திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 1194 முனை அழிந்தது (பொதுப்பாடல்கள்) Thiruppugazh 1194 munaiazhindhadhu (common) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தனன தந்தன தாத்தன தந்தன தனன தந்தன தாத்தன தந்தன தனன தந்தன தாத்தன தந்தன ...... தனதான ......... பாடல் ......... முனைய ழிந்தது மேட்டிகு லைந்தது வயது சென்றது வாய்ப்ப லுதிர்ந்தது முதுகு வெஞ்சிலை காட்டிவ ளைந்தது ...... ப்ரபையான முகமி ழிந்தது நோக்குமி ருண்டது இருமல் வந்தது தூக்கமொ ழிந்தது மொழித ளர்ந்தது நாக்குவி ழுந்தது ...... அறிவேபோய் நினைவ யர்ந்தது நீட்டல் முடங்கலு மவச மும்பல ஏக்கமு முந்தின நெறிம றந்தது மூப்பு முதிர்ந்தது ...... பலநோயும் நிலுவை கொண்டது பாய்க்கிடை கண்டது சலம லங்களி னாற்றமெ ழுந்தது நிமிஷ மிங்கினி யாச்சுதென் முன்பினி ...... தருள்வாயே இனைய இந்திர னேற்றமு மண்டர்கள் தலமு மங்கிட வோட்டியி ருஞ்சிறை யிடுமி டும்புள ராக்கதர் தங்களில் ...... வெகுகோடி எதிர்பொ ரும்படி போர்க்குளெ திர்ந்தவர் தசைசி ரங்களு நாற்றிசை சிந்திட இடிமு ழங்கிய வேற்படை யொன்றனை ...... யெறிவோனே தினைவ னங்கிளி காத்தச வுந்தரி அருகு சென்றடி போற்றிம ணஞ்செய்து செகம றிந்திட வாழ்க்கைபு ரிந்திடு ...... மிளையோனே திரிபு ரம்பொடி யாக்கிய சங்கரர் குமர கந்தப ராக்ரம செந்தமிழ் தெளிவு கொண்டடி யார்க்குவி ளம்பிய ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... முனை யழிந்தது மேட்டி குலைந்தது ... தைரியம் அற்றுப் போக, நானெனும் ஆணவம் அகல, வயது சென்றது வாய்ப்ப லுதிர்ந்தது ... வயது மிகவும் ஏற, வாயிலுள்ள பற்கள் உதிர, முதுகு வெஞ்சிலை காட்டி வளைந்தது ... முதுகு வளைந்த வில்லைப் போல் கூன் விழ, ப்ரபையான முகம் இழிந்தது ... ஒளி வீசிய முகம் மங்கிப்போய் தொங்க, நோக்கும் இருண்டது ... பார்வையும் இருளடைய, இருமல் வந்தது தூக்கமொ ழிந்தது ... இருமல் வந்து, தூக்கம் இல்லாமல் போக, மொழித ளர்ந்தது நாக்குவி ழுந்தது ... பேச்சு தளர, நாக்கு செயலற்று விழ, அறிவேபோய் நினைவ யர்ந்தது ... புத்தி கெட்டுப்போய் ஞாபக மறதி ஏற்பட, நீட்டல் முடங்கலும் ... காலை நீட்டுவதும் மடக்குவதுமாக ஆகி, அவசமும்பல ஏக்கமும் உந்தின ... மயக்கமும், பல கவலைகளும் ஏற்பட்டு, நெறிமறந்தது மூப்பு முதிர்ந்தது ... ஒழுக்கவழி மறந்து, கிழத்தன்மை முற்றி, பலநோயும் நிலுவை கொண்டது ... பலவித வியாதிகள் நிலையாகப் பீடிக்க, பாய்க்கிடை கண்டது ... பாயில் நிரந்தரப் படுக்கையாகிவிட, சலமலங்களின் நாற்றமெழுந்தது ... மல மூத்திரங்களின் துர்நாற்றம் எழ, நிமிஷ மிங்கினி யாச்சுது ... இன்னும் ஒரே நிமிஷத்தில் எல்லாம் ஆயிற்று என் முன்பு ... (உயிர் போய் விடும்) என்று உலகத்தார் பேசுவதற்கு முன்பு, இனிது அருள்வாயே ... நல்லவிதமாக அருள்வாயாக. இனைய இந்திர னேற்றமும் ... வருந்துகிற இந்திரனின் மேன்மையும், அண்டர்கள் தலமு மங்கிட வோட்(டி) ... தேவர்கள் உலகமும் ஒளி மங்கிட அவர்களை ஓட்டி, இருஞ்சிறையிடும் இடும்புள ராக்கதர் தங்களில் ... கடும் சிறையிடும் கொடுமையான அரக்கரில் வெகுகோடி எதிர்பொரும்படி போர்க்குள் எதிர்ந்தவர் ... பலகோடி பேர் எதிரே சண்டையிட, போர்க்களத்தில் எதிர்த்தவர்களின் தசைசிரங்களு நாற்றிசை சிந்திட ... சதைகளும் தலைகளும் நாலா பக்கமும் சிதறிட இடிமுழங்கிய வேற்படையொன்றனை எறிவோனே ... இடி போல் ஒலித்த வேலாயுதத்தை வீசியவனே, தினைவனங்கிளி காத்த சவுந்தரி ... தினைப்புனத்தில் கிளிகள் வாராமல் காத்த அழகி வள்ளியின் அருகு சென்றடி போற்றிமணஞ்செய்து ... பக்கத்தில் சென்று அவளது திருவடியைப் போற்றி மணந்து செகமறிந்திட வாழ்க்கை புரிந்திடும் இளையோனே ... உலகறிய வாழ்க்கை நடத்தும் இளையோனே, திரிபுரம்பொடி யாக்கிய சங்கரர் குமர ... திரிபுரத்தை எரித்துச் சாம்பலாக்கிய சங்கரர் மகனே, கந்தபராக்ரம ... கந்தா, பராக்கிரம மூர்த்தியே, செந்தமிழ் தெளிவு கொண்டு அடியார்க்கு விளம்பிய பெருமாளே. ... செந்தமிழை தெளிவோடு அடியார்க்கு உபதேசித்த பெருமாளே. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 3.482 pg 3.483 pg 3.484 pg 3.485 WIKI_urai Song number: 1193 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
'குருஜி' ராகவன் அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள் 'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை & சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) Sri Maha Periyava Thirupugazh Sabha & Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) | பாடகர் பக்கத்திற்கு to singer's page |
