திருப்புகழ் 602 பத்தர் கணப்ரிய  (திருச்செங்கோடு)
Thiruppugazh 602 baththargaNapriya  (thiruchchengkodu)
Thiruppugazh - 602 baththargaNapriya - thiruchchengkoduSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தத்தன தத்தன தத்தன தத்தன
     தத்தன தத்தன ...... தனதான

......... பாடல் .........

பத்தர்க ணப்ரிய நிர்த்தந டித்திடு
     பட்சிந டத்திய ...... குகபூர்வ

பச்சிம தட்சிண வுத்தர திக்குள
     பத்தர்க ளற்புத ...... மெனவோதுஞ்

சித்ரக வித்துவ சத்தமி குத்ததி
     ருப்புக ழைச்சிறி ...... தடியேனுஞ்

செப்பென வைத்துல கிற்பர வத்தெரி
     சித்தவ நுக்ரக ...... மறவேனே

கத்திய தத்தைக ளைத்துவி ழத்திரி
     கற்கவ ணிட்டெறி ...... தினைகாவல்

கற்றகு றத்திநி றத்தக ழுத்தடி
     கட்டிய ணைத்தப ...... னிருதோளா

சத்தியை யொக்கஇ டத்தினில் வைத்தத
     கப்பனு மெச்சிட ...... மறைநூலின்

தத்துவ தற்பர முற்றுமு ணர்த்திய
     சர்ப்பகி ரிச்சுரர் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

பத்தர் கணப்ரிய ... அடியார் திருக்கூட்டத்தின் மீது அன்புள்ளவனே,

நிர்த்த நடித்திடு பட்சி ... நடனம் ஆடவல்ல மயிலை

நடத்திய குக ... வாகனமாகக் கொண்டு உலவும் குகமூர்த்தியே,

பூர்வ பச்சிம தட்சிண உத்தர திக்குள ... கிழக்கு, மேற்கு, தெற்கு,
வடக்கு ஆகிய நாலாதிசைகளிலும் உள்ள

பத்தர்கள் அற்புதம் எனவோதும் ... அன்பர்கள் இது அற்புதம் என
வியந்து கொண்டாடும்

சித்ர கவித்துவ சத்தமிகுத்த ... அழகிய கவிபாடும் திறத்தின் ஒலி
மிகுந்துள்ள

திருப்புகழைச் சிறிதடியேனும் ... திருப்புகழை ஓரளவுக்காவது
நானும்

செப்பென வைத்து ... சொல்லும்படியாக வைத்தும்,

உலகிற்பரவ ... அப்பாடல்கள் உலகெங்கும் பரவும்படியாகச் செய்தும்,

தெரிசித்த அநுக்ரகம் மறவேனே ... திருப்புகழில் உன்னைத்
தரிசனம் செய்வித்த அருளை அடியேன் ஒரு நாளும் மறக்க மாட்டேன்.

கத்திய தத்தை களைத்துவிழ ... கத்துகின்ற கிளிகள் களைத்து
விழும்படி

திரி கற்கவணிட்டெறி ... சுழற்றும் கவணில் கல்லை வைத்து எறிகின்ற,

தினைகாவல் கற்ற குறத்தி ... தினைப்புனத்தைக் காவல் செய்யக்
கற்ற குறத்தி வள்ளியின்

நிறத்த கழுத்தடி கட்டியணைத்த ... அழகிய நிறமுடைய
கழுத்தினைக் கட்டி அணைத்த

பனிருதோளா ... பன்னிரண்டு புயங்களை உடையவனே,

சத்தியை யொக்க இடத்தினில் வைத்த ... பராசக்தியைப் பொருந்த
தன் இடப்பக்கத்தில் வைத்த

தகப்பனு மெச்சிட ... தந்தையாகிய சிவ பெருமானும் மெச்சும்படி

மறைநூலின் தத்துவ தற்பர முற்றும் உணர்த்திய ... வேத நூலின்
மெய்ப்பொருள் பரம்பொருள் அனைத்தையும் உபதேசித்து விளக்கிய

சர்ப்பகிரிச்சுரர் பெருமாளே. ... நாகமலையில்* வாழும், தேவர்கள்
போற்றும் பெருமாளே.


