Sri AruNagirinAthar - Author of the poemsKaumaram dot com - The Website for Lord Muruga and His Devotees

திரு அருணகிரிநாதர் அருளிய
கந்தர் அலங்காரம்
 

Sri AruNagirinAthar's
Kandhar AlangkAram
 

Sri Kaumara Chellam
 திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அலங்காரம்  - 80  மாகத்தை முட்டி
Kandhar AlangkAram by Thiru Arunagirinathar  - 80  mAgaththai mutti
 
Kandhar AlangkAramDr. Singaravelu Sachithanantham (Malaysia)    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    பேராசிரியர்
    சிங்காரவேலு சச்சிதானந்தம்
    (மலேசியா)

   Meanings in Tamil and English by
   Dr. Singaravelu Sachithanantham
   (Malaysia)
English
in PDF format

 PDF வடிவத்தில் 

with mp3 audio
previous page next page
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

alphabetical
numerical
search

பாடல் 80 ... மாகத்தை முட்டி

மாகத்தை முட்டி வருநெடுங் கூற்றவன்வந் தாலென்முன்னே
   தோகைப் புரவியிற் றோன்றிநிற் பாய்சுத்த நித்தமுத்தித்
      த்யாகப் பொருப்பைத் த்ரிபுராந் தகனைத் த்ரியம்பகனைப்
         பாகத்தில் வைக்கும் பரமகல் யாணிதன் பாலகனே.

......... சொற்பிரிவு .........

மாகத்தை முட்டிவரும் நெடும்கூற்றன் வந்தால் என் முன்னே
   தோகைப் புரவியில் தோன்றி நிற்பாய் சுத்த நித்தமுத்தித்
      தியாகப் பொருப்பைத் திரிபுர அந்தகனை திரியம்பகனைப்
         பாகத்தில் வைக்கும் பரம கல்யாணி தன் பாலகனே.

......... பதவுரை .........

ஆகாயத்தை முட்டி வருகின்ற நெடிய இயமன் [அடியேனின்
இறுதிக் காலத்தில்] வருவான் ஆயின், அடியேனுக்கு முன்பாக
குதிரையையொத்த தோகையையுடைய மயிலின்மீது தேவரீர்
ஏறி வந்து அடியேனுக்கு முன்பாக நின்று திருவருள்புரிவீர்.
தூய்மையானதும் என்றும் அழியாததுமான முக்தியை வழங்கும்
கொடைத் தன்மையுடைய மலையைப்போன்றவரும் முப்புரத்தை
எரித்தவரும் மூன்று கண்களை உடையவருமான சிவபெருமானை
தம் வலப்பக்கத்தில் வைத்திருக்கும் மேலான கல்யாண
குணங்களுடைய உமாதேவியாரின் திருமைந்தரே!

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 4.85   pg 4.86 
 WIKI_urai Song number: 80 
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Thiru L. Vasanthakumar M.A.
திரு எல். வசந்த குமார் எம்.ஏ.

Thiru L. Vasanthakumar M.A.
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Song 80 - mAgaththai mutti

mAgaththai muttivarrum nedumkUtRan vandhAl en munnE
   thOgaip puraviyil thOndRi niRppAi suththa niththamuththith
      thiyAgap poruppaith thiribura andhaganai thiriyambaganaip
         pAgaththil vaikkum param kalyANi than bAlaganE.

O' Lord, if the tall sky-butting Yaman [death] comes [at the end of my life], You will come riding on the horse-like-feathery-tailed-peacock, and will stand before me and grant me the grace of protection. You are the beloved Son of the most highly auspicious Goddess UmAdhEvi, who has on Her right side Her beloved spouse Lord SivaperumAn, who is like a great mountain bestowing pure and eternal mukthi [liberation], who burnt down the three-fold-fortresses, and who is triple-eyed.
go to top
 அனைத்து செய்யுட்கள்   ஒலிவடிவத்துடன் 
 அகரவரிசைப் பட்டியலுக்கு   PDF வடிவத்தில்   எண்வரிசைப் பட்டியலுக்கு 
 English Transliteration of all verses
 For Alphabetical List   in PDF format   For Numerical List 

Thiru AruNagirinAthar's Kandhar AlangkAram

Verse 80 - mAgaththai mutti

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 2503.2022 [css]