திருப்புகழ் 1257 நற்குணம் உளார்  (பொதுப்பாடல்கள்)
Thiruppugazh 1257 naRkuNamuLAr  (common)
Thiruppugazh - 1257 naRkuNamuLAr - commonSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தத்ததன தான தத்த, தத்ததன தான தத்த
     தத்ததன தான தத்த ...... தனதான

......... பாடல் .........

நற்குணமு ளார்த மைப்பொல் மைக்குழலி லேசி றக்க
     நற்பரிம ளாதி துற்ற ...... மலர்சூடி

நச்சுவிழி யால்ம யக்கி யிச்சைபல பேசி யுற்று
     நற்பொருள வாம னத்தர் ...... வசமாகி

வெற்பனைய மாத னத்தை பொற்புறவு றாவ ணைத்து
     மெத்தமய லாகி நித்த ...... மெலியாதே

வெட்சிகமழ் நீப புஷ்ப வெற்றிசிறு பாத பத்ம
     மெய்க்கிருபை நீய ளிப்ப ...... தொருநாளே

ரத்தினப ணாநி ருத்தன் மெய்ச்சுதனு நாடு மிக்க
     லக்ஷணகு மார சுப்ர ...... மணியோனே

நற்றிசையு மேறி யிட்ட பொய்ச்சமணை வேர றுத்து
     நற்றிருநி றேப ரப்பி ...... விளையாடும்

சற்சனகு மார வ்ருத்தி அற்புதசி வாய னுக்கொர்
     சற்குருவி நோத சித்ர ...... மயில்வீரா

சக்ரதரன் மார்ப கத்தி லுக்ரமுட னேத ரித்த
     சத்தியடை யாள மிட்ட ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

நல் குணம் உளார் தமைப் பொல் மைக் குழலிலே சிறக்க நல்
பரிமள ஆதி துற்ற மலர் சூடி
... நல்ல குணம் படைத்தவர்களைப்
போல, கரிய கூந்தலில் அழகு விளங்கும்படி நல்ல வாசனைத் திரவியங்கள்
முதலியவற்றைத் தூவி நெருங்கி நிறைந்த மலர்களை முடித்துக் கொண்டு,

நச்சு விழியால் மயக்கி இச்சை பல பேசி உற்று நல் பொருள்
அவா(வு)ம் மனத்தர் வசமாகி
... விஷம் தோய்ந்த கண்களால்
(ஆடவர்களை) மயக்குவித்து, காம இச்சை ஊட்டும் இனிய மொழிகளைப்
பேசிக் கொண்டிருந்து, விலை உயர்ந்த பொருளைப் பெற ஆசைப்படும்
மனத்தைக் கொண்ட விலைமாதர்களின் வசப்பட்டு,

வெற்பு அனைய மா தனத்தை பொற்புற உறா அணைத்து
மெத்த மயலாகி நித்தம் மெலியாதே
... மலை போன்ற பெரிய
மார்பகங்களை அழகு பெற உற்று அடைந்து, அணைத்து மிகவும்
மோகம் கொண்டு நாள் தோறும் (நான்) மெலிந்து போகாமல்,

வெட்சி கமழ் நீப புஷ்ப(ம்) வெற்றி சிறு பாத பத்மம் மெய்க்
கிருபை நீ அளிப்பது ஒரு நாளே
... வெட்சி மலர், நறு மணம் வீசும்
கடப்ப மலர் (இவைகளைக் கொண்டதும்) வெற்றியைத் தருவதுமான சிறிய
திருவடித் தாமரையைக் கொண்டவனே, உண்மையான திருவருளை நீ
கொடுத்து அருளுகின்ற ஒரு நாள் கிட்டுமோ?

ரத்தின பணா நிருத்தன் மெய்ச் சுதனு(ம்) நாடு மிக்க லக்ஷண
குமார சுப்ரமணியோனே
... ரத்தினங்கள் கொண்ட படங்களை
உடைய (காளிங்கன் என்னும்) பாம்பின் மேல் நடனம் செய்தவனாகிய
கண்ணனின் (திருமாலின்) உண்மைக் குமாரனான மன்மதனும்
விரும்பும்படியான மிகுந்த அழகைக் கொண்ட குமார சுவாமியாகிய
சுப்ரமணியனே,

ந(நா)ல் திசையும் ஏறி இட்ட பொய்ச் சமணை வேர் அறுத்து
நல் திரு நிறெ பரப்பி விளையாடும் சத்சன குமார
... நான்கு
திக்குகளிலும் பரவி இருந்த பொய்யராகிய சமணர்களை வேரோடு
அறுத்து எறிந்து சிறந்த திரு நீற்றைப் பரப்பி விளையாடிய
(திருஞானசம்பந்தன் என்னும்) நல்லவனே, குமார வேளே,

