திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அலங்காரம் - 22 மொய் தார் அணி Kandhar AlangkAram by Thiru Arunagirinathar - 22 moi dhAr aNi |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது பேராசிரியர் சிங்காரவேலு சச்சிதானந்தம் (மலேசியா) Meanings in Tamil and English by Dr. Singaravelu Sachithanantham (Malaysia) | English in PDF format PDF வடிவத்தில் | அகரவரிசை எண்வரிசை தேடல் alphabetical numerical search |
பாடல் 22 ... மொய் தார் அணி மொய்தா ரணிகுழல் வள்ளியை வேட்டவன் முத்தமிழால் வைதா ரையுமங்கு வாழவைப் போன்வெய்ய வாரணம்போற் கைதா னிருப துடையான் தலைப்பத்துங் கத்தரிக்க எய்தான் மருகன் உமையாள் பயந்த இலஞ்சியமே. ......... சொற்பிரிவு ......... மொய் தார் அணி குழல் வள்ளியை வேட்டவன், முத்தமிழால் வைதாரையும் அங்கு வாழவைப்போன், வெய்ய வாரணம் போல் கைதான் இருபது உடையான் தலை பத்தும் கத்தரிக்க எய்தான் மருகன், உமையாள் பயந்த இலஞ்சியமே. ......... பதவுரை ......... வண்டுகள் மொய்க்கும் பூமாலைகளைச் சூடியுள்ள கூந்தலையுடைய வள்ளியம்மையை மணம் செய்துகொண்டவரும், இயல்-இசை-நாடகம் எனப்படும் மூன்று வகையான செந்தமிழால் வசை சொல்லியவரையும் அவ்விடத்திலேயே இன்பவாழ்வில் இனிது திளைக்குமாறு அருள்புரிபவரும், கொடிய மதயானை போன்றவனும் இருபது கரங்களையும் உடைய இராவணனது பத்துத் தலைகளும் வெட்டுண்டு வீழ கணையைவிட்டு அருளிய இராமபிரானாக அவதரித்த திருமாலின் திருமருகரும், உமாதேவியார் பெற்றருளிய சரவணபவருமாகிய திருமுருகப்பெருமானே. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 4.29 pg 4.30 WIKI_urai Song number: 22 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
திரு எல். வசந்த குமார் எம்.ஏ. Thiru L. Vasanthakumar M.A. பாடகர் பக்கத்திற்கு to singer's page |
திரு பொ. சண்முகம் Thiru P. Shanmugam பாடகர் பக்கத்திற்கு to singer's page |
Song 22 - moi dhAr aNi moi dhAr aNi kuzhal vaLLiyai vEttavan, muththamizhAl vaidhAraiyum angku vAzhavaippOn, veiya vAraNam pOl kaidhAn irubadhu udaiyAn thalai paththum kaththarikka eiydhAn marugan, umaiyAL bayandha ilanjiyamE. O' Lord SaravaNa, You are married to VaLLi-ammai, whose hair is adorned with garlands of flowers, over which the bees are humming. You are so kind as to graciously grant pleasant livelihood there-and-then even to those who heap abuse in the classical three-fold [literary-musical-and-dramatic] Tamil-language. You are the divine nephew of ThirumAl, who [as Sri RAmA] released His shaft to sever the ten-heads of the mad-elephant-like tyrant RAvaNA of twenty-arms. You are the divine offspring of Goddess UmAdhEvi. |
அனைத்து செய்யுட்கள் ஒலிவடிவத்துடன் அகரவரிசைப் பட்டியலுக்கு PDF வடிவத்தில் எண்வரிசைப் பட்டியலுக்கு English Transliteration of all verses For Alphabetical List in PDF format For Numerical List |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |