ishwinderjit Singh பாடகர் பக்கத்திற்கு to singer's page |
பதிவிறக்க 0.28mb to download |
சென்னை ரேவதி சங்கரன் Revathy Sankaran (Chennai) பாடகர் பக்கத்திற்கு to singer's page |
பதிவிறக்க 0.47mb to download |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |