திருப்புகழ் 1258 நாகாங்க ரோமம்  (பொதுப்பாடல்கள்)
Thiruppugazh 1258 nAgAngkarOmam  (common)
Thiruppugazh - 1258 nAgAngkarOmam - commonSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தானாந்த தானந் தாத்த தானாந்த தானந் தாத்த
     தானாந்த தானந் தாத்த ...... தனதான

......... பாடல் .........

நாகாங்க ரோமங் காட்டி வாரேந்து நாகங் காட்டி
     நாமேந்து பாலங் காட்டி ...... யபிராம

நானாங்க ராகங் காட்டி நாகேந்த்ர நீலங் காட்டி
     நாயேன்ப்ர காசங் காட்டி ...... மடலூர

மேகாங்க கேசங் காட்டி வாயாம்பல் வாசங் காட்டி
     மீதூர்ந்த போகங் காட்டி ...... யுயிரீர்வார்

மேல்வீழ்ந்து தோயுந் தூர்த்தன் மோகாந்த காரந் தீர்க்க
     வேதாந்த தீபங் காட்டி ...... யருள்வாயே

ஏகாந்த வீரம் போற்றி நீலாங்க யானம் போற்றி
     யேடார்ந்த நீபம் போற்றி ...... முகில்தாவி

ஏறோங்க லேழுஞ் சாய்த்த நான்மூன்று தோளும் போற்றி
     யார்வேண்டி னாலுங் கேட்ட ...... பொருளீயும்

த்யாகாங்க சீலம் போற்றி வாயோய்ந்தி டாதன் றார்த்து
     தேசாங்க சூரன் தோற்க ...... மயிலேறிச்

சேவேந்தி தேசம் பார்க்க வேலேந்தி மீனம் பூத்த
     தேவேந்த்ர லோகங் காத்த ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

நாக அங்க ரோமம் காட்டி வார் ஏந்து நாகம் காட்டி நா(ம)ம்
ஏந்து பாலம் காட்டி அபிராம நானாங்க ராகம் காட்டி நாக
இந்த்ர நீலம் காட்டி
... பாம்பு போன்ற அங்கமாகிய பெண்குறியின்
ரோமத்தைக் காட்டி, கச்சு அணிந்த மலை போன்ற மார்பகங்களைக்
காட்டி, புகழத் தக்க நெற்றியைக் காட்டி, அழகிய பலவிதமான வாசனை
மிக்க திரவியங்களைக் காட்டி, தேவலோகத்திலிருந்து கொண்டு
வரப்பட்ட நீலோற்பல மலர் போன்ற கண்களைக் காட்டி,

நாயேன் ப்ரகாசம் காட்டி மடல் ஊர மேக அங்க கேசம் காட்டி
வாய் ஆம்பல் வாசம் காட்டி மீது ஊர்ந்த போகம் காட்டி உயிர்
ஈர்வார்
... அடியேன் என் மோகத்தை வெளிப் படுத்தி மடல் ஏறும்படி*
மேகம் போல் கருமையான கூந்தலைக் காட்டி, ஆம்பல் போன்ற வாயின்
நறுமணத்தைக் காட்டி, மேலே படுத்து அனுபவிக்கும் போக சுகத்தைக்
காட்டி, உயிரை வாங்குபவர்களான விலைமாதர்களின்

மேல் வீழ்ந்து தோயும் தூர்த்தன் மோக அந்தகாரம் தீர்க்க
வேதாந்த தீபம் காட்டி அருள்வாயே
... மேலே விழுந்து புணரும்
துஷ்டனாகிய என்னுடைய காம மயக்கம் என்னும் இருளை ஒழிக்க,
வேதத்தின் முடிவாகிய உண்மைப் பொருளைக் காட்டி எனக்கு அருள்
புரிவாயாக.

ஏகாந்த வீரம் போற்றி நீல அங்க யானம் போற்றி ஏடு
ஆர்ந்த நீபம் போற்றி முகில் தாவி ஏறு ஓங்கல் ஏழும் சாய்த்த
நான் மூன்று தோளும் போற்றி
... இணை இல்லாத உனது
வீரத்தை போற்றுகின்றேன். நீல நிற அங்கத்தை உடைய (உனது)
விமானமாகிய மயிலைப் போற்றுகின்றேன். மலர்கள் நிறைந்த கடப்ப
மாலையைப் போற்றுகின்றேன். மேகங்கள் தாவி மேலேறிப் படியும்
(சூரனது) ஏழு மலைகளையும் தொலைத்த உனது பன்னிரு
புயங்களையும் போற்றுகின்றேன்.

யார் வேண்டினாலும் கேட்ட பொருள் ஈயும் த்யாகாங்க சீலம்
போற்றி
... யார் வேண்டிக் கொண்டாலும் கேட்ட வரத்தைக்
கொடுத்தருளும் கொடைப் பெருமை கொண்ட உனது அலங்கார
குணத்தைப் போற்றுகின்றேன்.

வாய் ஓய்ந்திடாது அன்று ஆர்த்து தேசாங்க** சூரன் தோற்க
மயில் ஏறிச் சேவு ஏந்தி தேசம் பார்க்க வேல் ஏந்தி மீனம்
பூத்த தேவேந்த்ர லோகம் காத்த பெருமாளே.
... வாய் ஓயாமல்
முன்பு கூச்சலிட்டவனும், பத்து உறுப்புக்களை உடையவனுமாகிய சூரன்
தோற்றுப்போக, மயிலின் மீது ஏறி சேவற் கொடியைக் கையில் ஏந்தி,
நாட்டில் உள்ளவர்கள் காணும்படி வேலாயுதத்தைத் தாங்கி, நட்சத்திரங்கள்
விளங்கி நின்ற தேவர்களின் விண்ணுலகத்தைக் காப்பாற்றிய பெருமாளே.


