திருப்புகழ் 1335 வம்புங் கோபமும்  (செங்குன்றாபுரம்)
Thiruppugazh 1335 vambung kObamum  (sengkundrApuram)
Thiruppugazh - 1335 vambung kObamum - sengkundrApuramதமிழில் உரை எழுதியது
பெரும்புலவர் ப. வெ. நாகராஜன்,
அவர்கள்.
(கௌமார மடம், சிரவணம்பட்டி, கோவை)
English
in PDF

PDF அமைப்பு

 
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தந்தந் தானன தானன தானன
     தந்தந் தானன தானன தானன
          தந்தந் தானன தானன தானன ...... தனதான

......... பாடல் .........

வம்புங் கோபமு மேவசு ராதிகள்
     வந்தஞ் சாமலும் வானவர் பாலினில்
          மண்டும் போர்செயும் வேளையன் னோரைவெல் ...... வடிவேலா

தம்பம் போலுறு மூடர்கள் மீதுக
     ரும்புந் தேனிகர் பாவுரை யாதுன
          தஞ்சம் பாரென வோதுவ நீஅருள் ...... புரிவாயே

அம்பொன் றேவிழி சேர்குற மாதுதன்
     இன்பந் தேடிமுன் னோர்கணி யாகவு
          மன்றுன் பால்வர மோகம தாவுற ...... வணைவோனே

செம்பொன் மாமதில் வானுற வாவிகள்
     எங்குந் தாமரை மாமலர் சூழ்தரு
          செங்குன் றாபுரம் வாழ்கும ராவெனு ...... முருகோனே.

......... சொல் விளக்கம் .........

அம்பு ஒன்றே விழிசேர் குறமாது தன் இன்பம் தேடி ... கணையைத் தவிர வேறு எதையும் இணையாகக் கூறமுடியாதபடி கூர்மையும் அழகையும் பெற்றுள்ள விழிகளைக் கொண்ட வள்ளிநாயகியின் உறவினை விரும்பி

முன் ஓர் கணி ஆகவும் ... அக்காலத்தில் நீர் ஒரு வேங்கை மரமாக நிற்க

அன்று உன்பால் வர ... அப்பொழுது அந்த வள்ளி நாச்சியார் உம் பக்கமாக வந்து நெருங்க

மோகமதா உற அணைவோனே ... காதலோடு மார்பில் அணைத்துக் கொண்டவரே

செம்பொன் மாமதில் வான் உற ... சிறந்த தங்கத் தகடுகள் பதிக்கப்பட்ட பெரிய கோட்டைச் சுவர்கள் ஆகாயம் வரை உயர்ந்திருப்பதும்

வாவிகள் எங்கும் தாமரை மாமலர் சூழ்தரு ... அனைத்து நீர்நிலைகளிலும் அழகிய கமலப்பூக்கள் நிறைந்திருப்பதும் ஆகிய

செங்குன்றாபுரம் வாழ் குமரா எனும் முருகோனே ... செங்குன்றாபுரம் என்னும் தலத்தில் வாழ்கின்றவரும் வாலிபன் என்று வழங்கப்படுபவருமாகிய முருகப்பெருமானே

வம்பும் கோபமும் மேவு அசுராதிகள் வந்து ... வஞ்சனையும் கொடிய சினமும் மிகுந்த சூரபத்மன் முதலிய அசுரர்கள் எதிர்த்துவந்து

அஞ்சாமல் உம் வானவர் பாலினில் ... சற்றும் பயம் இல்லாமல் உங்களைச் சேர்ந்தவர்களாகிய தேவர்களோடு

மண்டும் போர்செயும் வேளையில் ... மிக நெருங்கிவந்து செய்யப்படும் யுத்தத்தில் ஈடுபட்டபோது

அன்னோரை வெல் வடிவேலா ... அந்த அரக்கர்களை வெற்றிகொண்ட கூர்மையான வேலாயுதத்தை உடையவரே

தம்பம்போல் உறு மூடர்கள்மீது ... (எந்த வகையான அறிவுணர்ச்சியும் இல்லாமல்) தூணைப்போல உள்ள அறிவற்ற செல்வர்களைப் பற்றி

கரும்பும் தேன் நிகர் பா உரையாது ... கரும்பையும் தேனையும் போன்ற இனிய கவிதைகளை இயற்றிச்சென்று இரந்தலையாவண்ணம்

"உன தஞ்சம் பார்" என ஓதுவன் ... அடியேன் உனது அடைக்கலம்; என்னைக் கண்டருளிப் பாதுகாப்பீராக என்று வேண்டுவேன்.

