திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அலங்காரம் - 36 சுழித்து ஓடும் ஆற்றில் Kandhar AlangkAram by Thiru Arunagirinathar - 36 suzhiththu Odum AtRil |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது பேராசிரியர் சிங்காரவேலு சச்சிதானந்தம் (மலேசியா) Meanings in Tamil and English by Dr. Singaravelu Sachithanantham (Malaysia) | English in PDF format PDF வடிவத்தில் | அகரவரிசை எண்வரிசை தேடல் alphabetical numerical search |
பாடல் 36 ... சுழித்து ஓடும் ஆற்றில் சுழித்தோடு மாற்றிற் பெருக்கானது செல்வந் துன்ப மின்பங் கழித்தோடு கின்றதெக் காலநெஞ்சே கரிக் கோட்டு முத்தைக் கொழித்தோடு காவிரிச் செங்கோட னென்கிலை குன்றமெட்டுங் கிழித்தோடு வேலென் கிலையெங்ங னேமுத்தி கிட்டுவதே. ......... சொற்பிரிவு ......... சுழித்து ஓடும் ஆற்றில் பெருக்கு ஆனது செல்வம் துன்பம் இன்பம் கழித்து ஓடுகின்றது எக்காலம் நெஞ்சே? கரிக்கோட்டு முத்தைக் கொழித்து ஓடும் காவிரிச் செங்கோடன் என்கிலை; குன்றம் எட்டும் கிழித்து ஓடும் வேல் என்கிலை; எங்ஙனே முத்தி கிட்டுவதே? ......... பதவுரை ......... ஓ' நெஞ்சே, சுழித்து ஓடுகின்ற ஆற்றின் வெள்ளத்திற்கு நிகராகும் செல்வத்தினால் உண்டாகும் துன்பங்களையும் இன்பங்களையும் அறவே நீக்கிப் பற்றற்று விரைந்து செல்வது எந்தக் காலமோ? 'யானையின் தந்தத்தில் உண்டாகிய முத்துக்களைக் கொழித்துக் கொண்டு ஓடுகின்ற காவிரி நதியால் சூழப்பட்டுள்ள திருச்செங்கோட்டில் எழுந்தருளியுள்ளவரே' என்று துதிக்கவில்லை; 'எட்டு குலமலைகளைப் பிளந்து போகத்தக்க வேலாயுதமே' என்று நீ துதிக்கவில்லை. [இவ்வாறு இருக்க] உனக்கு முத்தி கிடைப்பது எவ்வாறு? |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 4.42 pg 4.43 WIKI_urai Song number: 36 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
திரு எல். வசந்த குமார் எம்.ஏ. Thiru L. Vasanthakumar M.A. பாடகர் பக்கத்திற்கு to singer's page |
Song 36 - suzhiththu Odum AtRil suzhiththu Odum AtRil perukku Anadhu selvam thunbam inbam kazhiththu OdukindRadhu ekkAlam nenjE? karikkOttu mutthaik kozhiththu Odum kAvirich chengkOdan enkilai; kundRam ettum kizhiththu Odum vEl enkilai; engganE muththi kittuvathE? O' mind, when will be the time you will go swiftly without being attached to anything after forsaking completely the sorrows and pleasures arising from wealth, which is similar to the flood-waters whirling in circles? You do not praise the Lord as One who abides in ThiruchchengkOdu, surrounded by the KAvEri river, which casts ashore pearls from elephants' ivory-tusks; nor do you praise the Lord's lance as that which pierced and penetrated the [legendary] eight mountains [encircling the eight continents]. How will you then attain salvation? |
அனைத்து செய்யுட்கள் ஒலிவடிவத்துடன் அகரவரிசைப் பட்டியலுக்கு PDF வடிவத்தில் எண்வரிசைப் பட்டியலுக்கு English Transliteration of all verses For Alphabetical List in PDF format For Numerical List |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |