திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அலங்காரம் - 27 ஓலையும் தூதரும் Kandhar AlangkAram by Thiru Arunagirinathar - 27 Olaiyum thUdharum |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது பேராசிரியர் சிங்காரவேலு சச்சிதானந்தம் (மலேசியா) Meanings in Tamil and English by Dr. Singaravelu Sachithanantham (Malaysia) | English in PDF format PDF வடிவத்தில் | அகரவரிசை எண்வரிசை தேடல் alphabetical numerical search |
பாடல் 27 ... ஓலையும் தூதரும் ஓலையுந் தூதருங் கண்டுதிண் டாட லொழித்தெனக்குக் காலையு மாலையு முன்னிற்கு மேகந்த வேள்மருங்கிற் சேலையுங் கட்டிய சீராவுங் கையிற் சிவந்தசெச்சை மாலையுஞ் சேவற் பதாகையுந் தோகையும் வாகையுமே. ......... சொற்பிரிவு ......... ஓலையும் தூதரும் கண்டு திண்டாடல் ஒழித்து எனக்குக் காலையும் மாலையும் முன்னிற்குமே கந்தவேள் மருங்கில் சேலையும் கட்டிய சீராவும் கையில் சிவந்த செச்சை மாலையும் சேவல் பதாகையும் தோகையும் வாகையுமே. ......... பதவுரை ......... [திருமுருகப்பெருமானின் பக்தனாகிய] அடியேன் இயமனின் ஓலையையும் அவனது தூதரையும் கண்டு கலங்குவதே இல்லை. காரணம், கந்தவேளாகிய திருமுருகப்பெருமான் தம் பீதாம்பரத்தின் மீது கட்டும் கச்சை, அதில் செருகிய சிறிய கூரிய உடைவாள், தோளில் அணிந்த சிவந்த நிறமுடைய வெட்சி மலர்மாலை, சேவற்கொடி, மயில்வாகனம் வெற்றி மாலைகள் ஆகியவற்றோடு எனக்கென்று காலையிலும் மாலையிலும் அடியேன்முன் காட்சியளித்து அருள்புரிகின்றார். |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 4.34 pg 4.35 WIKI_urai Song number: 27 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
திரு எல். வசந்த குமார் எம்.ஏ. Thiru L. Vasanthakumar M.A. பாடகர் பக்கத்திற்கு to singer's page |
Song 27 - Olaiyum thUdharum Olaiyum thUdharum kaNdu thiNdAdal ozhiththu enakkuk kAlaiyum mAlaiyum munniRkkumE kandhavEL marungkil sElaiyum kattiya seerAvum kaiyil sivandha sechchai mAlaiyum sEval pathAgaiyum thOgaiyum vAgaiyumE. [As a devotee of ThirumurugapperumAn] I am not at all perturbed either by the message, sent by Yaman [death] or his messenger, because for my sake the Lord graciously manifests Himself before me every morning and evening, wearing the heroic girdle with a small curved scimitar [sword], the garland of red vetchi-blossoms over His shoulders, together with the flag of rooster [sEval], the vehicle of peacock, and garlands of victory. |
அனைத்து செய்யுட்கள் ஒலிவடிவத்துடன் அகரவரிசைப் பட்டியலுக்கு PDF வடிவத்தில் எண்வரிசைப் பட்டியலுக்கு English Transliteration of all verses For Alphabetical List in PDF format For Numerical List |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |