![]() | ![]() திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's | ![]() |
---|
திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அலங்காரம் - 58 நெற்றாப் பசுங்கதிர் Kandhar AlangkAram by Thiru Arunagirinathar - 58 netRAp pasungkadhir |
![]() | ![]() | தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது பேராசிரியர் சிங்காரவேலு சச்சிதானந்தம் (மலேசியா) Meanings in Tamil and English by Dr. Singaravelu Sachithanantham (Malaysia) | English in PDF format PDF வடிவத்தில் mp3 ![]() ![]() | அகரவரிசை எண்வரிசை தேடல் alphabetical numerical search |
பாடல் 58 ... நெற்றாப் பசுங்கதிர் நெற்றாப் பசுங்கதிர்ச் செவ்வேனல் காக்கின்ற நீலவள்ளி முற்றாத் தனத்திற் கினிய பிரானிக்கு முல்லையுடன் பற்றாக்கை யும்வெந்து சங்க்ராம வேளும் படவிழியாற் செற்றார்க் கினியவன் தேவந்த்ர லோக சிகாமணியே. ......... சொற்பிரிவு ......... நெற்றாப் பசுங்கதிர் செவ் ஏனல் காக்கின்ற நீலவள்ளி முற்றாத்தனத்திற்கு இனிய பிரான் இக்கு முல்லையுடன் பற்றாக்கையும் வெந்து சங்க்ராம வேளும் படவிழியால் செற்றார்க்கு இனியான் தேவேந்திரலோக சிகாமணியே. ......... பதவுரை ......... முதிராத பசுமையான கதிர்களையுடைய சிவந்த தினைப் புனத்தைக் காவல் புரிகின்ற நீல நிறமான வள்ளியம்மையாரின் எப்பொழுதும் முற்றாத கொங்கைக்கு இனிமையான தலைவராக விளங்குபவர் திருமுருகப் பெருமான். கரும்பாலாகிய வில், முல்லை மலராகிய அம்பு, அம்புக்கூடு ஆகியவற்றோடு மன்மதன் வெந்து சாம்பலாகும்படி தம் நெற்றிக் கண்ணால் அழித்தவராகிய சிவபெருமானின் இனிமையான திருமைந்தரான திருமுருகப்பெருமான் தேவேந்திரலோகத்திற்கு முடிபோன்றவராவார். |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 4.64 WIKI_urai Song number: 58 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
![]() | திரு எல். வசந்த குமார் எம்.ஏ. Thiru L. Vasanthakumar M.A. பாடகர் பக்கத்திற்கு to singer's page |
திருமதி காந்திமதி சந்தானம் Mrs Kanthimathy Santhanam பாடகர் பக்கத்திற்கு to singer's page | ![]() |
Song 58 - netRAp pasungkadhir netRAp pasungkadhir sev Enal kAkkindRa neelavaLLi mutRAththanaththiRkku iniya pirAn ikku mullaiyudan patRAkkaiyum vendhu sangkrAma vELum padavizhiyAl setRArkku iniyAn dhEvEndhiralOga sigAmaNiyE. VaLLi-ammai of bluish complexion and eternally young breasts, who guards over the field of unripened greenish millet-crops, is the beloved spouse of ThirumurugapperumAn, who is the beloved Son of SivaperumAn, who destroyed Manmathan [Cupid], who was armed with a bow made of sugar-cane and a quiver of arrows of jasmine flowers, by reducing him to ashes with His fiery eye on the forehead. ThirumurugapperumAn, is, indeed, the the Crown-Jewel of the celestial world. |
அனைத்து செய்யுட்கள் ஒலிவடிவத்துடன் அகரவரிசைப் பட்டியலுக்கு PDF வடிவத்தில் எண்வரிசைப் பட்டியலுக்கு English Transliteration of all verses For Alphabetical List in PDF format For Numerical List |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. © Copyright Kaumaram dot com - 2001-2040 [W3]COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED. Please contact me (the webmaster), if you wish to place a link in your website. email: kaumaram@gmail.com Disclaimer: Although necessary efforts have been taken by me (the webmaster), to keep the items in www.kaumaram.com safe from viruses etc., I am NOT responsible for any damage caused by use of and/or downloading of any item from this website or from linked external sites. Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items from the internet for maximum safety and security. |