![]() | ![]() திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's | ![]() |
---|
திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அலங்காரம் - 57 பொரு பிடியும் Kandhar AlangkAram by Thiru Arunagirinathar - 57 poru pidiyum |
![]() | ![]() | தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது பேராசிரியர் சிங்காரவேலு சச்சிதானந்தம் (மலேசியா) Meanings in Tamil and English by Dr. Singaravelu Sachithanantham (Malaysia) | English in PDF format PDF வடிவத்தில் mp3 ![]() ![]() | அகரவரிசை எண்வரிசை தேடல் alphabetical numerical search |
பாடல் 57 ... பொரு பிடியும் பொருபிடி யுங்களி றும்விளை யாடும் புனச்சிறுமான் தருபிடி காவல சண்முக வாவெனச் சாற்றிநித்தம் இருபிடி சோறுகொண் டிட்டுண் டிருவிளை யோமிறந்தால் ஒருபிடி சாம்பருங் காணாது மாய உடம்பிதுவே. ......... சொற்பிரிவு ......... பொரு பிடியும் களிறும் விளையாடும் புனச்சிறுமான் தரு பிடி காவல் சண்முகவா எனச் சாற்றி நித்தம் இருபிடி சோறு கொண்டு இட்டு உண்டு இருவினையோம் இறந்தால் ஒருபிடி சாம்பரும் காணாது மாய உடம்பு இதுவே. ......... பதவுரை ......... ஓ' மனமே, போர் செய்தற்குரிய பெண் யானையும் ஆண் யானையும் கலந்து விளையாடுகின்ற தினைப் புனத்தில் உள்ள சிறிய மானானது பெற்ற பெண் யானையைப்போன்ற 'வள்ளியம்மையாருக்கு நாயகரே ஆறு திருமுகங்களைக்கொண்டவரே' என்று துதித்த பின்னர், யாசிக்கும் வறியவர்களுக்கு ஒரு பிடியளவு சோறாவது கொடுத்து உதவிய பிறகு நீயும் சாப்பிட்டு இருப்பாயாக; நல்வினை-தீவினை ஆகிய வினைகளுடைய நாம் இறந்துவிட்டால் மாய உடம்பாகிய இவ்வுடல் ஒருபிடியளவு சாம்பலும் ஆகாது ஒழியும் தன்மையுடையது. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 4.63 pg 4.64 WIKI_urai Song number: 57 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
![]() | திரு எல். வசந்த குமார் எம்.ஏ. Thiru L. Vasanthakumar M.A. பாடகர் பக்கத்திற்கு to singer's page |
Song 57 - poru pidiyum poru pidiyum kaLiRum viLaiyAdum punachchiRumAn tharu pidi kAval saNmugavA enach sAtRi niththam irupidi sORu koNdu ittu uNdu iruvinaiyOm iRandhAl orupidi sAmbarung kANadhu mAya udambu idhuvE. O' mind, after you pay homage to the Lord of Six-Faces [SaNmugam], who is the beloved spouse of female-tusker-like VaLLi-ammai, begotten by the small deer of millet-field, where war worthy female and male elephants are playing together, and then give at least a handful of cooked-rice to the poor asking for alms and [then] you eat the rest. We are bound by the results of our good-and-bad-deeds, and our body is of such an illusory one that, when we die, it perishes without even amounting to a handful of ash. |
அனைத்து செய்யுட்கள் ஒலிவடிவத்துடன் அகரவரிசைப் பட்டியலுக்கு PDF வடிவத்தில் எண்வரிசைப் பட்டியலுக்கு English Transliteration of all verses For Alphabetical List in PDF format For Numerical List |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. © Copyright Kaumaram dot com - 2001-2040 [W3]COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED. Please contact me (the webmaster), if you wish to place a link in your website. email: kaumaram@gmail.com Disclaimer: Although necessary efforts have been taken by me (the webmaster), to keep the items in www.kaumaram.com safe from viruses etc., I am NOT responsible for any damage caused by use of and/or downloading of any item from this website or from linked external sites. Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items from the internet for maximum safety and security. |