* திருச்செங்கோடு சேலம் மாவட்டம் சங்கரிதுர்க்கம் ரயில் நிலையத்திலிருந்து
6 மைல் தொலைவில் மலைமீது உள்ளது. மலை பாம்பின் உருவில் இருப்பதால்
நாகமலை என்றும், சிவந்து இருப்பதால் திருச்செங்கோடு என்றும் பெயர் பெற்றது.


'செங்கோடனைக் கண்டுதொழ நாலாயிரம் கண் படைத்திலனே அந்த நான்முகனே'
- என கந்தர் அலங்காரத்தில் சுவாமிகள் பாடியுள்ளார்.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.951  pg 1.952  pg 1.953  pg 1.954 
 WIKI_urai Song number: 384 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Thiru P. Shanmugam
திரு பொ. சண்முகம்

Thiru P. Shanmugam
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Singapore B. Subhashini
'சிங்கப்பூர்' செல்வி சுபாஷினி

Singapore B. Subhashini
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Mrs. Malathi Velayudhan, Chennai
திருமதி வே. மாலதி, சென்னை

Mrs. Malathi Velayudhan, Chennai
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 602 - baththar gaNapriya (thiruchchengkOdu)

baththarga Napriya nirththana diththidu
     pakshina daththiya ...... guhapUrva

pacchima dakshiNa uththara dhikkuLa
     baththargaL aRbudha ...... menavOdhum

chithraka viththuva saththami guththathi
     ruppuga zhaichiRi ...... dhadiyEnum

seppena vaith ulagiR paravath dheri
     siththa anugraha ...... maRavEnE

kaththiya thaththaika Laiththuvi zhaththiri
     kaRkava NitteRi ...... thinaikAval

katraku Raththini Raththaka zhuththadi
     kattiya Naiththapa ...... niruthOLA

sakthiyai okka idaththinil vaiththatha
     gappanu mecchida ...... maRainUlin

thaththuva thaRpara mutrum uNarththiya
     sarppagi ricchurar ...... perumALE.

......... Meaning .........

baththarga Napriya: You love the company of Your multitude of devotees!

nirththana diththidu pakshina daththiya guha: You mount and drive the dancing peacock as Your vehicle, Oh GuhA!

pUrva pacchima dakshiNa uththara dhikkuLa baththargaL: Your devotees in all four directions, namely, East, West, South and North,

aRbudha menavOdhum: exclaim saying that this Thiruppugazh (Songs of Glory) is excellent!

chithraka viththuva saththami guththathi ruppuga zhai: This Thiruppugazh is beautiful, poetic and sung with immense sound; and

chiRi dhadiyEnum seppena vaith ulagiR parava: You made me sing these songs at least to a certain extent and helped to spread them in this world.

dherisiththa anugraha maRavEnE: I can never forget Your grace of granting me Your vision in these songs!

kaththiya thaththaika Laiththuvizha: Making the squeaking parrots tired and driving them away,

thirikaRkava NitteRi thinaikAval: VaLLi was flinging stones from a string in the millet-field guarded by her.

katraku Raththini Raththaka zhuththadi kattiya Naiththapa niruthOLA: You embraced the beautiful neck of that damsel of KuRavas with all Your twelve shoulders!

sakthiyai okka idaththinil vaiththa: SivA, who placed ParAsakthi fittingly on His left side,

thagappanu mecchida: is Your Father; and He was exhilirated

maRainUlin thaththuva thaRpara mutrum uNarththiya: when You preached to Him the essence of VEdAs and their Cosmic principles.

sarppagi ricchurar perumALE.: You reside in ThiruchchengkOdu (which is known as NAgamalai* - The Serpent Mount) and You are worshipped by the DEvAs, Oh Great One!


* NAgamalai is another name of ThiruchchengkOdu because the mount is shaped like a serpent.
ThiruchchengkOdu is in SAlem District of Tamil NAdu, 6 miles away from Sankaridurgam railway station.
As the mount is reddish in colour, the name ThiruchchengkOdu -Red Hill- was given.


In Kandhar AlangkAram, Sri AruNagirinAthar sings about ChenkOdan (Murugan): to see His beauty, he wishes BrahmA, the Creator, had blessed him with 4,000 eyes!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 602 baththar gaNapriya - thiruchchengkodu

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]