பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 முருகவேள் திருமுறை 18ஆம் திருமுறை 55. உலகுக்கு உபதேசம் ஆங்கா ரமுமடங் காரொடுங் கார்பர மாநந்தத்தே திேங்கார் நினைப்பு மறப்பு மறார்தினைப் போதளவும் ஓங்காரத் துள்ளொளிக் குள்ளே முருக னுருவங்கண்டு தூங்கார் தொழும்புசெய் யாரென்செய் வார்யம தூதருக்கே (பொ - உ) நான் என்னும் அகங்காரத்தையும் அடக்க மாட்டார்கள். மனவேகத்தை அடக்கி ஒடுங்கமாட்டார்கள், (இறைவனைத் தியானிப்பதால் வரும்) பரமானந்தத்தை நிரம்ப அனுபவிக்கமாட்டார்கள், நினைப்பு, மறப்பு என்னும் நிலைகள் அறச் சும்மா இருக்கமாட்டார்கள். தினை அளவு பொழுதேனும் (ஓங்காரத்துள்ளொளிக்குள்ளே) பிரணவத்தின் உள்ளொளியாய் ளங்குகின்ற முருகவேளின் திருவுருவத்தைப் பார்த்துத் (தூங்கார்) சமாதி நிலையில் இருக்கமாட்டார்கள்; இறைவனுக்குத் (தொழும்பு) தொண்டு புரியார்கள் இங்ங்னம் இருப்பவர்கள் (யமதுாதருக்கு என் செய்வார்) யமதுரதர்கள் வரும்போது என்ன செய்யக்கூடும் - ஒன்றும் செய்ய முடியாது என்றபடி (சு - உ) யான் என்பது அற்றுப்போதல், புலனொடுங்குதல், பரமானந்தத்தில் நிறைவுபெற்றிருத்தல், சும்மா இருத்தல், தியானத்தால் பிரணவ மத்தியில் முருகனைத் தரிசித்தல், బ్జా இறைவன் அடியவர்க்கும் தொண்டு செய்தல் - இவை தம்மில் ஒரு நெறியும் இல்லாதவர் யமதூதர்கள் வரும்போது என்ன செய்ய முடியும்! (கு உ) "ஆங்காரம் உள்ளடக்கி ஐம்புலனைச் சுட்டறுத்துத் துரங்காமற் று.ாங்கிச் சுகம் பெறுவ தெக்காலம்" - எக்காலக் 3 பத்ரகிரியார், பட்டினத்தார் பாடல்களை அருணகிரியார் அடிநாளில் படித்திருப்பார் போலும் அலங்காரம் 73, 78ம் பார்க்க அகங்காரம் அட்ங்குதல் - யான் தான் எனுஞ் சொல் இரண்டும் கெட்டாலன்றி யாவருக்கும் தோன்றாது சத்தியம்"(95) ஒடுங்குதல்."ஐந்தில் ஒடுங்கில் அரன்பதமாவது" திருமந்:2035 பரமானந்தத்தில் தேங்குதல் - பாடல் 47 பார்க்க தேக்கு பரமானந்தத் தெள்ளமுதம்-கந்தர் கலிவெண்பா 28 நினைப்பு மறப்பு அறுதல் மறப்பும் நினைப்புமற்று மாண்டி ருப்ப தெக்காலம்" பத்ரகிரியார் எக்காலக்கண்ணி 194 "நினைப்பு மறப்பற்று நிறைந்த அறிவாய்"ஒழிவிலொடுக்கம் விரத் தி 7 நினைப்பு மறப்பு மிலாதவர் நெஞ்சம் வினைப் பற்றறுக்கும் விமல னிருக்கும்" - திருமந்திரம் 297 நினைப்பு மறப்பு-சகல கேவலங்கள்:"கருதா மறவாநெறி" என்றார் அநுபூதியில் 21