![]() | ![]() திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's | ![]() |
---|
திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அலங்காரம் - 95 யான் தான் எனும் Kandhar AlangkAram by Thiru Arunagirinathar - 95 yAn thAn enum |
![]() | ![]() | தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது பேராசிரியர் சிங்காரவேலு சச்சிதானந்தம் (மலேசியா) Meanings in Tamil and English by Dr. Singaravelu Sachithanantham (Malaysia) | English in PDF format PDF வடிவத்தில் mp3 ![]() ![]() | அகரவரிசை எண்வரிசை தேடல் alphabetical numerical search |
பாடல் 95 ... யான் தான் எனும் யான்றானெ னுஞ்சொல் லிரண்டுங் கெட்டாலன்றி யாவருக்குந் தோன்றாது சத்தியந் தொல்லைப் பெருநிலஞ் சூகரமாய்க் கீன்றான் மருகன் முருகன் க்ருபாகரன் கேள்வியினாற் சான்றாரு மற்ற தனிவெளிக் கேவந்து சந்திப்பதே. ......... சொற்பிரிவு ......... யான், தான் எனும் சொல் இரண்டும் கெட்டால் அல்லது யாவருக்கும் தோன்றாது சத்தியம் தொல்லைப்பெருநிலம் சூகரம் ஆய் கீன்றான் மருகன் முருகன் கிருபாகரன் கேள்வியினால் சான்று ஆரும் அற்ற தனி வெளிக்கே வந்து சந்திப்பதே. ......... பதவுரை ......... 'யான்', 'தான்' என்னும் இரண்டு சொற்களும் இல்லாமற்போனாலன்றி [அத்துவித-முக்தி] எவருக்கும் தோன்றாது. இது உண்மை. பழமை பொருந்திய பெரிய பூமியை வராகமாய் உருவெடுத்து பிளந்தவராகிய திருமாலின் திருமருகரும் முருகவேளுமாகிய கருணைக்கு உரைவிடமாகிய கிருபாகரனது உபதேசக் கேள்வியினால் சாட்சி ஒருவரும் இல்லாத ஒப்பற்ற ஞான வெளியில் திருமுருகப்பெருமானின் திருவருளால் வந்து கூடுவது [அத்துவித-முக்தியாகும்]. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 4.99 pg 4.100 WIKI_urai Song number: 95 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
![]() | திரு எல். வசந்த குமார் எம்.ஏ. Thiru L. Vasanthakumar M.A. பாடகர் பக்கத்திற்கு to singer's page |
Song 95 - yAn thAn enum yAn, thAn enum sol iraNdum kettAl alladhu yAvarukkum thOndRAdhu saththiyam thollaipperunilam sUgaram Ay keendRan marugan murugan kirubAgaran kELviyinAl sAndRu Arum atRa thani veLikkE vandhu sandhippadhE. Unless the two words, namely, 'I' and 'oneself' become absent, [the state of indivisible mukthi (salvation)] is not attainable by anyone. This is the Truth. Lord ThirumAl assumed the form of a boar, and split the ancient, huge earth; his divine nephew is ThirumurugapperumAn, Who is the abode of compassion [KirubAgaran]. It is by listening to the sacred teaching of the Lord that one attains [the state of indivisible mukthi], graciously bestowed by the Lord in the unique outer space of wisdom, where there is no witness. |
அனைத்து செய்யுட்கள் ஒலிவடிவத்துடன் அகரவரிசைப் பட்டியலுக்கு PDF வடிவத்தில் எண்வரிசைப் பட்டியலுக்கு English Transliteration of all verses For Alphabetical List in PDF format For Numerical List |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. © Copyright Kaumaram dot com - 2001-2040 [W3]COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED. Please contact me (the webmaster), if you wish to place a link in your website. email: kaumaram@gmail.com Disclaimer: Although necessary efforts have been taken by me (the webmaster), to keep the items in www.kaumaram.com safe from viruses etc., I am NOT responsible for any damage caused by use of and/or downloading of any item from this website or from linked external sites. Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items from the internet for maximum safety and security. |