பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/657

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 649 ஜோதியாய் விளங்கும் ப்ெரும்ாளே! (முத்தி அடியேனுக்கு அருள்வாயே) 1281. எனது (பந்த வினைத் தொடரை) சூழ்ந்து கட்டியுள்ள வினை என்னப்பட்ட (தொடரை லங்கைப் போக்கி ஒழித்து விசையமாகி (நான்) வெற்றியடைந்து இன்பநிலையை அடைந்து நிரம்பப் பிரியம் கொண்டு அன்பு பெருகிய நிலையதாய்ப் பொன் கிண்ணியில் உள்ள பாற்கடல் அமுதத்துக்கு ஒப்பான முடிவான பேரின்பப் பொருள்மீது - (இச்சை கொள்) ஆசையைக் கொள்கின்ற (ஆஸ்பதம்) ஆதார நிலைய்ைத் தந்தருளுக. &T&T T உருவாற் சிறுவடிவாகி உருவத்தில் இளையவனாய் - முன் சூரசம்மாரம் ஆன காலத்தில், திந்தி என்னும் ஒலியுடன் பரதாத்துடன் - பரதத்துடன் - பரதசாத்திர முறைப்படி துடி என்னும் கூத்தினை ஆடி, தங்களது பந்தம் - மலக்கட்டு (அற) நீங்கத் தவநிலையில் நின்று நோற்பவர்களுடைய குறைகள் நீங்க நடமாடி என்னாது இனி "நடமாடித்" என இருப்பதால் 1281ஆம் பாடலின் 5-8 அடிகள் சம்பந்தரையே குறிப்பதாகவும் பொருள் காணலாம் (உரையிற் குறிப்பிட்ட இடம் காண்க). சம்பந்தராய்ச் சிறு வடிவாகித் தோன்றினதும், இறைவன் முன்னிலையில் பாடி நடன மாடினதும்: போதாயன முனி சூத்திரம், கவுணிய கோத்திரத்து மறையவர் சிவபாத இருதயர் முருகனே குழந்தையாய் வரவேண்டு மெனத் தவம் புரிந்தனர் எனவும், அவருக்கு அருள் செய விரும்பி முருகன் அவர் முன்பு இளங் குழந்தையாய்த் தோன்றினர் எனவும், அக்குழந்தையை அவர் அணைத்து எடுத்துத் தமது மனைவி பகவதியம்மையிடம் கொடுத்தனர் எனவும், சம்பந்தர் வரலாற்றைச் சீகாழிப்புராணம் கூறும் "மாதவம் புரிவோன் முன் இளங் கதிர்போல் மதலையாய், வந்தனன் கந்தன்" சீகாழிப்புரா. ஞானசம் அவதாரம் 6 சம்பந்தர் அவ்வத்தலங்களில் இசையுடன் பதிகம் பாடின போது பாடி டினராதலின் திந்தி எனப் பரதத்துடன் நடமாடி" என்றார்: பதிதத்திற் புணரும் இன்னிசை பாடினர் ஆடினர் பொழிந்தனர் விழிமாரி. பெரியபுரா. ஞானசம். 161 'நடன ஞான சம்பந்தர்' என உற்சவ விக்கிரமும் உண்டு. சென்னைக் கோட்டைக் கண்காட்சியில் வைத்திருந்தது. பொற்கிணி. அமுது". சம்பந்தரை நினைவூட்டும்