திருப்புகழ் 1256 நச்சுவாள் விழி  (பொதுப்பாடல்கள்)
Thiruppugazh 1256 nachchuvALvizhi  (common)
Thiruppugazh - 1256 nachchuvALvizhi - commonSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தத்தனா தனத்த தத்தனா தனத்த
     தத்தனா தனத்த ...... தனதான

......... பாடல் .........

நச்சுவாள் விழிக்கொ டெற்றியே தனத்தை
     நத்துவார் சுகத்தில் ...... நலமாக

நட்டமா மனத்தை யிட்டமே கொடுத்து
     நத்துவாழ் கடற்கு ...... ளணைபோலே

கச்சமே செலுத்தி யச்சமே படுத்து
     கட்டஏழ் பிறப்பு ...... விடவேதான்

கற்றநூ லுகக்க வெட்கமே செறித்த
     கட்டனே னினைப்ப ...... தொருநாளே

இச்சையே செலுத்தி யுச்சிதாள் பலிக்கு
     மிட்டமா லவற்கு ...... மருகோனே

எற்றுவா ரிதிக்குள் முற்றிநீள் பொருப்பை
     யெக்கிநேர் மடித்த ...... இளையோனே

மெச்சவே புடைத்த முத்தமார் தனத்தி
     மிக்கவாள் படைத்த ...... விழியாலே

வெட்டுமா மறத்தி யொக்கவே யிருக்க
     வெற்றிவே லெடுத்த ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

நச்சு வாள் விழி கொ(ண்)டு எற்றியே தனத்தை நத்துவார்
சுகத்தில் நலமாக
... விஷம், வாள் (இவைகளை) ஒத்த கண்களைக்
கொண்டு (ஆடவர்களைத்) தாக்கியே, பொருளை விரும்புவர்களாகிய
விலைமாதர்களின் காம போகத்தில் இன்பம் பெற,

நட்ட மா மனத்தை இட்டமே கொடுத்து நத்து வாழ் கடற்குள்
அணைபோலே கச்சமே செலுத்தி
... புதைக்கப்பட்ட சிறந்த
மனத்தை விருப்பத்துடன் கொடுத்து, சங்குகள் வாழ்கின்ற கடலிலே
அணையிட்டது போல, ஒப்பந்தம் செய்த வகையில் (மனத்தைப்)
போக விட்டு,

அச்சமே படுத்து கட்ட ஏழ் பிறப்பு விடவே தான் கற்ற நூல்
உகக்க வெட்கமே செறித்த கட்டனேன் நினைப்பது ஒரு
நாளே
... பயத்தையே உண்டு பண்ணுகின்ற, கஷ்டமான ஏழு
பிறப்புக்களையும் விட்டுத் தாண்டுவதற்கு, கற்ற சிவ நூல்களில்
மகிழ்ச்சி கொள்ள வெட்கமே நிறைந்துள்ள, துன்பங்கள் பீடித்த
நான் உன்னை நினைப்பதாகிய ஒரு நாள் வருமோ?

இச்சையே செலுத்தி உச்சி தாள் பலிக்கும் இட்ட மால்
அவற்கு மருகோனே
... (வாமனராக வந்து) தமது விருப்பத்தைக்
கூறி, (மகாபலி சக்ரவர்த்திக்கு அவனுடைய) தலையில் தமது பாதத்தை
வைத்த திருமாலுக்கு மருகனே,

எற்று வாரிதிக்குள் முற்றி நீள் பொருப்பை எக்கி நேர் மடித்த
இளையோனே
... அலை வீசும் கடலுக்குள் பரந்து நீண்டிருந்த
(சூரனின்) எழு கிரியை வேலால் ஊடுருவச் செலுத்தி நன்கு அழித்த
இளையவனே,

மெச்சவே புடைத்த முத்தம் ஆர் தனத்தி மிக்க வாள் படைத்த
விழியாலே
... புகழும்படியாக பருத்து எழுந்துள்ள, முத்து மாலை
நிறைந்த, மார்பினள், கூர் மிகுந்த வாளாயுதத்தைப் போன்ற தன்
கண்களைக் கொண்டு,

வெட்டும் மா மறத்தி ஒக்கவே இருக்க வெற்றி வேல் எடுத்த
பெருமாளே.
... (உயிர்களின் வினையை) வெட்ட வல்ல சிறந்த
வேடுவச்சி ஆகிய வள்ளி கூடவே இருக்க, வெற்றி வேலைத்
திருக்கையில் ஏந்திய பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 3.604  pg 3.605 
 WIKI_urai Song number: 1255 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song


Song 1256 - nacchu vALvizhi (Common)

nacchuvAL vizhikko detRiyE thanaththai
     naththuvAr sukaththil ...... nalamAka

nattamA manaththai yittamE koduththu
     naththuvAzh kadaRku ...... LaNaipOlE

kacchamE seluththi yacchamE paduththu
     kattaEzh piRappu ...... vidavEthAn

katRanU lukakka vetkamE seRiththa
     kattanE ninaippa ...... thorunALE

icchaiyE seluththi yucchithAL palikku
     mittamA lavaRku ...... marukOnE

etRuvA rithikkuL mutRineeL poruppai
     yekkinEr madiththa ...... iLaiyOnE

mecchavE pudaiththa muththamAr thanaththi
     mikkavAL padaiththa ...... vizhiyAlE

vettumA maRaththi yokkavE yirukka
     vetRivE leduththa ...... perumALE.

......... Meaning .........

nacchu vAL vizhi ko(N)du etRiyE thanaththai naththuvAr sukaththil nalamAka: With eyes comparable to poison and the sword, these whores attack men for the sake of money; desiring carnal pleasure with them,

natta mA manaththai ittamE koduththu naththu vAzh kadaRkuL aNaipOlE kacchamE seluththi: I willingly surrendered my mind to them, which was already buried; like building a dam across the sea where conch-shells are abundant, I have let my mind wander as if in accordance with a pledged agreement with these whores;

acchamE paduththu katta Ezh piRappu vidavE thAn katRa nUl ukakka vedkamE seRiththa kattanEn ninaippathu oru nALE: I am terrified when I think how I am going to cross the tough and insurmountable seven lives; I am ashamed to express happiness about the Saivite treatises that I have learnt; I am afflicted by miseries; will there be a day when I shall think of You, Oh Lord!

icchaiyE seluththi ucchi thAL palikkum itta mAl avaRku marukOnE: (Coming as VAmanA) He expressed His desire (to emperor MahAbali) and placed His foot on his head; and You are the nephew of that Lord VishNu!

etRu vArithikkuL mutRi neeL poruppai ekki nEr madiththa iLaiyOnE: Under the wavy seas were hidden the seven long and wide mountains (of SUran); and You wielded Your spear piercing those mountains and destroyed them, Oh Young One!

mecchavE pudaiththa muththam Ar thanaththi mikka vAL padaiththa vizhiyAlE: She is bestowed with famous and large bosom, covered by the pearl necklace; using her sharp sword-like eyes,

vettum mA maRaththi okkavE irukka vetRi vEl eduththa perumALE.: that VaLLi, the great damsel of the hunters, is capable of severing the past deeds of lives; with her by Your side, You hold the victorious spear in Your hallowed hand, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 1256 nachchuvAL vizhi - common

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]