![]() | ![]() திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's | ![]() |
---|
திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அலங்காரம் - 26 நீலச் சிகண்டியில் Kandhar AlangkAram by Thiru Arunagirinathar - 26 neelach chigaNdiyil |
![]() | ![]() | தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது பேராசிரியர் சிங்காரவேலு சச்சிதானந்தம் (மலேசியா) Meanings in Tamil and English by Dr. Singaravelu Sachithanantham (Malaysia) | English in PDF format PDF வடிவத்தில் mp3 ![]() ![]() | அகரவரிசை எண்வரிசை தேடல் alphabetical numerical search |
பாடல் 26 ... நீலச் சிகண்டியில் நீலச் சிகண்டியி லேறும் பிரானெந்த நேரத்திலுங் கோலக் குறத்தி யுடன்வரு வான்குரு நாதன்சொன்ன சீலத்தை மெள்ளத் தெளிந்தறி வார்சிவ யோகிகளே காலத்தை வென்றிருப்பார், மரிப் பார்வெறுங் கர்மிகளே. ......... சொற்பிரிவு ......... நீலச் சிகண்டியில் ஏறும் பிரான் எந்தநேரத்திலும் கோலக் குறத்தியுடன் வருவான் குருநாதன் சொன்ன சீலத்தை மெள்ளத் தெளிந்து அறிவார் சிவயோகிகளே காலத்தை வென்று இருப்பார்; மரிப்பார் வெறும் கர்மிகளே. ......... பதவுரை ......... நீலநிற மயில்வாகனத்தின் மீது ஏறுகின்ற திருமுருகப்பெருமான் எந்த நேரத்திலும் அழகுமிக்க வள்ளியம்மையாருடன் அருள்புரிவதற்கு வருவார். [மேலும்] அடியேனின் குருமூர்த்தியாகிய எம்பெருமான் உபதேசித்த மெய்ப்பொருளின் தன்மையை மெல்ல தேர்ந்து [தெளிந்து] புரிந்துகொள்பவர்களாகிய சிவயோகிகள் மாத்திரமே காலதத்துவத்தை வென்று அதனைக் கடந்து காலாதீதராக இருப்பார்கள். வெறும் கர்மயோகிகளோ காலத்துக்கு உட்பட்டு மாய்ந்துபோவர். |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 4.33 pg 4.34 WIKI_urai Song number: 26 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
![]() | திரு எல். வசந்த குமார் எம்.ஏ. Thiru L. Vasanthakumar M.A. பாடகர் பக்கத்திற்கு to singer's page |
Song 26 - neelach chigaNdiyil neelach chigaNdiyil ERum pirAn endha nEraththilum kOlak kuRaththiyudan varuvAn gurunAdhan sonna seelaththai meLLath theLindhu aRivAr sivayOgigaLE kAlaththai vendRu iruppAr; marippAr veRum karmigaLE. ThirumurugapperumAn, who rides the blue-feathered peacock, will certainly come and manifest Himself with beautiful VaLLi-ammai at any time [to confer His gracious blessings upon His devotees]. It is those Siva-yOgis who contemplate and gradually comprehend the essential import of the Real Truth expounded by my Lord and Guru ThirumurugapperumAn, will triumph over and transcend Time and attain the state of eternity, while the ordinary karma-yOgis will be subject to Time and will perish. |
அனைத்து செய்யுட்கள் ஒலிவடிவத்துடன் அகரவரிசைப் பட்டியலுக்கு PDF வடிவத்தில் எண்வரிசைப் பட்டியலுக்கு English Transliteration of all verses For Alphabetical List in PDF format For Numerical List |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. © Copyright Kaumaram dot com - 2001-2040 [W3]COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED. Please contact me (the webmaster), if you wish to place a link in your website. email: kaumaram@gmail.com Disclaimer: Although necessary efforts have been taken by me (the webmaster), to keep the items in www.kaumaram.com safe from viruses etc., I am NOT responsible for any damage caused by use of and/or downloading of any item from this website or from linked external sites. Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items from the internet for maximum safety and security. |