* மடல் எழுதுதல்:

தலைவன் தலைவியின் அழகை வர்ணித்து ஓர் ஏட்டில்
மடலாக எழுதி அவளது ஊருக்குச் சென்று நாற்சந்தியில் ஒன்றும் பேசாமல்
ஒருவரது வசைக்கும் கூசாமல் படத்தில் எழுதிய உருவத்தைப் பார்த்தவாறு
பகலும் இரவுமாக நிற்பான். அவனது உறுதிகண்டு தலைவியின் வீட்டார்
தலைவனுக்கு அவளை மணம் செய்து வைப்பர். முருகன் வள்ளியை ஊரறிய
மடல் எழுதி மணம் செய்துகொண்ட காட்சி கந்த புராணத்தில் வருகிறது.


** தேசாங்க சூரன் = தசாங்க சூரன். அவனுடைய பத்து அங்கங்களாவன:

நாமம், நாடு, ஊர், ஆறு, மலை, ஊர்தி, படை, முரசு, தார், கொடி.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 3.608  pg 3.609  pg 3.610  pg 3.611 
 WIKI_urai Song number: 1257 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 1258 - nAgAngka rOmam (common)

nAkAnga rOmang kAtti vArEnthu nAkang kAtti
     nAmEnthu pAlang kAtti ...... yapirAma

nAnAnga rAkang kAtti nAkEnthra neelang kAtti
     nAyEnpra kAsang kAtti ...... madalUra

mEkAnga kEsang kAtti vAyAmpal vAsang kAtti
     meethUrntha pOkang kAtti ...... yuyireervAr

mElveezhnthu thOyun thUrththan mOkAntha kAran theerkka
     vEthAntha theepang kAtti ...... yaruLvAyE

EkAntha veeram pOtRi neelAnga yAnam pOtRi
     yEdArntha neepam pOtRi ...... mukilthAvi

EROnga lEzhunj chAyththa nAnmUnRu thOLum pOtRi
     yArvENdi nAlung kEtta ...... poruLeeyum

thyAkAnga seelam pOtRi vAyOynthi dAthan RArththu
     thEsAnga cUran thORka ...... mayilERic

chEvEnthi thEsam pArkka vElEnthi meenam pUththa
     thEvEnthra lOkang kAththa ...... perumALE.

......... Meaning .........

nAka anga rOmam kAtti vAr Enthu nAkam kAtti nA(ma)m Enthu pAlam kAtti apirAma nAnAnga rAkam kAtti nAka inthra neelam kAtti: Displaying the pubic hair on their genital looking like a serpent, exhibiting their mountain-like bosom under a tight blouse, showing off their noteworthy forehead, revealing the many aromatic varieties of perfume, ogling with their eyes that look like the blue lilies specially sent for from the celestial world,

nAyEn prakAsam kAtti madal Ura mEka anga kEsam kAtti vAy Ampal vAsam kAtti meethu Urntha pOkam kAtti uyir eervAr: flaunting their cloud-like dark hair that drives my passion to the point that I am ready to reveal it and climb the "madal"*, exuding the fragrance from their mouth that looks like the water-lily and demonstrating the coital pleasure derived from sleeping with them, these whores extract my life out of me;

mEl veezhnthu thOyum thUrththan mOka anthakAram theerkka vEthAntha theepam kAtti aruLvAyE: I am such a wicked person that copulates with them lying on their bodies; to eradicate the darkness of my lustful delusion, kindly reveal to me the true principle that is the end of the vEdAs, Oh Lord!

EkAntha veeram pOtRi neela anga yAnam pOtRi Edu Arntha neepam pOtRi mukil thAvi ERu Ongal Ezhum sAyththa nAn mUnRu thOLum pOtRi: I praise Your unmatched bravery, Oh Lord! I laud Your vehicle, the Peacock that has a bluish body! I extol Your kadappa garland full of flowers and I pay tribute to Your twelve shoulders that did away with the seven mountains (of the demon, SUran) over which the clouds hover!

yAr vENdinAlum kEtta poruL eeyum thyAkAnga seelam pOtRi: I extol Your exquisite magnanimity in showering the boons sought by anyone who worships You!

vAy OynthidAthu anRu Arththu thEsAnga** cUran thORka mayil ERic chEvu Enthi thEsam pArkka vEl Enthi meenam pUththa thEvEnthra lOkam kAththa perumALE.: He screamed non-stop previously, and that demon SUran, endowed with ten attributes, was trounced in the battlefield as You, mounting the peacock, displaying the staff with the emblem of Rooster held in Your hand and showing Your spear to all those spectators of the world, protected the star-filled celestial world of the DEvAs, Oh Great One!


* madal - is a type of palm leaf used as a canvas on which Murugan drew the descriptive picture of VaLLi and went alone to VaLLimalai. There, He chose a junction of four streets and stood staring at the picture day in and day out, oblivious of other peoples' comments and jeers. Ultimately, VaLLi's people were so moved by Murugan's devotion that they decided to formally give VaLLi in marriage to Murugan - according to Kandha PurANam.


** thEsAnga cUran = thasAnga cUran meaning ten attributes of the demon cUran, namely, name, country, capital city, river, mountain, vehicle, weapon, drum, garland and the staff.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 1258 nAgAngka rOmam - common

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]