நீ அருள்புரிவாய் ஏ ... அதற்கு உளம் இரங்கி நீங்கள் ஆட்கொள்ள வேண்டும்; ஏகாரம் அசை.


"செங்குன்றாபுரம்" என்ற தலம் விருதுநகரிலிருந்து வத்தரயிருப்பு மார்க்கத்தில் எரிச்சநத்தம் செல்லும் வழியில் 12 கி.மீட்டரில் உள்ளது. வடக்கில் அரை கிலோமீட்டர் தொலைவில் குமரகுளம் கண்வாய் கரையில் முருகன் ஆலயம் அமைந்துள்ளது.


திருவனந்தபுரம், கேரள பல்கலைக் கழகத்தில் உள்ள கீழ்த்திசைச் சுவடிகள் நூலகத்தில் அருணகிரிநாதரின் 14 திருப்புகழ் சுவடிகளை "திருப்புகழ் அமுதன்" திரு. வலையப்பேட்டை ரா. கிருஷ்ணன் அவர்கள் பார்வையிட்டதில் சில புதிய பாடல்கள் கிடைத்தன. ஆனால் ஓலைகள் சிதைவுற்றதால் புதியதாக் கிடைத்த சில பாடல்கள் முழுமையாக இல்லை. சுவடி எண். 9210இல் உள்ள முழுமையாகக் கிடைத்த இத் திருப்புகழை 2006ம் ஆண்டு வெளியிட்ட நமது சபையின் (சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை - சேலம்) முதற் பதிப்பில் சேர்த்தது.


குறிப்புரை:

வெல் வடிவேலா! உரம் அணைவோனே! பெருமாளே! மூடர்கள் மீது பா உரையாது "உன தஞ்சம்! பார்" என ஓதுவன்; அருள் புரிவாயே எனப் பொருள் முடிபு காண்க. வம்பு எனும் சொல் வஞ்சனைப் பொருள் தருவதை "மணமும் நிலையின்மையும் பாடரும் புதுமையும் முலையணி கச்சும் படிறும் வம்பே" (4026) எனும் பிங்கலத்தால் அறியலாம். அசுரர்களை "செயல் உரை நஞ்சு உறழ் மயல் உறு நெஞ்சினர் வஞ்சகர் தீமான் கதர்" (வேல்வாங்கு வகுப்பு, கலை 3) என்பார் அருணகிரிநாதர். முருகப்பெருமான் தேவர்களைப் பாதுகாக்க வந்திருப்பதை அறிந்திருந்தும் அசுரர்கள் போருக்கு வந்த பேதைமையைக் குறித்து அஞ்சாமலும் என்றார். "அஞ்சுவது அஞ்சாமை பேதைமை" (குறள் 428).

மூடரைப் பாடுதல்: ஒப்பு - "சுமடர் அருகுற்று இயல்வாணர் தெரியும் அருமைப் பழைய மொழியைத் திருடி நெருடிக் கவிபாடித் திரியும் மருள்" (திருப்புகழ் 0271). பார் என்றது நோக்கி அருள்புரி என்னும் கருத்தில். "கரு வெந்து வீழக் கடைக்கணித்து" (??239) என்பது மணிவார்த்தை.

தினைப்புனத்தைக் குறிஞ்சி நில இள மங்கையர் காவல்புரிவர். கதிர்முற்றி அறுவடைக்குத் தயார் ஆகும் போது வேங்கை மலர்கள் மலரும். இது திருமணம் செய்வதற்கு உரிய பருவம் ஆதலின் பெற்றோர் தம் மகளுக்குத் திருமணம் புரிய முயல்வர் என்பது தமிழ் அகப்பொருள் மரபு. அதனை இங்குப் பொருத்திப் பார்க்கத் தினைப்புனம் காத்திருக்கும் வள்ளிக்கு முருகன் வேங்கை மரமாகக் காட்சி அளித்தது அவளுக்குத் திருமணப் பருவம் வந்துவிட்டதை உணர்த்தும் குறியீடு ஆகும்.

