பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரம் 37 திரிகிட தொங்கிட திரிகட திங்கிட தித்தி செக்கண செககன மொழிந்து கூத்தனைத்து நவில்வன - போர்க்களத்தில் அலகையே கொடுகொட் டிபடத் துடிகொட் டிநடத் தடமிட்டு வளைத் திருக்கும் ஒருதிரள் is in fish his செருக்களத்தில் அலகையே "இடக்கை குடமுழ வுடுக்கை துடிபறை எடுத்து முகிலென முழக்கி வருவன. பொரு களத்தின் அலகையே _ தொகுக்கு தொகுதொகு...தொகுக்கு தொகுவென m H. H. H. H நடித்து வருவன...பொருகளத்தில் அலகையே - -திருவகுப்பு. மொண்டுண் டயர்கினும் - உம் - எதிர்மறை. 38. முருகன் பெருமை-கருணை நாளென் செயும் வினை தானென் செயுமெனை நாடிவந்த கோளென் செயுங்கொடுங் கூற்றென் செயுங்கும் ரேசரிரு தாளுஞ் சிலம்புஞ் சதங்கையுந் தண்டையுஞ் சண்முகமுந் தோளுங் கடம்பு மெனக்குமுன் னேவந்து தோன்றிடினே. (அந்) குமரேசர் இரு தாளும் சிலம்பும்.தோன்றிடின் நாளென் செயும்........கூற்றென் செயும். (பொ - உ) குமாரக் கடவுளின் இரண்டு திருவடிகளும், (அத்திருவடியில்) விளங்கும் சிலம்பும், சதங்கையும், தண்டையும், அவ்ர்து (சண்முகமும்) ஆறு திருமுகங்களும், (தோளும்) பன்னிரு தோளும், கடப்ப மாலையும், எனக்கு முன்னே வந்து (தோன்றி.டின்) காட்சி கொடுக்குமானால், (நாள் என் செயும்) கெட்ட நக்ஷத்திரங்கள் என்ன செய்யக் கூடும், (வினைதான்) என்னுடைய தீவினைதான் என் செய்யக் கூடும் என்னைத் தேடி வரும் (கோள்) கெட்ட கிரகங்கள் தாம் என்ன செய்யக் கூடும். (கொடும் கூற்று) கொடிய யமன்தான் என்ன செய்யக்கூடும்-(ஒரு கெடுதலும் செய்ய முடியாது என்றபடி) (சு-உ) குமாரக் கடவுளின் திருவுருவம் எனக்கு முன்னே தோற்றம் தருமாயின், கெட்ட நாள், தீவினை, கெட்ட கிரகம், கொடிய கூற்று இவை ஒன்றும் எனக்குக் கெடுதல் செய்யமுடியாது. (கு உ) ஒரு காரியம் தொடங்கு முன்னும், பயணத்துக்கு முன்னும் இப்பாடல் ஒதித் தியானிக்கத் தக்கது. ஆபத்து வேளையிற் பெரிதும் உதவும் பெருமை வாய்ந்த பாடல் இது சம்பந்தர் தேவாரத்தில் உள்ள வேறு தோளிங்கன் எனத் துவக்கும் பதிகம் போல ஆற்றல்