![]() | ![]() திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's | ![]() |
---|
திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அலங்காரம் - 94 தெள்ளிய ஏனலில் . Kandhar AlangkAram by Thiru Arunagirinathar - 94 theLLiya Enalil . |
![]() | ![]() | தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது பேராசிரியர் சிங்காரவேலு சச்சிதானந்தம் (மலேசியா) Meanings in Tamil and English by Dr. Singaravelu Sachithanantham (Malaysia) | English in PDF format PDF வடிவத்தில் mp3 ![]() ![]() | அகரவரிசை எண்வரிசை தேடல் alphabetical numerical search |
பாடல் 94. ... தெள்ளிய ஏனலில் தெள்ளிய ஏனலிற் கிள்ளையைக் கள்ளச் சிறுமியெனும் வள்ளியை வேட்டவன் தாள்வேட் டிலைசிறு வள்ளைதள்ளித் துள்ளிய கெண்டையைத் தொண்டையைத் தோதகச் சொல்லைநல்ல வெள்ளிய நித்தில வித்தார மூரலை வேட்டநெஞ்சே. ......... சொற்பிரிவு ......... தெள்ளிய ஏனலில் கிள்ளையைக் கள்ளச் சிறுமி எனும் வள்ளியை வேட்டவன் தாள் வேட்டில சிறுவள்ளை தள்ளித் துள்ளிய கெண்டையைத் தொண்டையைத் தோதகச் சொல்லை நல்ல வெள்ளிய நித்தில வித்தார மூரலை வேட்ட நெஞ்சே. ......... பதவுரை ......... [ஓ, மனமே!] தெளிவான தினைப் புனத்தில் உள்ள கிளியை ஒத்தவரும் உள்ளத்தைக் கவரும் இளங்குமரியுமான வள்ளியம்மையை விரும்பிய திருமுருகப்பெருமானின் திருவடிகளை நீ விரும்பவில்லை; [ஆயினும்] சிறிய வள்ளைக்கொடியைத் தள்ளிவிட்டு [ஆற்றில்] துள்ளித் திரிகின்ற கெண்டைமீன் போன்ற [பெண்களின்] கண்களையும், கோவைக் கனியொத்த சிவந்த இதழ்களையும், மயக்கும் வஞ்சக வார்த்தையையும், வெண்மையான முத்துப் போன்ற ஒளிவீசும் பற்களுடன் கூடிய புன்சிரிப்பையும் விரும்புகின்றாயே, மனமே! |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 4.98 WIKI_urai Song number: 94 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
![]() | திரு எல். வசந்த குமார் எம்.ஏ. Thiru L. Vasanthakumar M.A. பாடகர் பக்கத்திற்கு to singer's page |
Song 94. - theLLiya Enalil theLLiya Enalil kiLLaiyaik kaLLach chiRumi enum vaLLiyai vEttavan thAL vEttila siRuvaLLai thaLLith thuLLiya keNdaiyaith thoNdaiyaith thOdhagach chollai nalla veLLiya niththila viththAra mUralai vEtta nenjE. O' mind, you do not long for the Sacred Feet of Lord ThirumurugapperumAn, who is fond of VaLLi-ammai, a delightful young girl like the parrot of the clear millet-field. [However] you are covetous of [women's] eyes, which are like the carp-fish pushing the vaLLai-creeper, and jumping around [in the river], their kovai-fruit-like-red-lips, their enchanting [but] deceitful speech, and their pearly-white-teeth and bright smile! |
அனைத்து செய்யுட்கள் ஒலிவடிவத்துடன் அகரவரிசைப் பட்டியலுக்கு PDF வடிவத்தில் எண்வரிசைப் பட்டியலுக்கு English Transliteration of all verses For Alphabetical List in PDF format For Numerical List |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. © Copyright Kaumaram dot com - 2001-2040 [W3]COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED. Please contact me (the webmaster), if you wish to place a link in your website. email: kaumaram@gmail.com Disclaimer: Although necessary efforts have been taken by me (the webmaster), to keep the items in www.kaumaram.com safe from viruses etc., I am NOT responsible for any damage caused by use of and/or downloading of any item from this website or from linked external sites. Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items from the internet for maximum safety and security. |