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) இப்பாடலின் பொருள் Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) meanings in Tamil |
Song 1194 - munai azhindhadhu (common) munai azhindhadhu mEtti kulaindhadhu vayadhu sendradhu vAyppal udhirndhadhu mudhugu venjchilai kAtti vaLaindhadhu ...... prabaiyAna mukam izhindhadhu nOkkum iruNdadhu irumal vandhadhu thUkkam ozhindhadhu mozhi thaLarndhadhu nAkku vizhundhadhu ...... aRivEpOy ninai vayarndhadhu neettal mudangalum avasamum pala Ekkamu mundhina neRi maRandhadhu mUppu mudhirndhadhu ...... palanOyum niluvai koNdadhu pAykkidai kaNdadhu jala malangaLi nAtram ezhundhadhu nimisham ingini yAchchudhen munbinidh ...... aruLvAyE inaiya indhiran Etramum aNdargaL thalamu mangida Ottiyirun siRai idum idumbuLa rAkkadhar thangaLil ...... vegukOdi edhir porumpadi pOrkkuL edhirndhavar dhasai sirangaLu nAtrisai chinthida idi muzhangiya vERpadai ondranai ...... eRivOnE thinaivanang kiLi kAththa savundhari arugu sendradi pOtri maNanj seydhu jegam aRindhida vAzhkkai purindhidum ...... iLaiyOnE thiripuram podi Akkiya sankarar kumara kandha parAkrama senthamizh theLivu koNd adiyArkku viLambiya ...... perumALE. ......... Meaning ......... munai azhindhadhu mEtti kulaindhadhu: My courage was destroyed and my ego shattered; vayadhu sendradhu vAyppal udhirndhadhu: my age was advanced and all my teeth had fallen; mudhugu venjchilai kAtti vaLaindhadhu: my back was like a bow showing a big hunch; prabaiyAna mukam izhindhadhu nOkkum iruNdadhu: my bright face was crestfallen and vision blurred; irumal vandhadhu thUkkam ozhindhadhu: I coughed uncontrollably and lost my sleep altogether; mozhi thaLarndhadhu nAkku vizhundhadhu: my speech slurred and tongue became inactive; aRivEpOy ninai vayarndhadhu: my grasping power was gone and so was my memory; neettal mudangalum: I was simply stretching my legs and bending my knees; avasamum pala Ekkamu mundhina: dizziness and worries took control of me; neRi maRandhadhu mUppu mudhirndhadhu: I took leave of my discipline and old age took over; palanOyum niluvai koNdadhu pAykkidai kaNdadhu: many diseases plagued me and I was bedridden; jala malangaLi nAtram ezhundhadhu: my own faeces and urine emitted an unbearable stench; nimisham ingini yAchchudhen munbu: and before people say that my time will be over in a minute, inidh aruLvAyE: You have got to do good to me in that very last minute! inaiya indhiran Etramum aNdargaL thalamu mangida: IndrA was humiliated and the DEvAs lost their land Ottiyirun siRai idum idumbuLa rAkkadhar: when they were persecuted and imprisoned by asuras with vengence. thangaLil vegukOdi edhir porumpadi pOrkkuL edhirndhavar: From the oppressing multitude, millions of asuras advanced with large armies to fight a war with You; dhasai sirangaLu nAtrisai chinthida: and the enemies' heads and flesh pieces were scattered all around idi muzhangiya vERpadai ondranai eRivOnE: when You threw Your spear with a thundering noise! thinaivanang kiLi kAththa savundhari: There was this beautiful girl, VaLLi, who was guarding the millet fields from the parrots; arugu sendradi pOtri maNanj seydhu: You went towards her, prostrated at her feet and later married her; jegam aRindhida vAzhkkai purindhidum iLaiyOnE: and Your married life with her was an open book before the whole world, Oh Young One! thiripuram podi Akkiya sankarar kumara: You are the son of Sankara who burnt down Thripuram and reduced it to ashes. kandha parAkrama: Oh KandhA, Oh valorous One! senthamizh theLivu koNd adiyArkku viLambiya perumALE.: You taught beautiful Tamil with all clarity to Your devotees, Oh Great One! |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |