பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரம் 91 94. நெஞ்சொடு கிளத்தல் தெள்ளிய ஏனலிற் கிள்ளையைக் கள்ளச் சிறுமியெனும் வள்ளியை வேட்டவன் தாள்வேட் டிலைசிறு வள்ளைதள்ளித் துள்ளியை கெண்டையைத் தொண்டையைத் தோதகச்சொல்லை.நல்ல வெள்ளிய நித்தில வித்தார மூரலை வேட்டநெஞ்சே (அந்) சிறுவள்ளை...... நெஞ்சே! தெள்ளிய..... வேட்டிலை (பொ உ) (சிறு சிறிதாய் (வள்ளை) வள்ளைக் கொடிபோன்ற காதை அணுகித் தள்ளித் துள்ளுகின்ற (கெண்டையை) கெண்டைமீன் போன்ற கண்ணையும், தொண்டையை - கொவ்வைக் கனிபோன்ற வாயிதழையும், (தேர்தகச் சொல்லை) வஞ்சகம் நிறைந்த பேச்சையும், நல்ல (வெள்ளிய) வெண்ணிறம் விளங்கும் (நித்தில) முத்துப் போன்ற, (வித்தார) நீடிய அல்லது விந் ான (மூரலை) புன்சிரிப்புடன் கூடிய பற்களையும் (வேட்ட) if நிற்கும் நெஞ்சே (நீ (தெள்ளிய) தெளிந்து சீரான நிலையில் இருந்த (ஏனலில் தினைக்கொல்லையில் இருந்த (கிள்ளையை) கிளி ப்ோன்ற வள்ளியைத் (கள்ளம்) களவுப் புணர்ச்சிக்கு உட்பட்ட சி றுமியாகிய வள்ளியை (வேட்டவன்) விரும்பிச் சென்றவனான திருத்தணி. கேசனது (தாள்) திருவடிகளை (வேட்டிலை) விரும்பினாயில்லை. ஈதென்ன ப்ாவம்' (சு உ) மாதர் அவயவங்களை விரும்பும் நெஞ்சமே வள்ளியை நாடிச் சென்ற திருத்தணிகை நாயகனை நீ விரும்புவாயாக (கு உ) வள்ளி = வள்ளைக் கொடிபோலும் காது. கெண்டை - மீன் போலுங் கண்.வெள்ளிய நித்தில மூரல் =வென் முத்துப்போன்ற பல் தொண்டை = கொவ்வைக் கனிபோலும் வாய். தோதகம் = வஞ்சகம் தோதகவித்தை படித்து நடிப்பவர்"-திருப்புகழ் 197 தெள்ளிய கிள்ளை எனக்கூட்டி - ஞானத் தெளிவுகொண்ட கிளி (வள்ளி) எனலுமாம், கள்ளச்சிறுமி - முருகன் உள்ளத்தையே கவர்ந்தாளாதலின்; தன்னை இழந்தாள் வள்ளி - முருகன் அவளை நாடிச்சென்று மணந்தான்; நெஞ்சே! நீயும் தன்னையிழந்த நிலையில் இருந்தால் உன்னை நாடி வருவான் முருகன் - என்னும் உண்மையை வள்ளி வரலாற்றால் அருணகிரியார் இங்கு விளக்குகின்றார். வள்ளி தள்ளும் கெண்டை - காதடருங் கயல் - திருப்புகழ் 9 இந்தப் பாடலில் "ளகர ஒசைமிக்குள்ளது.