![]() | ![]() திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's | ![]() |
---|
திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அலங்காரம் - 23 தெய்வத் திருமலை Kandhar AlangkAram by Thiru Arunagirinathar - 23 dheivath thirumalai |
![]() | ![]() | தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது பேராசிரியர் சிங்காரவேலு சச்சிதானந்தம் (மலேசியா) Meanings in Tamil and English by Dr. Singaravelu Sachithanantham (Malaysia) | English in PDF format PDF வடிவத்தில் mp3 ![]() ![]() | அகரவரிசை எண்வரிசை தேடல் alphabetical numerical search |
பாடல் 23 ... தெய்வத் திருமலை தெய்வத் திருமலைச் செங்கோட்டில் வாழுஞ் செழுஞ்சுடரே வைவைத்த வேற்படை வானவ னேமற வேனுனைநான் ஐவர்க் கிடம்பெறக் காலிரண் டோட்டி யதிலிரண்டு கைவைத்த வீடு குலையுமுன்னே வந்து காத்தருளே. ......... சொற்பிரிவு ......... தெய்வத் திருமலைச் செங்கோட்டில் வாழும் செழும் சுடரே வை வைத்த வேற்படை வானவனே மறவேன் உனை நான் ஐவர்க்கு இடம்பெற கால் இரண்டு ஓட்டி அதில் இரண்டு கைவைத்த வீடு குலையும் முன்னே வந்து காத்தருளே. ......... பதவுரை ......... தெய்வீகம் பொருந்தியதும் அழகானதுமான மலையாகிய திருச்செங்கோட்டில் வதியும் செழுமையைத் தரும் சோதியே! கூர்மையான வேலை ஆயுதமாகக் கொண்ட தெய்வமே! உனை அடியேன் மறவேன். ஐம்புலன்களுக்கு இடமாகும்படி இரண்டு கால்களை நிறுத்தி அங்கு இரண்டு கைகளை அமைத்துள்ள இல்லம் போன்ற இந்த உடம்பு அழிவதற்கு முன்னரே தேவரீர் அடியேனுக்குமுன் தோன்றிக் காப்பாற்றியருள்வீராக! |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 4.30 pg 4.31 WIKI_urai Song number: 23 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
![]() | திரு எல். வசந்த குமார் எம்.ஏ. Thiru L. Vasanthakumar M.A. பாடகர் பக்கத்திற்கு to singer's page |
![]() | திரு பொ. சண்முகம் Thiru P. Shanmugam பாடகர் பக்கத்திற்கு to singer's page |
Song 23 - dheivath thirumalai dheivath thirumalaich chengkOttil vAzhum sezhum sudarE vai vaiththa vERtpadai vAnavanE maRavEn unai nAn aiyvarkku idampeRa kAl iraNdu Otti adhil iraNdu kaivaiththa veedu kulaiyum munnE vandhu kAththaruLE. O' Lord, who abides on the divinely-blessed and beautiful hill at ThiruchchengkOdu, where You are graciously shedding the effulgence of light conferring prosperity. You are the God with the sharp lance. I shall never forget Your presence. Please be gracious enough to appear before me, and protect me before this body of mine with two legs and hands, built like a home for the five sense-organs, dissolves. |
அனைத்து செய்யுட்கள் ஒலிவடிவத்துடன் அகரவரிசைப் பட்டியலுக்கு PDF வடிவத்தில் எண்வரிசைப் பட்டியலுக்கு English Transliteration of all verses For Alphabetical List in PDF format For Numerical List |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. © Copyright Kaumaram dot com - 2001-2040 [W3]COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED. Please contact me (the webmaster), if you wish to place a link in your website. email: kaumaram@gmail.com Disclaimer: Although necessary efforts have been taken by me (the webmaster), to keep the items in www.kaumaram.com safe from viruses etc., I am NOT responsible for any damage caused by use of and/or downloading of any item from this website or from linked external sites. Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items from the internet for maximum safety and security. |