திருப்புகழ் 156 சிவனார் மனங்குளிர  (பழநி)
Thiruppugazh 156 sivanArmanangkuLira  (pazhani)
Thiruppugazh - 156 sivanArmanangkuLira - pazhaniSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனனா தனந்ததன தனனா தனந்ததன
     தனனா தனந்ததன ...... தனதான

......... பாடல் .........

சிவனார் மனங்குளிர உபதேச மந்த்ரமிரு
     செவிமீதி லும்பகர்செய் ...... குருநாதா

சிவகாம சுந்தரிதன் வரபால கந்தநின
     செயலேவி ரும்பியுளம் ...... நினையாமல்

அவமாயை கொண்டுலகில் விருதாவ லைந்துழலு
     மடியேனை அஞ்சலென ...... வரவேணும்

அறிவாக மும்பெருக இடரான துந்தொலைய
     அருள்ஞான இன்பமது ...... புரிவாயே

நவநீத முந்திருடி உரலோடெ யொன்றுமரி
     ரகுராமர் சிந்தைமகிழ் ...... மருகோனே

நவலோக முங்கைதொழு நிசதேவ லங்கிருத
     நலமான விஞ்சைகரு ...... விளைகோவே

தெவயானை யங்குறமின் மணவாள சம்ப்ரமுறு
     திறல்வீர மிஞ்சுகதிர் ...... வடிவேலா

திருவாவி னன்குடியில் வருவேள்ச வுந்தரிக
     செகமேல்மெய் கண்டவிறல் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

சிவனார் மனங்குளிர ... சிவபிரானது மனம் குளிரும்படியாக

உபதேச மந்த்ரம் ... ஓம் என்ற மந்திரத்தின் விளக்க உபதேசத்தை

இருசெவிமீதி லும்பகர்செய் ... அவரது இரு செவிகளிலும் சொன்ன

குருநாதா ... குருநாதனே,

சிவகாம சுந்தரிதன் ... சிவகாம சுந்தரியாம் பார்வதியின்

வரபால கந்த ... மேன்மையான மைந்தனே, கந்தனே,

நினசெயலேவி ரும்பி ... உனக்குச் செய்யும் தொண்டினையே விரும்பி

உளம் நினையாமல் ... உள்ளத்தில் நினைக்காமல்,

அவமாயை கொண்டு ... கேடு விளைவிக்கும் மாயையின் வசமாகி,

உலகில் விருதாவ லைந்துழலும் ... உலகிலே வீணாக அலைந்து
திரியும்

அடியேனை அஞ்சலென வரவேணும் ... அடியேனை அஞ்சாதே
எனக் கூறி அருள்வதற்கு நீ வரவேண்டும்.

அறிவாக மும்பெருக ... அறிவு மனத்திலே பெருகி வளரவும்,

இடரான துந்தொலைய ... துன்பங்களெல்லாம் தொலையவும்,

அருள்ஞான இன்பமது ... நின்னருளால் பெறக் கூடிய ஞான
இன்பத்தை

புரிவாயே ... தந்தருள்வாயாக.

நவநீத முந்திருடி ... வெண்ணெயையும் திருடி,

உரலோடெ யொன்றுமரி ... உரலுடனும் கட்டுப்பட்ட ஹரி,

ரகுராமர் சிந்தைமகிழ் மருகோனே ... ரகுராமனாம் திருமால்
மனமகிழும் மருமகனே,

நவலோக முங்கைதொழு ... நவகண்ட பூமியில் யாவரும்
கைதொழுது வணங்கும்

நிசதேவ லங்கிருத ... உண்மைத் தெய்வமே, அலங்காரமானவனே,

நலமான விஞ்சைகரு விளைகோவே ... நலம் தரும்
மாயவித்தையால் பிறப்புத் தோற்றங்கள் பலவற்றை விளைவிக்கும்
தலைவனே,

தெவயானை யங்குறமின் மணவாள ... தேவயானை, அழகிய
குறப்பெண் வள்ளி இவ்விருவருக்கும் மணவாளனே,

