பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/952

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று . செங்கேடு திருப்புகழ் உரை 479 மனத்தை அவ்வழியினின்றும் திருப்பிப், பொய்யான வாழ்க்கை என்கின்ற சிக்கை (சிக்கு - மாட்டிக் கொண்ட நிலையை) நீக்கி, வன்மை வாய்ந்த அழகிய வாக்கை (நான்) பெற்று, (அவ்வாக்கின் பயனாக உன்னை) வாழ்த்தி, (அவ்வாழ்த்துதலின் பயனாக) உனது வெட்சி மாலையாகிய (பிரசாதத்தை - பரிசாக)ச் சாத்த (அணியப்) பெறும் பாக்கியம் எனக்குக் கிடைக்குமா! கூட்டமான நூற்றுப்பத்து (ஆயிரம்) நாட்டம் (கண்களை உடைய) வீர வேந்தனாம் இந்திரனுக்கு அரசனாகிய கோழிக் (கொடிக்) கையனே! பாம்பு LDGðXTL) (திருச்செங்கோட்டு) அழகனே! வேலேந்தும் திருக்கரத்துக் குமரேசனே! தத்துவங்கள் (நாற்பத்தெட்டும் நாற்பத்தெட்டும்) தொண்ணுாற்றாறினையும் பொருந்தித் திடமான தர்க்க சாத்திரங்களிற் சொல்லப்பட்ட தக்க நீதி வழிகளில் உள்ள சத்தியமான சொற்களைப் பேசும் பெருமாளே! (சித்ரவாக்குப் பெற்று செச்சை சாத்தப் பெறுவேனோ) 384 பக்தர் கூட்டங்களின் மீது பிரியமுள்ளவனே! நடனம் நடிக்கவல்ல பட்சியாகிய மயிலை வாகனமாகக் கொண்ட குகனே! கிழக்கு மேற்கு தெற்கு வடக்கு (என்னும்) நான்கு திசைகளிலும் உள்ள பக்தர்கள் (இது அற்புதம் எனக் கொண்டாடுகின்ற அழகிய கவி(பாடும் திறத்து) அமைப்பின் ஒலி (அல்லது சந்தம்) மிகுந்துள்ள திருப்புகழ் என்னும் அருமை வகைக் கவிகளைச் சிறிதளவு அடியேனும்