பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/610

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

602 முருகவேள் திருமுறை (7- திருமுறை த்யாகாங்க சிலம் போற்றி வாயோய்ந்தி டாதன் நார்த்து தேசாங்க ஆரன் தோற்க மயிலேறிச். fசேவேந்தி தேசம் பார்க்க வேலேந்தி மீனம் பூத்த தேவேந்த்ர லோகங் காத்த பெருமாளே (267) 1258. இடர் ஒழிய தனதன தனதனத் தனதன தனதனத் தனதன தனதனத் தனதான பரிமள மலரடுத் தகில்மண முழுகிமைப் பரவிய ம்ருகமதக் குழல்மானார். பருமணி வயிரமுத் திலகிய குழையினிற் படையொரு வனவிழிக் கயலாலே, எரியுறு மெழுகெனத் தனிமன மடையநெக் கினிமையொ டுருகவிட் டவமேயான். இருவினை நலியமெய்த் திறலுட னறிவுகெட் டிடர்படு வதுகெடுத் தருள்வாயே! சொரிமத அருவிவிட் டொழுகிய புகர்முகத் தொளைபடு கரமலைக் கிளையோனே. துடியிடை யொருகுறக் குலமயில் புளகிதத் துணைமுலை தழுவுபொற் புயவிரா அரியன பலவிதத் தொடுதிமி லையுமுடுக் கையுமொகு மொகுவெனச் சதகோடி #அலகையு முடனடித் திடவடி யயிலெடுத் தமர்செயு மறுமுகப் பெருமாளே (268)

  • தேசாங்க = தசாங்கம்:- நாமம், நாடு, ஊர். ஆறு, மலை, ஊர்தி , படை முரசு, தார், கொடி - திருவாசகம் யானை, நாடு, ஊர். ஆறு, மலை, குதிரை தேர், முரசு, தார், கொடி (திவா, பிங்) மலை, ஆறு. நாடு, நகர், குதிரை, களிறு, மாலை, கொடி முரசு, ஆணை (கந்தகலி) ஆணைக்குப் பதிலாகத்தானை அல்லது செங்கோல் என்பன போன்ற பத்து அரசியல் உறுப்புக்கள். வாளேந்திடா அன்றார்த்த திதார்ந்த சூரன்' என்றும் பாடம் 1. சேவு = சேவல்

1257ஆம் பாட்டின் அடி 5,6 அடி 7-ல் சீலம் போற்றி வரையில் முருகவேள் துதிக்கு உரிய பாகமாம்.

  1. ஏழுவகை நிருத்தம் இடுவன அலகையே (வகுப்பு)