வ்ருத்தி அற்புத சிவாயனுக்கு ஓர் சத் குரு விநோத சித்ர
மயில் வீரா
... செல்வப் பொருள் அற்புத மூர்த்தி சிவாய என்னும்
ஐந்தெழுத்தின் மூலப் பொருள் (ஆகிய சிவ பெருமானுக்கு) ஒப்பற்ற
குரு நாதனே, விநோதமான அழகு கொண்ட மயில் மீதமர்ந்த வீரனே,

சக்ரதரன் மார்பு அகத்தில் உக்ரமுடனே தரித்த சத்தி
அடையாளம் இட்ட பெருமாளே.
... (திருமாலின்) சக்கரத்தைத்
தரித்திருந்த தாரகாசுரனுடைய மார்பில், வலிமையுடன் நீ ஏந்தியுள்ள
சக்தி வேலைக் கொண்டு அடையாளம் இட்ட பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 3.606  pg 3.607 
 WIKI_urai Song number: 1256 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song


Song 1257 - naRkuNamuLAr (Common)

naRkuNamu LArtha maippol maikkuzhali lEsi Rakka
     naRparima LAthi thutRa ...... malarcUdi

nacchuvizhi yAlma yakki yicchaipala pEsi yutRu
     naRporuLa vAma naththar ...... vasamAki

veRpanaiya mAtha naththai poRpuRavu RAva Naiththu
     meththamaya lAki niththa ...... meliyAthE

vetchikamazh neepa pushpa vetRisiRu pAtha pathma
     meykkirupai neeya Lippa ...... thorunALE

raththinapa NAni ruththan meycchuthanu nAdu mikka
     lakshaNaku mAra subra ...... maNiyOnE

natRisaiyu mERi yitta poycchamaNai vEra Ruththu
     natRiruni REpa rappi ...... viLaiyAdum

saRchanaku mAra vruththi aRputhasi vAya nukkor
     saRguruvi nOtha chithra ...... mayilveerA

sakratharan mArpa kaththi lugramuda nEtha riththa
     saththiyadai yALa mitta ...... perumALE.

......... Meaning .........

nal kuNam uLAr thamaip pol maik kuzhalilE siRakka nal parimaLa Athi thutRa malar cUdi: They pretend to be very chaste women and spray aromatic substances on their black hair, adorning it with closely bedecked flowers;

nacchu vizhiyAl mayakki icchai pala pEsi utRu nal poruL avA (vu)m manaththar vasamAki: they lure menfolk with their poison-soaked eyes and speak to them sweet words that provoke passion; their mind is filled with the desire to grab precious belongings from their suitors; falling for such whores,

veRpu anaiya mA thanaththai poRpuRa uRA aNaiththu meththa mayalAki niththam meliyAthE: I am bent upon reaching for their mountainous bosom, hugging them with exhilaration, and obsessed with that thought I am weakening every day; saving me from such a miserable path,

vetchi kamazh neepa pushpa (m) vetRi siRu pAtha pathmam meykf kirupai nee aLippathu oru nALE: will there be a day when You truly bless me, Oh Lord with victorious, petite and lotus-like feet, that are adorned with fragrant flowers of vetchi and kadappa?

raththina paNA niruththan meyc chuthanu (m) nAdu mikka lakshaNa kumAra subramaNiyOnE: Oh Lord SubramanyA! You are Lord KumarA, whose supreme handsomeness is admired by Manmathan, the true son of Lord KrishNA (VishNu), who danced on top of the serpent (KALingan) possessing several hoods embedded with precious gems!

na (a)l thisaiyum ERi itta poyc chamaNai vEr aRuththu nal thiru niRe parappi viLaiyAdum sath chana kumAra: When the untruthful chamaNAs were spread everywhere in all the four directions, You (coming as ThirugnAna Sambandhar) playfully annihilated them by spreading the holy ash (VibUthi), Oh upright Lord KumarA!

vruththi aRputha sivAyanukku Or sath guru vinOtha chithra mayil veerA: He is a Treasure and the most wonderful Lord being the fundamental principle of the five holy letters (NamasivAya); You are the matchless Master of that Lord SivA! You have mounted the marvellously beautiful peacock, Oh valorous One!

sakratharan mArpu akaththil ugramudanE thariththa saththi adaiyaLam itta perumALE.: The demon TharakA had adorned his chest with Lord VishNu's weapon, the disc; You made the mark of the powerful spear held in Your hand on that demon's chest, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 1257 naRkuNam uLAr - common

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]