திருப்புகழ் 1133 இரவொடும் பகலே  (பொதுப்பாடல்கள்)
Thiruppugazh 1133 iravodumpagalE  (common)
Thiruppugazh - 1133 iravodumpagalE - commonSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனன தந்தன தானா தானா
     தனன தந்தன தானா தானா
          தனன தந்தன தானா தானா ...... தனதான

......... பாடல் .........

இரவொ டும்பக லேமா றாதே
     அநுதி னந்துய ரோயா தேயே
          யெரியு முந்தியி னாலே மாலே ...... பெரிதாகி

இரைகொ ளும்படி யூடே பாடே
     மிகுதி கொண்டொழி யாதே வாதே
          யிடைக ளின்சில நாளே போயே ...... வயதாகி

நரைக ளும்பெரி தாயே போயே
     கிழவ னென்றொரு பேரே சார்வே
          நடைக ளும்பல தாறே மாறே ...... விழலாகி

நயன முந்தெரி யாதே போனால்
     விடிவ தென்றடி யேனே தானே
          நடன குஞ்சித வீடே கூடா ...... தழிவேனோ

திருந டம்புரி தாளீ தூளீ
     மகர குண்டலி மாரீ சூரி
          திரிபு ரந்தழ லேவீ சார்வீ ...... யபிராமி

சிவனி டந்தரி நீலீ சூலீ
     கவுரி பஞ்சவி யாயீ மாயீ
          சிவைபெ ணம்பிகை வாலா சீலா ...... அருள்பாலா

அரவ கிங்கிணி வீரா தீரா
     கிரிபு ரந்தொளிர் நாதா பாதா
          அழகி ளங்குற மானார் தேனார் ...... மணவாளா

அரிய ரன்பிர மாவோ டேமூ
     வகைய ரிந்திர கோமா னீள்வா
          னமரர் கந்தரு வானோ ரேனோர் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

இரவொடும் பகலே மாறாதே ... இரவும் பகலுமாக, நீங்குதல் இன்றி,

அநுதினந்துயர் ஓயாதேயே ... நாள் தோறும் துக்கம் இடைவிடாமல்
பீடிக்க,

எரியும் உந்தியினாலே மாலே பெரிதாகி ... தீப்போல வயிற்றில்
எரிகின்ற பசியால் ஆசைகளே பெரிதாக வளர்ந்து,

இரைகொளும்படி யூடே ... உணவு வேண்டி வாழ்க்கையின் ஊடே

பாடே மிகுதி கொண்டு ஒழியாதே வாதே ... உழைப்பே
மிகுதியாகி, தர்க்கம் செய்வதிலே எப்போதும் காலம் கழித்து,

இடைகளின்சில நாளே போயே வயதாகி ... இவ்வாறே
வாழ்க்கையின் இடைக்காலத்தில் சிலகாலம் கழிய, பின்பு வயது மூத்து,

நரைகளும்பெரிதாயே போயே ... நரைகள் அதிகமாகிப் போய்

கிழவனென்றொரு பேரே சார்வே ... கிழவன் என்ற ஒரு பேரே
வந்து கூடிட,

நடைகளும்பல தாறே மாறே விழலாகி ... நடைகளும் நேராக
இன்றி தாறுமாறாகி, கீழே விழும் நிலைமைக்கு வந்து,

நயனமுந்தெரியாதே போனால் ... கண்களும் தெரியாமல்
குருடனாகிப் போனால்,

விடிவதென்று அடியேனே தானே ... அடியவனாகிய நான்
என்போது தான் துன்பம் நீங்கி விடிந்து இன்பம் அடைவது?

நடன குஞ்சித வீடே கூடாது அழிவேனோ ... காலை
வளைத்துத் தூக்கி நடனம் செய்பவனாகிய சிவபிரானின் மோக்ஷ
வீட்டை அடையாமலேயே நான் அழிந்து போவேனோ?

திருநடம்புரி தாளீ தூளீ ... திருநடனம் செய்கின்ற பாதங்களை
உடையவள், திருநீற்றுத் தூளை அணிந்துள்ளவள்,

மகர குண்டலி மாரீ சூரி ... மகர மீன் போன்ற குண்டலங்களைத்
தரித்தவள், மாரியாகிய துர்க்கை, மகா காளி,

திரிபுரந்தழல் ஏவீ சார்வீ யபிராமி ... திரிபுரங்களில் நெருப்பை
ஏவியவள், புகலிடமாக உள்ளவள், பேரழகி,

சிவன் இடந்தரி நீலீ சூலீ ... சிவனது இடப்பாகத்தைத் தரித்தவள்,
நீல நிறத்தாள், சூலம் ஏந்தியவள்,

கவுரி பஞ்சவி யாயீ மாயீ ... கெளரி, ஐந்தாம் சக்தியாகும் அனுக்கிரக
சக்தி, தாய், மகமாயி,

சிவைபெண் அம்பிகை வாலா சீலா அருள்பாலா ... சிவாம்பிகை,
பாலாம்பிகை, பரிசுத்த தேவதை ஆகிய பார்வதி அருளிய குழந்தையே,

