![]() | ![]() திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's | ![]() |
---|
திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அலங்காரம் - 25 தண்டாயுதமும் Kandhar AlangkAram by Thiru Arunagirinathar - 25 thaNdAyudhamum |
![]() | ![]() | தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது பேராசிரியர் சிங்காரவேலு சச்சிதானந்தம் (மலேசியா) Meanings in Tamil and English by Dr. Singaravelu Sachithanantham (Malaysia) | English in PDF format PDF வடிவத்தில் mp3 ![]() ![]() | அகரவரிசை எண்வரிசை தேடல் alphabetical numerical search |
பாடல் 25 ... தண்டாயுதமும் தண்டா யுதமுந் திரிசூல மும்விழத் தாக்கியுன்னைத் திண்டாட வெட்டி விழவிடு வேன்செந்தில் வேலனுக்குத் தொண்டா கியவென் னவிரோத ஞானச் சுடர்வடிவாள் கண்டா யடாவந்த காவந்து பார்சற்றென் கைக்கெட்டவே. ......... சொற்பிரிவு ......... தண்டாயுதமும் திரிசூலமும் விழத் தாக்கி உன்னைத் திண்டாட வெட்டி விழவிடுவேன் செந்தில் வேலனுக்குத் தொண்டாகிய என் 'அவிரோத ஞானச்சுடர் வடிவாள்' கண்டாயடா அந்தகா? வந்துபார் சற்று என் கைக்கு எட்டவே! ......... பதவுரை ......... அந்தகா (இயமனே)! உன்னுடைய கதாயுதமும் முத்தலைச் சூலமும் உன் கையிலிருந்து பொடிபட்டுச் சிந்த உன்னை மோதி வலியழிந்து வருந்துமாறு துண்டித்து உன்னை வீழ்த்துவேன். திருச்செந்தூரில் எழுந்தருளியுள்ள வேற்படையுடைய திருமுருகப்பெருமானுக்கு அடிமையாகிய அடியேனுடைய விரோதமில்லாத ஞானமாகிய ஒளிபொருந்தியதும் கூர்மையானதுமாகிய வாளாயுதத்தைப் பார்த்தாயடா? எனது கைக்கு எட்டுகின்ற அளவில் சிறிது நீ வந்து பாராய்! |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 4.32 pg 4.33 WIKI_urai Song number: 25 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
![]() | திரு எல். வசந்த குமார் எம்.ஏ. Thiru L. Vasanthakumar M.A. பாடகர் பக்கத்திற்கு to singer's page |
Song 25 - thaNdAyudhamum thaNdAyudhamum thirisUlamum vizhath thAkki unnaith thiNdAda vetti vizhaviduvEn sendhil vElanukkuth thoNdAgiya en 'avirOdha njAnachchudar vadivAL' kaNdAyadA andhagA? vandhupAr satRu en kaikku ettavE! Hey, andhagA ('death'), I shall cut you asunder and make you suffer and fall with no more power by smashing your club and trident to pieces. I am a slavish devotee of ThirumurugapperumAn Who has His sacred abode at ThiruchchendhUr. Did you see that I possess a shiny and sharp sword of wisdom which knows of no enemy? Do come and see a bit of it if you can reach as far as my hand! |
அனைத்து செய்யுட்கள் ஒலிவடிவத்துடன் அகரவரிசைப் பட்டியலுக்கு PDF வடிவத்தில் எண்வரிசைப் பட்டியலுக்கு English Transliteration of all verses For Alphabetical List in PDF format For Numerical List |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. © Copyright Kaumaram dot com - 2001-2040 [W3]COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED. Please contact me (the webmaster), if you wish to place a link in your website. email: kaumaram@gmail.com Disclaimer: Although necessary efforts have been taken by me (the webmaster), to keep the items in www.kaumaram.com safe from viruses etc., I am NOT responsible for any damage caused by use of and/or downloading of any item from this website or from linked external sites. Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items from the internet for maximum safety and security. |