செவ்வேளை வீரம் நிறைந்ததோர் வாலிபனாகவும், அவ்வாறே வள்ளிதேவியின் காதலனாகவும் மட்டுமே நினைத்து ஊரார் குமரன் என்கின்றனர். அவனைச் "சிவனார் மனம் குளிர உபதேசம் மந்த்ரம் இரு செவி மீதிலும் பகர்செய் ஞானதேசிகனாகவோ" (திருப்புகழ் 0156), "அரி அரன் பிரமாவோடே மூவகையர் இந்திர கோமான் நீள்வான் அமரர் கந்தருவானோர் ஏனோர் பெருமாளே" (திருப்புகழ் 1133) ஆகிய தேவாதி தேவனாகவோ நினைக்கவில்லை. இந்தப் பௌராணிக நிலையில் நிற்கும் தொடக்கநிலை அடியார்களுக்கே கந்தவேள் கருணை காட்டுகிறார் என்றால் கௌமார பரத்வம் உணர்ந்த ஞானிகளுக்கு என்ன செய்யமாட்டார் என்பது குறிப்பு.


"உன தஞ்சம்" என்புழி (உன்+அ) அகரம் ஆறன் உருபு, ஒருமைக்கு வந்ததை வழுவமைதியாகக் கொள்க. தேன் நிகர் என்றவிடத்து எண்ணும்மை விரிக்க. அம்பு ஒன்றே விழி என்றது நியம உவமையணி. துணையாகவும் என்னுமிடத்தில் உம்மை இசைநிறை, மோகம் அதா என்புழி "அது" பகுதிப் பொருள் விகுதி.


நன்றி: என் வேண்டுகோளுக்கு இணங்கி உரைதந்த புலவர் ப.வெ.நா. ஐயா அவர்களுக்கும், இ-மெயிலில் அனுப்பிவைத்த கௌமார மடாலயம் திரு. இராமானந்தன் அவர்களுக்கும் நனிநன்றி,

நா. கணேசன்

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss

Song 1335 - vambung kObamum (sengkundrApuram)

vambung kObamu mEvasu rAdhigaL
     vandhanj jAmalum vAnavar pAlinil
          maNdum pOrseyum vELaiyan nOraivel ...... vadivElA

thambam pOluRu mUdargaL meedhuga
     rumbundh thEnigar pAvurai yAdhuna
          thanjam pArena vOdhuva neearuL ...... purivAyE

amben drEvizhi sErkuRa mAdhuthan
     inbandh thEdimun nOrkaNi yAgavu
          mandrun pAlvara mOgama dhAvuRa ...... vaNaivOnE

sembon mAmadhil vAnuRa vAvigaL
     engkundh thAmarai mAmalar sUzhtharu
          sengkun drApuram vAzhkuma rAvenu ...... murugOnE.

......... Meaning .........

to come




தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
 

Thiru Arunagirinathar's Thiruppugazh - 1335 vambung kObamum - sengkundrApuram


   Kaumaram.com சமீபத்தில் DDOS தாக்குதலால் பாதிக்கப்பட்டது.
எனவே, படங்கள் மற்றும் ஆடியோ தற்காலிகமாக கிடைக்காது.
நான் இதை படிப்படியாக சரிசெய்ய முயற்சிக்கிறேன்.
உங்கள் பொறுமைக்கும் புரிந்துணர்வுக்கும் நன்றி. ... வலைத்தள நிர்வாகி.  



  Kaumaram.com was recently affected by DDOS attack.
As such, images and audio will be temporarily unavailable.
I am trying to correct this progressively.
Thank you for your patience and understanding. ... webmaster.  


... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 


Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

© Copyright Kaumaram dot com - 2001-2040

COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED.

Please contact me (the webmaster), if you wish to place a link in your website.

email: kaumaram@gmail.com

Disclaimer:

Although necessary efforts have been taken by me (the webmaster),
to keep the items in www.kaumaram.com safe from viruses etc.,
I am NOT responsible for any damage caused by use of
and/or downloading of any item from this website or from linked external sites.
Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items
from the internet for maximum safety and security.

[W3]