அரவ கிங்கிணி வீரா தீரா ... ஒலிக்கும் கிண்கிணியை அணிந்துள்ள
வீரனே, தீரனே,

கிரிபுரந்தொளிர் நாதா பாதா ... மலைகளைக் காக்கும் ஒளியாக
விளங்கும் நாதனே, ஞானிகளின் தலைமேல் பதிக்கும் பாதனே,

அழகிளங்குற மானார் தேனார் மணவாளா ... அழகும் இளமையும்
பொலியும் குறத்தி, மான் போன்ற வள்ளியின் இனிமை நிறைந்த
மணவாளனே,

அரியரன்பிர மாவோடே மூவகையர் ... திருமால், சிவன், பிரமா
எனப்படும் மூவகைத் தெய்வங்கள்,

இந்திர கோமான் நீள்வானமரர் கந்தருவானோர் ஏனோர்
பெருமாளே.
... இந்திரன் என்ற அரசன், பெரிய விண்ணுலகிலுள்ள
தேவர்கள், கந்தர்வர் ஆனோர், பிற எல்லா வகையினர்க்கும் பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 3.314  pg 3.315  pg 3.316  pg 3.317 
 WIKI_urai Song number: 1136 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 1133 - iravodum pagalE (common)

iravodum pagalE mARAdhE
     anudhinam thuyar OyAdhEyE
          yeriyum undhiyinAlE mAlE ...... peridhAgi

irai koLumpadi UdE pAdE
     migudhi koNdozhiyAdhE vAdhE
          idaigaLin sila nALE pOyE ...... vayadhAgi

naraigaLum peridhAyE pOyE
     kizhavan endroru pErE sArvE
          nadaigaLum pala thARE mARE ...... vizhalAgi

nayanamum theriyAdhE pOnAl
     vidivadhendr adiyEnE thAnE
          natana kunjitha veedE kUdAdhu ...... azhivEnO

thiru natampuri thALee thULee
     makara kundali mAree sUree
          thiripuran thazhal Evee sArvee ...... abirAmi

sivan idanthari neelee sUlee
     gavuri panchavi Ayee mAyee
          sivai peN ambigai vAlA seelA ...... aruL bAlA

arava kingkiNi veerA dheerA
     giri purandhoLir nAthA pAdhA
          azhagiLan kuRamAnAr thEnAr ...... maNavALA

ariaran biramAvOdE mU
     vagaiyar indhira kOmAneeL vAn
          amarar kandharu vAnOr EnOr ...... perumALE.

......... Meaning .........

iravodum pagalE mARAdhE: Day and night, without slackening,

anudhinam thuyar OyAdhEyE: misery afflicts me continuously everyday;

yeriyum undhiyinAlE mAlE peridhAgi: The hunger in the stomach is like a fire giving rise to desires in a big way.

irai koLumpadi UdE pAdE migudhi koNdu: Life is nothing but excessive labour in search of food, with

ozhiyAdhE vAdhE: constant bickering and arguments.

idaigaLin sila nALE pOyE vayadhAgi: In between, several days elapse, and I grow old.

naraigaLum peridhAyE pOyE kizhavan endroru pErE sArvE: My hair becomes increasingly grey, and I am branded as "the old man".

nadaigaLum pala thARE mARE vizhalAgi: My steps begin to falter, and I start stumbling.

nayanamum theriyAdhE pOnAl: My eyes begin to lose their vision.

vidivadhendr adiyEnE thAnE: When shall I, the poor me, see the dawn? (in other words, when will my miseries end?)

natana kunjitha veedE kUdAdhu azhivEnO: Will I perish without attaining the blissful heaven where Lord NadarAjA dances with a bent and raised leg?

thiru natampuri thALee thULee: She has feet that execute the holy dance; She dons the holy ash;

makara kundali mAree sUree: She wears eardrops shaped like the makara fish; She is Durga known as MAri; She is MahA KALi;

thiripuran thazhal Evee sArvee abirAmi: She ignited the fire in Thiripuram; She is the ultimate refuge; She is the most beautiful;

sivan idanthari neelee sUlee: She occupies the left side of Lord SivA's body; She has a blue complexion; She holds a lance in her hand;

gavuri panchavi Ayee mAyee: She is known as Gowri; She offers protection as the fifth Sakthi; She is Our Mother; She is the Greatest Mystic (MahA MAyee);

sivai peN ambigai vAlA seelA aruL bAlA: She is the Consort of SivA; She is the Goddess in the form of a little girl; She is the purest Celestial named PArvathi; and You are Her Child!

arava kingkiNi veerA dheerA: The anklets in Your feet make lilting sound, Oh valorous and Courageous One!

giri purandhoLir nAthA pAdhA: You are the luminous Lord protecting all mountains! You place Your holy feet on the heads of Your devotees!

azhagiLan kuRamAnAr thEnAr maNavALA: You are the honey-like sweet Consort of VaLLi, the beautiful and young damsel of the KuRavAs!

ariaran biramAvOdE mUvagaiyar: The Trinity of Vishnu, SivA and BrahmA,

indhira kOmAneeL vAn amarar kandharu vAnOr: King IndrA, the DEvAs in the large Celestial Land, GandharvAs and

EnOr perumALE.: all others worship You, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 1133 iravodum pagalE - common

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]