பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258 முருகவேள் திருமுறை 13. திருமுறை 109. ஞானம் பெற சிவனார் மனங்குளிர உபதேச மந்த்ரமிரு செவிமீதி லும்பகர்செய் குருநாத. சிவகாம சுந்தரிதன் வரபால கந்தநின செயலேவி ரும்பியுளம் நினையாமல்; அவமாயை கொண்டுலகில் விருதாவ லைந்துழலு , மடியேனை அஞ்சலென வரவேணும்.

அறிவாக மும்பெருக இடரான துந்தொலைய அருள்ஞான இன்பமது புரிவாயே நவநீத முந்திருடி உரலோடெ யொன் றுமரி ரகுராமர் சிந்தைமகிழ் மருகோனே . நவலோக முங்கைதொழு நிசதேவ லங்கிருத நலமான விஞ்சைகரு விளைகோவே, சீதெவயானை யங்குறமின் மணவாள சம்ப்ரமுறு திறல்வீர மிஞ்சுகதிர் வடிவேலா . 1. ஆகம். மனம். 2. தெவயானை- தேவயானை,