Sri AruNagirinAthar - Author of the poemsKaumaram dot com - The Website for Lord Muruga and His Devotees

திரு அருணகிரிநாதர் அருளிய
கந்தர் அலங்காரம்
 

Sri AruNagirinAthar's
Kandhar AlangkAram
 

Sri Kaumara Chellam
 திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அலங்காரம்  - 56  கிழியும்படி அடல்
Kandhar AlangkAram by Thiru Arunagirinathar  - 56  kizhiyumbadi adal
 
Kandhar AlangkAramDr. Singaravelu Sachithanantham (Malaysia)    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    பேராசிரியர்
    சிங்காரவேலு சச்சிதானந்தம்
    (மலேசியா)

   Meanings in Tamil and English by
   Dr. Singaravelu Sachithanantham
   (Malaysia)
English
in PDF format

 PDF வடிவத்தில் 

with mp3 audio
previous page next page
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

alphabetical
numerical
search

பாடல் 56 ... கிழியும்படி அடல்

கிழியும் படியடற் குன்றெறிந் தோன்கவி கேட்டுருகி
   இழியுங் கவிகற் றிடாதிருப் பீரெரி வாய்நரகக்
      குழியுந் துயரும் விடாய்ப்படக் கூற்றுவனுார்க் குச்செல்லும்
         வழியுந் துயரும் பகரீர் பகரீர் மறந்தவர்க்கே.

......... சொற்பிரிவு .........

கிழியும்படி அடல் குன்று எறிந்தோன் கவி கேட்டு உருகி
   இழியும் கவி கற்றிடாது இருப்பீர்; எரிவாய் நரகக்
      குழியும் துயரும் விடாய்ப்படக் கூற்றுவன் ஊர்க்குச் செல்லும்
         வழியும் துயரும் பகரீர் பகரீர் மறந்தவர்க்கே.

......... பதவுரை .........

வலிமையுடைய கிரௌஞ்ச மலையைப் பிளந்து ஒழியுமாறு வலிமையுடைய
வேலாயுதத்தை விடுத்து அருளிய திருமுருகப்பெருமானைப் புகழும்
அருட்பாடல்களைக் கேட்டு உள்ளம் உருகி ஏனைய இழிந்த
பாடல்களைக் கற்காமல் இருப்பீராக. நெருப்புடன் கூடிய நரகக்
குழியையும் அதனால் அனுபவிக்கக் கூடிய துன்பத்தையும் நீரில்லாத
வழியே சென்று தவித்து இயமனுடைய ஊருக்குப் போகின்ற கொடிய
வழியையும் அதனால் உண்டாகும் துன்பத்தையும் மறந்தவர்களுக்குச்
சொல்லுங்கள், [மீண்டும்] சொல்லுங்கள்.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 4.62 
 WIKI_urai Song number: 56 
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Thiru L. Vasanthakumar M.A.
திரு எல். வசந்த குமார் எம்.ஏ.

Thiru L. Vasanthakumar M.A.
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Song 56 - kizhiyumbadi adal

kizhiyumbadi adal kundRu eRindhOn kavi kEttu urugi
   izhiyum kavi katRidAdhu iruppeer; erivAi naragak
      kuzhiyum thuyarum vidAiyppadak kUtRuvan Urkkuch sellum
         vazhiyum thuyarum pagareer pagareer maRandhavarkkE.

You'd better listen to the heart-melting sacred songs in praise of ThirumurugapperumAn, who annihilated the mighty krauncha-hill by splitting it with the gracious hurling of the valiant lance, and [at the same time] you'd better also abstain from learning disgraceful songs. You'd better also tell this again and again to those people, who forget their suffering in the fiery pits of hell and during their journey [along the horrid waterless way] to the village of death.
go to top
 அனைத்து செய்யுட்கள்   ஒலிவடிவத்துடன் 
 அகரவரிசைப் பட்டியலுக்கு   PDF வடிவத்தில்   எண்வரிசைப் பட்டியலுக்கு 
 English Transliteration of all verses
 For Alphabetical List   in PDF format   For Numerical List 

Thiru AruNagirinAthar's Kandhar AlangkAram

Verse 56 - kizhiyumbadi adal

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 2503.2022 [css]