திருப்புகழ் 1281 இத்தரணி மீதில்  (பொதுப்பாடல்கள்)
Thiruppugazh 1281 iththaranimeedhil  (common)
Thiruppugazh - 1281 iththaranimeedhil - commonSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தத்ததன தானத் ...... தனதான

......... பாடல் .........

இத்தரணி மீதிற் ...... பிறவாதே

எத்தரொடு கூடிக் ...... கலவாதே

முத்தமிழை யோதித் ...... தளராதே

முத்தியடி யேனுக் ...... கருள்வாயே

தத்துவமெய்ஞ் ஞானக் ...... குருநாதா

சத்தசொரு பாபுத் ...... தமுதோனே

நித்தியக்ரு தாநற் ...... பெருவாழ்வே

நிர்த்தஜெக ஜோதிப் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

இத்தரணி மீதிற் பிறவாதே ... இந்தப் பூமியில் பிறக்காமலும்,

எத்தரொடு கூடிக் கலவாதே ... ஏமாற்றுபவர்களுடன் கூடிக்
கலந்து கொள்ளாமலும்,

முத்தமிழை யோதித் தளராதே ... இயல், இசை, நாடகம் என்ற
மூன்று தமிழையும் படித்துப் படித்துச் சோர்வடையாமலும்,

முத்தி அடியேனுக்கு அருள்வாயே ... முக்திநிலையை எனக்குத்
தந்தருள வேண்டுகிறேன்.

தத்துவமெய்ஞ் ஞானக்குருநாதா ... உண்மைப் பொருளாகிய
மெய்ஞ்ஞானத்தை உபதேசம் செய்யவல்ல குருமூர்த்தியே,

சத்தசொருபா ... ஒலி (சப்தம்) வடிவிலே திகழ்பவனே,

புத்தமுதோனே ... புதிய அமிர்தம் போன்றவனே,

நித்தியக்ருதா ... தினந்தோறும் எனக்கு நன்மையே செய்பவனே,

நற் பெருவாழ்வே ... என் வாழ்வின் நல்ல பெரும் செல்வமே,

நிர்த்தஜெக ஜோதிப் பெருமாளே. ... ஆடல் வல்லோனும், அகில
உலகிற்கும் பேரொளியாய் விளங்குவோனுமான பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 3.654  pg 3.655  pg 3.656  pg 3.657 
 WIKI_urai Song number: 1280 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

M.S. Balashravanlakshmi - Puducherry
M.S. பாலஷ்ரவண்லக்ஷ்மி
புதுச்சேரி

M.S. Balashravanlakshmi
Puducherry
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Thiru L. Vasanthakumar M.A.
திரு L. வசந்த குமார்

Thiru L. Vasanthakumar M.A.
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Karivalam Thiru Muruga Sundhar
'கரிவலம்' திரு முருக சுந்தர்

Thiru M. Sundhar
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 1281 - iththarani meedhil (common)

iththaraNi meedhiR ...... piRavAdhE

eththarodu kUdik ...... kalavAdhE

muththamizhai Odhi ...... thaLarAdhE

muththi adiyEnukku ...... aruLvAyE

thaththuva mey nyAna ...... gurunAthA

saththa sorUpa puth ...... amudhOnE

niththiya kruthA naR ...... peruvAzhvE

nirththa jegajOthip ...... perumALE.

......... Meaning .........

iththaraNi meedhiR piRavAdhE: I do not want to be born again in this world;

eththarodu kUdik kalavAdhE: I do not like to mingle with cheats any more;

muththamizhai Odhi thaLarAdhE: I am tired of studying the three branches of Tamil, namely literature, music and drama;

muththi adiyEnukku aruLvAyE: and I want to be liberated, and You alone can do that for me.

thaththuva mey nyAna gurunAthA: You are the Great Master who can teach me that true knowledge.

saththa sorUpa: You have taken the form of Cosmic Sound!

puth amudhOnE: You are fresh as Divine Nectar!

niththiya kruthA: You always do good to me every day.

naR peruvAzhvE: You are the great Treasure of my life.

nirththa jegajOthip perumALE.: You are the Cosmic Dancer and Light of the whole world, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 1281 iththarani meedhil - common

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]