Sri AruNagirinAthar - Author of the poemsKaumaram dot com - The Website for Lord Muruga and His Devotees

திரு அருணகிரிநாதர் அருளிய
கந்தர் அலங்காரம்
 

Sri AruNagirinAthar's
Kandhar AlangkAram
 

Sri Kaumara Chellam
 திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அலங்காரம்  - 55  ஆங்காரமும் அடங்கார்
Kandhar AlangkAram by Thiru Arunagirinathar  - 55  AngkAramum adangkAr
 
Kandhar AlangkAramDr. Singaravelu Sachithanantham (Malaysia)    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    பேராசிரியர்
    சிங்காரவேலு சச்சிதானந்தம்
    (மலேசியா)

   Meanings in Tamil and English by
   Dr. Singaravelu Sachithanantham
   (Malaysia)
English
in PDF format

 PDF வடிவத்தில் 

with mp3 audio
previous page next page
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

alphabetical
numerical
search

பாடல் 55 ... ஆங்காரமும் அடங்கார்

ஆங்கா ரமுமடங் காரொடுங் கார்பர மாநந்தத்தே
   தேங்கார் நினைப்பு மறப்பு மறார்தினைப் போதளவும்
      ஓங்காரத் துள்ளொளிக் குள்ளே முருக னுருவங்கண்டு
         தூங்கார் தொழும்பு செய்யா ரென்செய் வார்யம தூதருக்கே.

......... சொற்பிரிவு .........

ஆங்காரமும் அடங்கார் ஒடுங்கார் பரம ஆநந்தத்தே
   தேங்கார் நினைப்பு மறப்பும் அறார் தினைப்போது அளவும்
      ஓங்காரத்து உள் ஒளிக்கு உள்ளே முருகன் உருவம் கண்டு
         தூங்கார் தொழும்பு செய்யார் என் செய்வார் யமதூதருக்கே?

......... பதவுரை .........

['நான்' என்னும்] அகங்காரம், ['எனது' என்னும்] மமகாரம் ஆகிய
இரண்டையும் ஒழித்து அருள் அனுபவத்தில் அடங்கப் பெறமாட்டார்;
பொறிபுலன்கள் ஒடுங்கப்பெறமாட்டார்; பேரின்ப வெள்ளத்தில் மூழ்கி
நிறைவு பெறமாட்டார்; நினைப்பும் மறப்பும் அற்றச் சமாதி நிலையில்
பொருந்தமாட்டார்; ஒரு தினையளவு காலமாயினும் ஓங்காரமாகிய
நாதத்துக்குள்ளே ஒளிரும் ஜோதியினுள்ளே திருமுருகப்பெருமானின்
திருவுருவத்தின் தரிசனம் கண்டு அப்பரவச நிலையில் தூங்கமாட்டார்;
மற்றவர்களுக்குத் தொண்டு செய்யமாட்டார். இயமனுடைய தூதர்
வரும்போது என்ன செய்வார்?

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 4.61   pg 4.62 
 WIKI_urai Song number: 55 
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Thiru L. Vasanthakumar M.A.
திரு எல். வசந்த குமார் எம்.ஏ.

Thiru L. Vasanthakumar M.A.
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
திருமதி காந்திமதி சந்தானம்

Mrs Kanthimathy Santhanam
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Mrs Kanthimathy Santhanam

Song 55 - AngkAramum adangkAr

AngkAramum adangkAr odungkAr parama AnandhaththE
   thEngkAr ninaippu maRappum aRAr thinaippOdhu aLavum
      OngkAraththu uL oLikku uLLE murugan uruvam kaNdu
         thUngkAr thozhumbu seiyAr en seivAr yamthUdharukkE?

Those, who do not forsake the egoism of 'I' and 'Mine', and those, who do not subdue the influence of their sense-organs, will not ever partake of the eternal joy; nor will they abide in the state of samAdhi ['beatitude'], bereft of both memory and oblivion; nor will they have even for a moment the sacred vision of ThirumurugapperumAn in the effulgence of light of OmkAra [PraNava] so as to rest in the slumber of blissfulness, bereft of all action and speech; nor will they be of any service to others. What will they do when death's messenger comes?
go to top
 அனைத்து செய்யுட்கள்   ஒலிவடிவத்துடன் 
 அகரவரிசைப் பட்டியலுக்கு   PDF வடிவத்தில்   எண்வரிசைப் பட்டியலுக்கு 
 English Transliteration of all verses
 For Alphabetical List   in PDF format   For Numerical List 

Thiru AruNagirinAthar's Kandhar AlangkAram

Verse 55 - AngkAramum adangkAr

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 2503.2022 [css]