சம்ப்ரமுறு திறல்வீர ... நிறைவான திறல் வாய்ந்த வீரனே,

மிஞ்சுகதிர் வடிவேலா ... மிக்க ஒளி வீசும் கூரிய வேலாயுதனே,

திருவாவி னன்குடியில் வருவேள் ... திருவாவினன்குடியில்
எழுந்தருளிய மன்மதனே,

சவுந்தரிக ... அழகனே,

செகமேல்மெய் கண்ட ... உலகில் உண்மைப் பொருளைக்
கண்டு தெரிவித்த

விறல் பெருமாளே. ... திறம் வாய்ந்த பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.274  pg 1.275  pg 1.276  pg 1.277 
 WIKI_urai Song number: 109 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Thiru P. Shanmugam
திரு பொ. சண்முகம்

Thiru P. Shanmugam
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Thiru P. Sambandam Gurukkal
திரு சம்பந்தம் குருக்கள்

Thiru P. Sambandam Gurukkal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
'Pazhani' Thiru ShaNmugasundara DhEsigar
'பழநி' திரு சண்முக சுந்தரம்

'Pazhani' Thiru ShaNmugasundara DhEsigar
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

ThiruththaNi Thiru SAminAthan
'திருத்தணி' திரு சாமிநாதன்

'ThiruththaNi' Thiru SAminAthan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

M.S. Balashravanlakshmi - Puducherry
M.S. பாலஷ்ரவண்லக்ஷ்மி
புதுச்சேரி

M.S. Balashravanlakshmi
Puducherry
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Mrs. Malathi Velayudhan, Chennai
திருமதி வே. மாலதி, சென்னை

Mrs. Malathi Velayudhan, Chennai
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 156 - sivanAr manangkuLira (pazhani)

sivanAr manam kuLira upadhEsa manthram iru
     sevi meedhilum pagarsey ...... gurunAthA

sivakAma sundhari than varabAla kandha nin
     seyalE virumbi uLam ...... ninaiyAmal

avamAyai kondulagil virudhA alaindhuzhalum
     adiyEnai anjal ena ...... vAravENum

aRivAgamum peruga idarAnadhum tholaiya
     aruL nyAna inbam adhu ...... purivAyE

navaneethamum thirudi uralOde ondrum ari
     ragurAmar chindhai magizh ...... marugOnE

navalOkamum kaithozhu nijadhEva alankirutha
     nalamAna vinjaikaru ...... viLaikOvE

dhevayAnai ankuRamin maNavALa sambramuRu
     thiRalveera minju kadhir ...... vadivElA

thiruvAvi nankudiyil varuvEL savundharika
     jega mEl mey kaNda viRal ...... perumALE.

......... Meaning .........

sivanAr manam kuLira: Lord SivA was exhilirated

upadhEsa manthram: when You explained the Sacred ManthrA (OM)

iru sevi meedhilum pagarsey: into His two ears,

gurunAthA: Oh Great Master!

sivakAma sundhari than varabAla: You are the great son of SivagAma Sundhari (PArvathi),

kandha: Oh Kandaswamy!

nin seyalE virumbi uLam ninaiyAmal: Not interested in thinking of being in Your service only,

avamAyai kondu: I am possessed by harmful illusions

ulagil virudhA alaindhuzhalum: and am roaming in this world aimlessly as a wastrel.

adiyEnai anjal ena vAravENum: You must come to rescue me with the words "Fear not"!

aRivAgamum peruga: In order that my inner knowledge is kindled,

idarAnadhum tholaiya: and to put an end to all my miseries,

aruL nyAna inbam adhu purivAyE: You have to grant me the bliss of wisdom attainable by Your grace.

navaneethamum thirudi: (Your Uncle Krishna) stole butter

uralOde ondrum ari: and also willingly bonded Himself to the grinding-stone (ural); that Hari,

ragurAmar chindhai magizh marugOnE: He was also known as Raghuramar, You are His favourite Nephew!

navalOkamum kaithozhu nijadhEva: All people in the Nine Continents worship You as the Real God!

alankirutha: You are grandly attired!

nalamAna vinjaikaru viLaikOvE: You make myriads of births happen in this world by Your mystic power, Oh Leader!

dhevayAnai ankuRamin maNavALa: You are the consort of both Devayani and VaLLi, the damsel of KuRavas!

sambramuRu thiRalveera: You are the Great warrior with complete bravery!

minju kadhir vadivElA: You hold the brightest and sharpest Spear!

thiruvAvi nankudiyil varuvEL savundharika: You are as handsome as Manmathan and residing in ThiruvAvinankudi.

jega mEl mey kaNda: You are the only one who discovered the Truth in the Universe;

viRal perumALE.: You are very capable, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 156 sivanAr manangkuLira - pazhani

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]