![]() | ![]() திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's | ![]() |
---|
திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அலங்காரம் - 93 மண் கமழ் உந்தி Kandhar AlangkAram by Thiru Arunagirinathar - 93 maN kamazh undhi |
![]() | ![]() | தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது பேராசிரியர் சிங்காரவேலு சச்சிதானந்தம் (மலேசியா) Meanings in Tamil and English by Dr. Singaravelu Sachithanantham (Malaysia) | English in PDF format PDF வடிவத்தில் mp3 ![]() ![]() | அகரவரிசை எண்வரிசை தேடல் alphabetical numerical search |
பாடல் 93 ... மண் கமழ் உந்தி மண்கம ழுந்தித் திருமால் வலம்புரி யோசையந்த விண்கமழ் சோலையும் வாவியுங் கேட்டது வேலெடுத்துத் திண்கிரி சிந்த விளையாடும் பிள்ளைத் திருவரையிற் கிண்கிணி யோசை பதினா லுலகமுங் கேட்டதுவே. ......... சொற்பிரிவு ......... மண் கமழ் உந்தித் திருமால் வலம்புரி ஓசை அந்த விண் கமழ் சோலையும் வாவியும் கேட்டது வேல் எடுத்துத் திண்கிரி சிந்த விளையாடும் பிள்ளைத் திரு அரையில் கிண்கிணி ஓசை பதிநால் உலகமும் கேட்டதுவே. ......... பதவுரை ......... மண்ணின் மணம் கமழ்கின்ற உந்தியை உடையவராகிய திருமாலின் வலம்புரிச் சங்கின் ஒலியானது அந்த விண்ணுலகில் நறுமணம் வீசும் பூங்காவிலும் தடாகத்திலும் கேட்டது. வேலாயுதத்தைத் திருக்கரத்தில் ஏந்தி திட்பமான மலைகள் [பொடியாகி] உதிருமாறு விளையாடுகின்ற பிள்ளையாகிய குமாரக் கடவுளின் அழகிய இடையில் விளங்கும் கிண்கிணியின் நாதமானது பதினான்கு உலகங்களிலும் கேட்டது. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 4.97 WIKI_urai Song number: 93 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
![]() | திரு எல். வசந்த குமார் எம்.ஏ. Thiru L. Vasanthakumar M.A. பாடகர் பக்கத்திற்கு to singer's page |
![]() | திரு பொ. சண்முகம் Thiru P. Shanmugam பாடகர் பக்கத்திற்கு to singer's page |
திருமதி காந்திமதி சந்தானம் Mrs Kanthimathy Santhanam பாடகர் பக்கத்திற்கு to singer's page | ![]() |
Song 93 - maN kamazh undhi maN kamazh undhith thirumAl valamburi Osai andha viN kamazh sOlaiyum vAviyum kEttadhu vEl eduththuth thiNgiri sindha viLaiyAdum piLLaith thiru araiyil kiNkiNi Osai padhinAl ulagamum kEttadhuvE. The sound of the 'right-turning' conch [blown by] Lord ThirumAl, whose navel is endowed with the natural fragrance of the earth, was heard in the fragrant groves and pools of the celestial world. When the Infant-Lord KumArapperumAn held the lance in His Sacred Hand and sported around mighty hills [causing them] to wither away [as dust], the sound of kiN-kiNi bells worn around the Infant-Lord's waist was heard all over the fourteen worlds. |
அனைத்து செய்யுட்கள் ஒலிவடிவத்துடன் அகரவரிசைப் பட்டியலுக்கு PDF வடிவத்தில் எண்வரிசைப் பட்டியலுக்கு English Transliteration of all verses For Alphabetical List in PDF format For Numerical List |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. © Copyright Kaumaram dot com - 2001-2040 [W3]COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED. Please contact me (the webmaster), if you wish to place a link in your website. email: kaumaram@gmail.com Disclaimer: Although necessary efforts have been taken by me (the webmaster), to keep the items in www.kaumaram.com safe from viruses etc., I am NOT responsible for any damage caused by use of and/or downloading of any item from this website or from linked external sites. Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items from the internet for maximum safety and security. |