Sri AruNagirinAthar - Author of the poemsKaumaram dot com - The Website for Lord Muruga and His Devotees

திரு அருணகிரிநாதர் அருளிய
கந்தர் அலங்காரம்
 

Sri AruNagirinAthar's
Kandhar AlangkAram
 

Sri Kaumara Chellam
 திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அலங்காரம்  - 54  சாகைக்கும் மீண்டு
Kandhar AlangkAram by Thiru Arunagirinathar  - 54  sAgaikkum meeNdu
 
Kandhar AlangkAramDr. Singaravelu Sachithanantham (Malaysia)    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    பேராசிரியர்
    சிங்காரவேலு சச்சிதானந்தம்
    (மலேசியா)

   Meanings in Tamil and English by
   Dr. Singaravelu Sachithanantham
   (Malaysia)
English
in PDF format

 PDF வடிவத்தில் 

with mp3 audio
previous page next page
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

alphabetical
numerical
search

பாடல் 54 ... சாகைக்கும் மீண்டு

சாகைக்கு மீண்டு பிறக்கைக்கு மன்றித் தளர்ந்தவர்க்கொன்
   றீகைக் கெனைவிதித் தாயிலை யேயிலங் காபுரிக்குப்
      போகைக்கு நீவழி காட்டென்று போய்க்கடல் தீக்கொளுந்த
         வாகைச் சிலைவளைத் தோன்மரு காமயில் வாகனனே.

......... சொற்பிரிவு .........

சாகைக்கும் மீண்டு பிறக்கைக்கும் அன்றி தளர்ந்தவர்க்கு ஒன்று
   ஈகைக்கு எனை விதித்தாய் இலையே! 'இலங்காபுரிக்குப்
      போகைக்கு நீ வழி காட்டு' என்று போய்க்கடல் தீக்கொளுந்த
         வாகைச்சிலை வளைத்தோன் மருகா மயில்வாகனனே.

......... பதவுரை .........

இறப்பதற்கும் மீண்டும் திரும்பத் திரும்பப் பிறப்பதற்கும் அல்லாமல்
வறுமையால் தளர்வுற்றவர்களுக்கு ஒரு பொருளைக் கொடுத்து உதவி
செய்வதற்கு அடியேனை விதிக்கவில்லையே! 'இலங்கை மாநகரத்திற்குச்
செல்வதற்கு நீ வழிகாட்டக் கடவாய்' என்று சொன்னதும் அந்தக்
கடலானது நெருப்புப் பற்றிக்கொள்ளுமாறு வெற்றியுடைய கோதண்ட
வில்லினை வளைத்தவராகிய இராமபிரானாக அவதரித்த திருமாலின்
திருமருகரே, மயிலை வாகனமாக உடையவரே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 4.60 
 WIKI_urai Song number: 54 
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Thiru L. Vasanthakumar M.A.
திரு எல். வசந்த குமார் எம்.ஏ.

Thiru L. Vasanthakumar M.A.
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Song 54 - sAgaikkum meeNdu

sAgaikkum meeNdu piRakkaikkum andRi thaLarndhavarkku ondRu
   eegaikku enai vidhiththAi illaiyE! 'ilangkAburikkup
      pOgaikku nee vazhi kAttu' endRu pOikkadal theekkoLundha
         vAgaichchilai vaLaiththOn marugA mayilvAgananE.

O' Lord, You have not ordained me to help the poor poverty-stricken people with alms/gifts instead of just dying and being repeatedly born in this world! You are the divine nephew of Lord ThirumAl, who as Sri RAmA told the sea to show the way to the city of LankA, and went on to set it ablaze with fire by bending the victorious bow of kOthandam and You have the peacock as Your vehicle.
go to top
 அனைத்து செய்யுட்கள்   ஒலிவடிவத்துடன் 
 அகரவரிசைப் பட்டியலுக்கு   PDF வடிவத்தில்   எண்வரிசைப் பட்டியலுக்கு 
 English Transliteration of all verses
 For Alphabetical List   in PDF format   For Numerical List 

Thiru AruNagirinAthar's Kandhar AlangkAram

Verse 54 - sAgaikkum meeNdu

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 2503.2022 [css]