திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அலங்காரம் - 45 ஒரு பூதரும் Kandhar AlangkAram by Thiru Arunagirinathar - 45 oru bUdharum |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது பேராசிரியர் சிங்காரவேலு சச்சிதானந்தம் (மலேசியா) Meanings in Tamil and English by Dr. Singaravelu Sachithanantham (Malaysia) | English in PDF format PDF வடிவத்தில் | அகரவரிசை எண்வரிசை தேடல் alphabetical numerical search |
பாடல் 45 ... ஒரு பூதரும் ஒருபூ தருமறி யாத்தனி வீட்டி லுரையுணர்வற் றிருபூத வீட்டி லிராமலென் றான்னிரு கோட்டொருகைப் பொருபூ தரமுரித் தேகாச மிட்ட புராந்தகற்குக் குரு பூத வேலவ னிட்டூர சூர குலாந்தகனே. ......... சொற்பிரிவு ......... 'ஒரு பூதரும் அறியாத் தனி வீட்டில் உரை உணர்வு அற்று இரு பூத வீட்டில் இராமல்' என்றான் இருகோட்டு ஒருகைப் பொரு பூதரம் உரித்து ஏகாசம் இட்ட புராந்தகற்குக் குரு, பூதவேலவன் நிட்டூர சூர குல அந்தகனே. ......... பதவுரை ......... 'பஞ்ச பூதங்களாளாகிய உடல் என்னும் வீட்டில் வசிக்காமல் பூதவுடலையுடைய வேறு ஒருவரும் அறியாத ஒப்பற்ற மௌன வளாகமாகிய வீட்டில் சொல்லும் நினைவும் அற்று இருப்பாயாக' என்று உபதேசித்து அருளிய திருமுருகப்பெருமான், இரண்டு கொம்புகளையும் ஒரு துதிக்கையையும் உடைய போர்செய்யும் மலையையொத்த யானையின் தோலை உரித்து உத்தரியமாக அணிந்துகொண்டவரும் திரிபுரத்தை எரித்தவருமான சிவபெருமானுக்கு குருவானவரும் வேலையுடையவரும் அநியாயம் செய்த சூரபன்மனின் குலத்தை அழித்தவருமாக விளங்குகின்றார். |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 4.50 pg 4.51 WIKI_urai Song number: 45 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
திரு எல். வசந்த குமார் எம்.ஏ. Thiru L. Vasanthakumar M.A. பாடகர் பக்கத்திற்கு to singer's page |
Song 45 - oru bUdharum 'oru bUdharum aRiyAth thani veettil urai uNarvu atRa iru bUdha veettil irAmal' endRAn irukOttu orukaip poru bUdharam uriththu EgAsam itta purAndhAgaRkkuk guru, bUdhavElavan nittUra sUra kula andhaganE. 'Instead of living in the body made of the five-elements of nature, you ought to dwell in the unique and silent abode of the space, bereft of speech and memory, of which no other mortal-being knows,' so taught me the Lord, who was the preceptor to Lord SivaperumAn, who wore as a shawl the hide, stripped off the hill-like-war-elephant of two tusks and one trunk, and who burnt down the three fortresses. He is also the Lord with the lance who annihilated the clan of the unjust demon SUrapanman. |
அனைத்து செய்யுட்கள் ஒலிவடிவத்துடன் அகரவரிசைப் பட்டியலுக்கு PDF வடிவத்தில் எண்வரிசைப் பட்டியலுக்கு English Transliteration of all verses For Alphabetical List in PDF format For Numerical List |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |