![]() | ![]() திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's | ![]() |
---|
திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அலங்காரம் - 24 கின்னம் குறித்து Kandhar AlangkAram by Thiru Arunagirinathar - 24 kinnam kuRiththu |
![]() | ![]() | தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது பேராசிரியர் சிங்காரவேலு சச்சிதானந்தம் (மலேசியா) Meanings in Tamil and English by Dr. Singaravelu Sachithanantham (Malaysia) | English in PDF format PDF வடிவத்தில் mp3 ![]() ![]() | அகரவரிசை எண்வரிசை தேடல் alphabetical numerical search |
பாடல் 24 ... கின்னம் குறித்து கின்னங் குறித்தடி யேன்செவி நீயன்று கேட்கச்சொன்ன குன்னங் குறிச்சி வெளியாக்கி விட்டது கோடுகுழல் சின்னங் குறிக்க குறிஞ்சிக் கிழவர் சிறுமிதனை முன்னங் குறிச்சியிற் சென்றுகல் யாண முயன்றவனே. ......... சொற்பிரிவு ......... கின்னம் குறித்து அடியேன் செவி நீ அன்று கேட்கச்சொன்ன குன்னம் குறிச்சி வெளியாக்கிவிட்டது கோடுகுழல் சின்னம் குறிக்கக் குறிஞ்சிக் கிழவர் சிறுமிதனை முன்னம் குறிச்சியில் சென்று கல்யாணம் முயன்றவனே. ......... பதவுரை ......... அடியேனின் துன்பத்தைத் தேவரீர் நீக்கும் பொருட்டு அடியேனின் காதில் கேட்குமாறு அந்த நாளில் உபதேசித்து அருளிய இரகசியம் மெய்ஞ்ஞான மலைமீதுள்ள திருஅருளூரில் அடியேனைச் சுத்த ஞானவெளியாக்கித் தன்வயமாக்கிக் கொண்டது. முற்காலத்தில் ஊதுகொம்பு, புல்லாங்குழல், [உடுக்கை], போன்ற திருச்சின்னங்கள் ஒலிக்க குறிஞ்சி நிலத்துக்கு உரியவர்களாகிய வேடர்களின் 'குறிச்சி' எனப்படும் ஊருக்குச் சென்று அவர்தம் திருப்புதல்வியாகிய வள்ளியம்மையாரைத் திருமணம் செய்துகொள்ள முயன்றவரே. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 4.31 pg 4.32 WIKI_urai Song number: 24 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
![]() | திரு எல். வசந்த குமார் எம்.ஏ. Thiru L. Vasanthakumar M.A. பாடகர் பக்கத்திற்கு to singer's page |
Song 24 - kinnam kuRiththu kinnam kuRiththu adiyEn sevi nee andRu kEtkachchonna kunnam kuRichchi veLiyAkkivittadhu kOdukuzhal sinnam kuRikkak kuRinjik kizhavar siRumidhanai munnam kuRichchiyil sendRu kalyANam muyandRavanE. O' Lord, the secret spiritual truth, which You graciously whispered into my ear on that day in order to remove my suffering, has absorbed me by turning me into an arena of pure open space above the hill of meyjnAnam ['True Wisdom'] at Thiru-arulUr. You are the Lord who came in the ancient time to the kurichchi-village of the hunters' realm of Kurinchi to the musical accompaniment of symbolic and sacred instruments such as trumpet, flute and tambourine-like drum and attempted to wed the hunters' beloved daughter VaLLi-ammai. |
அனைத்து செய்யுட்கள் ஒலிவடிவத்துடன் அகரவரிசைப் பட்டியலுக்கு PDF வடிவத்தில் எண்வரிசைப் பட்டியலுக்கு English Transliteration of all verses For Alphabetical List in PDF format For Numerical List |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. © Copyright Kaumaram dot com - 2001-2040 [W3]COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED. Please contact me (the webmaster), if you wish to place a link in your website. email: kaumaram@gmail.com Disclaimer: Although necessary efforts have been taken by me (the webmaster), to keep the items in www.kaumaram.com safe from viruses etc., I am NOT responsible for any damage caused by use of and/or downloading of any item from this website or from linked external sites. Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items from the internet for maximum safety and security. |