பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/485

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது திருப்புகழ் உரை 477 ஞாபகம் என்பது சோர்வடைந்து (மறதி வந்துவிட்டது. காலை நீட்டலும், (முடங்கல்) மடக்குதலும் ஆய், (அவசமும்) மயக்கமும், பலவிதமான (ஏக்கமும்) கவலைகளும் முற்பட்டன; நெறி ஒழுக்க நெறியும் மறந்து போய்விட்டது. மூப்பு - கிழத்தன்மை (முதுமையின் கொடுமை) முற்றிவிட்டது; பலவிதமான நோய்களும் . நிலையாகப் பீடித்து நின்றன; பாயிற்படுக்கை விடாது பிடித்துக்கொண்டது, மூத்திரம், மலம் இவைகளின் துர்நாற்றம் எழுந்து விட்டது. ஒரே நிமிஷம், இங்கு இனி அவ்வளவுதான் (ஆச்சுது) உயிர் பிரியும் வேளை வந்துவிட்டது - என் முன்பு - என்று (உலகோர்) பேசுவதன் முன்பாக (இனிது) நான் சுகம் பெறும்படி அருள்புரிவாயாக (இணைய இந்திரன்) - இந்திரன் இணைய இந்திரன் வருந்த (அவனது) ஏற்றமும் - மேன்மையும், தேவர்களின் ஊராம் பொன்னுலகமும் (மங்கிட) ஒளியிழந்து மங்கும்படி, (ஒட்டி) அவர்களை வெருட்டி ஒட்டிவிட்டு, (சிறையிடும்) அவர்களைப் பெரிய சிறையில் அடைவித்த (இடும்பு-உள்ள), கொடுஞ் செயலைக் கொண்ட அரக்கர்களின் பலகோடியர், நேரே சண்டை செய்யப் போரில் எதிர்த்தவர்களின் சதையும், சிரங்களும் நாலா திசையும் சிதறிச் சிந்த இடிபோல ஒலித்த வேலாயுதமாகிய ஒப்பற்ற ஒரு படையைச் செலுத்தினவனே! திணைப்புனத்திற் கிளிகள் வராது காத்த அழகியாகிய வள்ளியின் சமீபத்திற் போய் அவளது திருவடியைத் துதித்து, அவளைத் திருமணஞ் செய்து உலகெலாம் அறிய அவளுடன் வாழ்க்கை புரிந்திடும் இளையோனே! திரிபுரத்தை எரித்துப் பொடிசெய்த சங்கரரின் குமரனே! கந்தனே பராக்ரம மூர்த்தியே செந்தமிழைத் தெளிவுடன் அடியார்க்குப் போதித்த பெருமாளே! (அருள்வாயே) -