Sri AruNagirinAthar - Author of the poemsKaumaram dot com - The Website for Lord Muruga and His Devotees

திரு அருணகிரிநாதர் அருளிய
கந்தர் அலங்காரம்
 

Sri AruNagirinAthar's
Kandhar AlangkAram
 

Sri Kaumara Chellam
 திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அலங்காரம்  - 81  தாரா கணம்
Kandhar AlangkAram by Thiru Arunagirinathar  - 81  thArA gaNam
 
Kandhar AlangkAramDr. Singaravelu Sachithanantham (Malaysia)    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    பேராசிரியர்
    சிங்காரவேலு சச்சிதானந்தம்
    (மலேசியா)

   Meanings in Tamil and English by
   Dr. Singaravelu Sachithanantham
   (Malaysia)
English
in PDF format

 PDF வடிவத்தில் 

with mp3 audio
previous page next page
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

alphabetical
numerical
search

பாடல் 81 ... தாரா கணம்

தாரா கணமெனுந் தாய்மார் அறுவர் தருமுலைப்பால்
   ஆரா துமைமுலைப் பாலுண்ட பால னரையிற்கட்டுஞ்
      சீராவுங் கையிற் சிறுவாளும் வேலுமென் சிந்தையவே
         வாரா தகலந்த காவந்த போதுயிர் வாங்குவனே.

......... சொற்பிரிவு .........

தாரா கணம் எனும் தாய்மார் அறுவர் தரும் முலைப்பால்
   ஆராது உமைமுலைப்பால் உண்ட பாலன் அரையில் கட்டும்
      சீராவும் கையில் சிறுவாளும் வேலும் என் சிந்தையவே
         வாராது அகல், அந்தகா, வந்தபோது உயிர்வாங்குவனே!

......... பதவுரை .........

நட்சத்திரக் கூட்டம் என்கின்ற [செவிலித்] தாய்கள் ஆறு பேரும் தந்த
முலைப் பாலையுண்டது போதாமல் உமாதேவியாரின் திருமுலைப்
பாலையும் உண்டருளிய பாலகனாகிய திருமுருகப்பெருமானின்
திருவரையில் கட்டிக் கொள்ளும் உடைவாளும், திருக்கரத்தில்
ஏந்தியுள்ள சிறுவாளும் வேலாயுதமும் அடியேனின் சிந்தையில்
குடி கொண்டிருக்கின்றன; ஆதலால், இயமனே, என்னிடம் வாராது
நீங்கிப் போவாயாக; மீறி வந்தால் உன் உயிரை வாங்கிவிடுவேன்!

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 4.86 
 WIKI_urai Song number: 81 
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Thiru L. Vasanthakumar M.A.
திரு எல். வசந்த குமார் எம்.ஏ.

Thiru L. Vasanthakumar M.A.
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Song 81 - thArA gaNam

thArA gaNam enum thAimAr aRuvar tharum mulaippAl
   ArAdhu umaimulaippAl uNda bAlan araiyil kattum
      seerAvum kaiyil siRuvALum vElum en sindhaiyavE
         vArAdhu agal, andhagA, vandhabOdhu uyirvAngkuvanE!

The Infant-Lord ThirumurugapperumAn, not content with suckling the breast-milk of the six [foster] mothers, known as a cluster of asterisms [kArththigai], also suckled the breast-milk of the Goddess UmAdhEvi. The Infant-Lord's scimitar, worn at the waist, as well as the short sword and the lance in His Sacred Hand abide in my mind. Therefore, O' Yaman [death], you'd better go away; if you still come, I shall take your life away!
go to top
 அனைத்து செய்யுட்கள்   ஒலிவடிவத்துடன் 
 அகரவரிசைப் பட்டியலுக்கு   PDF வடிவத்தில்   எண்வரிசைப் பட்டியலுக்கு 
 English Transliteration of all verses
 For Alphabetical List   in PDF format   For Numerical List 

Thiru AruNagirinAthar's Kandhar AlangkAram

Verse 81 - thArA gaNam

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 2503.2022 [css]