திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அலங்காரம் - 37 கண்டு உண்ட . Kandhar AlangkAram by Thiru Arunagirinathar - 37 kaNdu uNda. |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது பேராசிரியர் சிங்காரவேலு சச்சிதானந்தம் (மலேசியா) Meanings in Tamil and English by Dr. Singaravelu Sachithanantham (Malaysia) | English in PDF format PDF வடிவத்தில் | அகரவரிசை எண்வரிசை தேடல் alphabetical numerical search |
பாடல் 37. ... கண்டு உண்ட கண்டுண்ட சொல்லியர் மெல்லியர் காமக் கலவிக்கள்ளை மொண்டுண் டயர்கினும் வேன்மற வேன்முது கூளித்திரள் டுண்டுண் டுடுடுடு டூடூ டுடுடுடு டுண்டுடுண்டு டிண்டிண் டெனக்கொட்டி யாடவெஞ் சூர்க்கொன்ற ராவுத்தனே. ......... சொற்பிரிவு ......... கண்டு உண்ட சொல்லியர் மெல்லியர் காமக்கலவிக் கள்ளை மொண்டு உண்டு அயர்கினும் வேல் மறவேன் முது கூளித் திரள் டுண்டுண் டுடுடுடு டூடூ டுடுடுடு டுண்டு டுண்டு டிண்டிண் டெனக் கொட்டி ஆட வெம் சூர்க் கொன்ற ராவுத்தனே. ......... பதவுரை ......... கற்கண்டைப் போன்ற சொற்களையுடையவரும் மென்மையானவருமான பெண்களின் காமப் புணர்ச்சியாகிய மதுவினை நிரம்பவும் மொண்டு குடித்து அவ்வெறியால் அறிவு மயங்கினாலும் தேவரீரின் வேலாயுதத்தை அடியேன் மறவேன். முதிர்ந்த பேய்க் கூட்டங்கள் 'டுண்டுண் டுடுடுடு ...' என்னும் ஒலியை உண்டாக்கிக் கொண்டு பறையடித்துக்கொண்டு கூத்தாடுமாறு வெய்ய சூரபன்மனைக் கொன்று அருளிய சேவகனே. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 4.43 pg 4.44 WIKI_urai Song number: 37 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
திரு எல். வசந்த குமார் எம்.ஏ. Thiru L. Vasanthakumar M.A. பாடகர் பக்கத்திற்கு to singer's page |
Song 37. - kaNdu uNda kaNdu uNda solliyar melliyar kAmakkalavik kaLLai moNdu uNdu ayarkinum vEl maRavEn mudhu kULith thiraL duNduN dudududu dUdU dudududu duNdu duNdu diNdiN denak kotti Ada vem sUrk kondRa rAvuththanE. Even if I were to be overcome by the stupor of delusion caused by the delirium of indulging in excessive toddy-like-lusty-union with women of sugar-candy-like-sweet-words and tenderness, O' Lord-Saviour, I shall never forget Your lance with which You graciously killed the cruel demon SUrapanman, whereupon a group of aged goblins danced to the beating of tom-toms to the tune of 'duNduN dudududu ...'. |
அனைத்து செய்யுட்கள் ஒலிவடிவத்துடன் அகரவரிசைப் பட்டியலுக்கு PDF வடிவத்தில் எண்வரிசைப் பட்டியலுக்கு English Transliteration of all verses For Alphabetical List in PDF format For Numerical List |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |